இதுதான் பைபிள் பதில்கள் :டிவிடி வெளியீடு

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே இந்த அறிவிப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.பரிசுத்த வேதாகமத்துக்கு எதிராக பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய ஒரு புத்தகத்தை மவ்லவி பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்கள் பல வருடங்களுக்கு முன்பே எழுதியுள்ளார்கள்.அதன் பல பதிப்புகள் வெளிவந்துவிட்டது.அதில் பல தவறுகளையும்,தவறான புரிந்துகொள்ளுதலையுமே ஆதாரமாக கொண்டு எழுதப்பட்ட புத்தகமாகவே உள்ளது.எனவே அந்த புத்தகத்திற்கு பதில் கொடுக்க வேண்டிய முக்கியமான பொறுப்பு கிறிஸ்தவர்களாகிய நமக்கு உள்ளது.எனவே இந்த புத்தகத்திற்கான முதல் பாகம் பதில்கள் டிவிடியாக வெளிவரவுள்ளது.இதற்காக ஜெபம் செய்துகொள்ளுங்கள்.இதை தொடர்ந்து இந்த புத்தகத்தில் உள்ள மற்ற கேள்விகளுக்கான பதில்கள் சீக்கிரம் வெளியிடப்படும்.அதற்கான தேவ ஒத்தாசைக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்.ஆண்டவருடைய கிருபையும்,சமாதானமும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக….

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.