• அரேபிய உலகிலுள்ள விசுவாசிகளுக்கு பாதுகாப்பு,
தைரியம் மற்றும்மத சுதந்திரம் கிடைக்கவும்
ஜெபியுங்கள்.
அரேபியியிய உலகின் சவால்
எப்பொழுதாவது நீங்கள் மிகப்பெரிய புது வருடத் தீர்மானம் செய்து –அதனை நிறைவேற்றாமல் விட்டது உண்டா? 1800ம் ஆண்டுகளின் முடிவில் கல்லூரி வளாகங்களிலும், மாணவர் கருத்தரங் களிலும் கேட்கப்பட்ட சத்தம், “இந்த தலைமுறையிலேயே உலகத்தை சுவிசேஷத்தினால் சந்திக்க வேண்டும்” என்பதே. 1900ம் ஆண்டுகளின் இறுதியிலும் இதைப் போன்றே: “ 2000ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மக்கள் கூட்டத்திற்கும் ஒரு சபை மற்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் நற்செய்தி” என்ற கதறல் எழுப்பப்பட்டது. இருப்பினும் மிகப் பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் இயேசு கிறிஸ்துவின் இறுதிக் கட்டளை 1900ம் ஆண்டுக்குள்ளாகவோ அல்லது 2000மாவது ஆண்டுக்குள்ளாகவோ நிறைவேற்றி முடிக்கப்படவில்லை. ஆராய்ச்சியாளர்களின் கணிப்பின்படி 1900ம் ஆண்டில் சுமார் 90 கோடி மக்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றியோ, கிறிஸ்தவத்தைப் பற்றியோ அல்ல நற்செய்தியைப் பற்றியோ அறிந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லாதிருந்தது. 2000ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக மாறி 180 கோடி பேராயிற்று. இன்றைக்கு இது 200 கோடிக்கும் மேலே, அதில் அதிகமானவர்கள் முஸ்லீம்கள். நற்செய்தியை விரும்பாத ஒரு உலகிற்கு, நற்செய்திக்கு எதிராக நிற்கிற ஒரு எதிரிக்கு முன்பாக அதை கொண்டு வருவது என்பது மிகப் பெரிய ஒரு சவால். நாம் எவ்விதமாக நடைமுறையில் இச்சவாலை சந்திக்க முடியும் ? ஒரு தீர்மானத்தை செய்வதற்கான சவாலையல்ல மாறாக அதனை நிறைவேற்று வதற்கான சவாலுக்காக நாம் ஆயத்தப்பட வேண்டும்.
ஜெபக்குறிப்புகள்
• ஒரு குழுவில் அங்கத்தினர் ஆகுங்கள் ஒரு மிஷன் தலைவர் இவ்விதம் கூறினார்,”நாம் எங்கு போகிறோம் என்பதைவிட யாரோடு போகிறோம் என்பதைக்குறித்து அதிகமாகக் கவலை கொள்ள வேண்டும். ஒரு ஆப்பிரிக்க பழமொழி சொல்லுகிறது,’வேகமாகச் செல்ல வேண்டுமானால் தனியாகப் போ, அதிக தூரம் போக வேண்டுமானால் மற்றவரோடு இணைந்து செல்”. • விசுவாசம்,நம்பிக்கை, அன்பு ஆகியவற்றில் விடாமுயற்ச்சியுடன் இருங்கள். இன்றைக்கு நீங்கள் இஸ்லாமிய உலகிற்காக ஒரு பெரிய குழுவோடு சேர்ந்து ஜெபிக்கிறீர்கள். சிறப்பான ஜெபம் இல்லாமல் இவ்வுலகம் இரட்சிக்கப்பட முடியாது. ஆனால் ஜெபமானது தேவன் நேசிக்கிற இஸ்லாமிய உலகிலுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேல் விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்போடு கூடியதாக இருக்க வேண்டும். ஒரு தேவ ஊழியர், “நான் 5% இஸ்லாமிய உலகம் கிறிஸ்து வண்டை வர ஜெபிக்கிறேன்” என்று கூறினார். ஏன் 5%என்று கேட்டபோது, “தேவன் எனக்கு 5% க்கு விசுவாசம் கொடுத்திருக்கிறார், எனவே நான் அதற்காக ஜெபிக்கப் போகிறேன், அது நிகழும் வரை
அதன் அடிப்படையில் செயல்படப் போகிறேன்” என்றும் கூறினார்.
• ஜெபியுங்கள்:
இஸ்லாமிய உலகில் ஊழியம் செய்து கொண்டிருக்கும் குழுக்கள் ஒருவரையொருவர் நேசிக்கும் படியாக ஜெபியுங்கள்.
ஏனென்றால் “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாய் இருந்தால்,அதினால் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் அறிந்து கொள்ளுவார்கள்” (யோவான் 13:35), “பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்” (1 யோ.4:18).
• ஜெபியுங்கள்
சவாலகள் மத்தியில் தாழ்மையுடனும் ,விடடுக்கொடுக்கும்தன்மையுடனும் நடந்து கொள்ளவும், தேவனுடைய திட்டங்களை அறிந்து கொள்ள பார்க்கும் கண்களும், கேட்கும் செவிகளும் உண்டாகவும் தேவனுடைய கிருபைக்காக ஜெபியுங்கள்.
ENGLISH : http://www.30-days.net/muslims/muslims-in/mid-near-east/overcoming-the-muslim-world-challenge/
Leave a Reply