IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ
You are here: Home / பொதுவானவை / ரமலான் நோன்பு நாள் -19 ஜெபக்குறிப்புகள்

ரமலான் நோன்பு நாள் -19 ஜெபக்குறிப்புகள்

July 31, 2013

பெண்களின் கல்வியிலே விரக்தி

கடந்த இருபது வருடங்களாக இஸ்லாமிய பெண்களின் கல்வியானது பின்னடைவை நோக்கி சென்றுள்ளதோடு, விரக்தியின்pமித்தம் முன்னோக்கி போக முடியாது காணப்பட்டது.இடத்திற்கு இடம் குடும்பத்திற்கு குடும்பம் அது
மாறுவது போல இஸ்லாமிய பெண்களின்கல்வி முறையானது மாற்றமடைந்துள்ளது.1990 களில் தலிபான்களின் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது, கற்றுகொள்ள வேண்டும் என்ற பெண்களின் ஆதிக்கத்திற்கு பாரிய எதிர்ப்பு ஒன்று ஏற்பட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலே காணப்பட்ட தொழில்சார் பெண்கள் தங்களது தொழிலை விட்டு விட்டார்கள். பாடசாலைக்கு செல்வது பெண் பிள்ளைகளுக்கு தடை செய்யப்பட்டது. இஸ்லாமிய பெண்களுக்கு வாசிப்பதற்கு மாத்திரம் தெரிந்திருந்தால் போதும் அவர்கள் எழுதுவதற்கு எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்ற பொதுவான ஒரு அடிமைத்தனம் காணப்பட்டது. 2006 செப்டம்பர் மாதம், ஐக்கிய நாடுகளின் கல்வி விஞ்ஞான மற்றும் கலாச்சார அமைப்பின் அறிக்கையின் படியாக (UNESCO) பெரியோரின் கல்வி வீதமானது அந்நாட்டிலுள்ள ஆண்களின்
கணக்கெடுப்பின்படி காணப்பட்டது என்றார்கள். எகிப்திலே 59.4% கற்றுள்ளார்கள் என்றும், மத்திய கிழக்கு நாடுகளான மொரோக்கோ, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் யெமன் வாசிப்பு வீதம் குறைந்து செல்லும்போது அதன் சதவீதமும் குறைந்து செல்கிறது: ஐக்கிய நாடுகளின் கலாச்சார, விஞ்ஞான மற்றும் கலாச்சார அறிக்கையின்படியாக சில இடங்களிலே, கற்றுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் இடையிலான் வித்தியாசம் 90% விட அதிகமாகும். எவ்வாறாயினும், தற்போது அது சற்று அதிகரித்து உள்ளது. ஈராக் மற்றும் ஐக்கிய அரபு ராஜ்யத்திலுள்ள மாணவர்களில் பெரும்பாலானோர் பெண்களாவார்கள்.

education-issues-p28-30-days-prayer-200x300

துருக்கி, மலேசியா, மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலே பெண்களின் கல்வியானது ஒரு பிரச்சினையாக எழுந்துள்ளது. சில நாடுகளில் இன்னும் சண்டைகள் இதற்காக நடந்துகொண்டிருக் கின்றன. அண்மையிலே ஈரானிலே ஒரு பெண் 70 மொழிகளிலே பட்டம் வென்றுள்ளார் என்று அறிந்து அவரை தடை செய்துள்ளார்கள். அனேக இஸ்லாமியர் அருமையான எதிர்காலத்தை நோக்கி நகர்கிறார்கள். நீலொப்பர் ஹராம் என்பவர் சமூக தலைவர்கள் மற்றும் நவீன கருத்துக்களை உருவாக்குகிறவர்கள் தங்களது அவதானத்தை இந்த பிரச்சினை மீது செலுத்தும் வரையிலே, அனைவருக்கும் அநேக சமூக விரக்திகள் மற்றும் வருத்தங்கள் காத்திருக்கின்றன. தாய்மார், மகள்மார்கள் மற்றும் சகோதரிகள் பின்பாக காணப்பட தகப்பன்மார், மகன்மார் மற்றும் சகோதரராலே முன்னோக்கி போக முடியுமா?

ஜெப குறிப்புகள்

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிலுள்ள மகளிர் பாடசாலைகளை கட்ட எடுக்கும் முயற்சிக்காக ஜெபம் செய்வோம். பிள்ளைகளை பாடசாலையிலே வைத்து கைதுசெய்கிற மற்றும் பயமுறுத்துகிற நடவடிக்கைகளுக்காகவும் அவர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபம் செய்வோம்.

இஸ்லாமிய நாடுகளிலே பெண்களின் கல்விக்காக வாதாடுகிற ஒவ்வொருவருக்கும் அவர்களின் பாதுகாப்பு தங்களது காரியங்களை முன்னிலைப்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் மற்றும் தைரியம் கிடைக்கும்படியாக ஜெபம் செய்வோம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network