
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு மீண்டும் உங்களை இந்த பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.மவ்லவி பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்களால் எழுதப்பட்ட “இதுதான் பைபிள்” என்ற புத்தகம் பைபிளை குறித்த பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் பல வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டு இருந்தது.அந்த புத்தகத்துக்கான பதில்களை அளிக்கும் வாய்ப்பை கர்த்தர் இப்பொழுது அளித்துள்ளார்.இந்த புத்தகத்தின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு நாம் தெளிவான பதில்களை சொல்லி “இதுதான் பைபிள்” பதில்கள் முதல் பாகம் டிவிடி வெளியிட ஆண்டவர் கிருபை செய்துள்ளார்.நிச்சயம் அநேக தேவ பிள்ளைகளுக்கு இந்த டிவிடி உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம்.மேலும் இது போன்ற கேள்விகளை எழுப்புகிற இஸ்லாமிய நண்பர்களும் இனி சிந்தித்து கேள்விகளை கேட்பார்கள் என்று விசுவாசிக்கிறோம்.இந்த புத்தகத்தின் மீதமுள்ள கேள்விகளுக்கான பதில்கள் இன்னும் ஓரிரு பாகங்களாக வெளிவரும்.குறிப்பாக இரண்டாம் பாகம் டிவிடி மிக விரைவில் வெளியாகும் என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
இந்த முதலாம் பாகம் “இதுதான் பைபிள்” பதில்கள் டிவிடியை புதுவாழ்வு அசம்பளீஸ் ஆப் காட் சபையின் போதகர் ஆலன் ஜான் அவர்கள் ஜெபித்து வெளியிட்டார்கள்.இந்த கூட்டத்தில் பல தேவ ஊழியர்களும் ,விசுவாசிகளும் கலந்துகொண்டனர்.இன்னும் சில நாட்களில் இந்த வீடியோ நமது இணையதளத்திலும் வெளிடப்படும்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உங்களனைவரோடும் இருப்பதாக.
sir when is the release of part 2????????????? Partone is amazing………..
I am sighting you cd
I want part 1cd
Wonderful message about women in The Bible. I’m watching this in my I pad from Barbados, West Indies. Till today in North America, Canada they are giving six months maternity leave not only for the wife but for the husband as well to take care of her! Prayers and Blessings to preach the truth from The Living Word of God!
@admin, When will you uploade the video to your website. It is very difficult to find the CD in anywhere. If you are trust in your own words means upload it immediately.