நூல் அறிமுகம் :கிழியுண்ட திரை

அன்பு நண்பர்களே இந்த சகோதரியின் அற்புத சாட்சியின் புத்தகத்தின் மூலமாக உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.கீழே அவருடைய சாட்சியின் சுருக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த புத்தகம் எல்லா முண்ணனி கிறிஸ்தவ புத்தக கடைகளிலும் கிடைக்கும். 

இந்த சகோதரியின் சாட்சி ஆங்கிலம் மொழியில் இலவசமாக டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும்.

வீடியோவில் அவருடைய  சாட்சி   :

கிழியுண்ட திரை: சகோதரி குல்சான் எஸ்தர்

ஒரு வைராக்கியமான செல்வச் செழிப்புள்ள முகமதியக் குடும்பத்தில் பிறந்தவர் குல்ஷான் ஃபாத்திமா.ஆனால் அவர் ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோது ,காய்ச்சலின் காரணமாக அவரது இடது காலும்,இடது கையும் செயலிழந்து போயின.
மருத்துவர்களால் அவளைச் குணப்படுத்த முடியவில்லை.அவளது தகப்பனார் அவளை ஹஜ் பயணத்துக்கு அழைத்துச் சென்றார்.தான் சுகம் பெறாததைக் கண்டு குல்ஷான் மனம் தளந்து போனார்.இரண்டு ஆண்டுகள் கழித்து அவரது தகப்பனார் இறந்து போனார்.மனகிலேசம் கொண்ட குல்ஷான் மரித்துபோக விரும்பினார்.அந்த நேரத்தில் ஆண்டவர் அவரை சந்தித்தார்.அவரோடு பேச ஆரம்பித்தார்.தொடர்ந்து மூண்றாண்டுகள் குல்ஷான் நம்பிக்கையோடு இயேசுவானவரை நோக்கி ஜெபித்துவந்தாள்.அவரது 19 ஆவது வயதில் அவர் பூரணமாக தெய்வீக சுகம் பெற்றார்.ஆண்டவர் அவரை ஊழியத்துக்கு அழைத்தார்.

வீட்டையும்,சொத்துக்களையும் உதறிய அவர் குல்ஷான் எஸ்தர் என்ற பெயரில் ஞானஸ்தானம் பெற்றார்! அதன் பின் உறவினர்கள் அவருக்கு கொடுத்த சோதனைகள் கொஞ்சநஞ்சமல்ல.அவர் வேலையில் இருந்து விரட்டப்பட்டார்.சிறையில் அடைக்கப்பட்டார்,துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டார்.

அப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் குல்ஷான் எஸ்தர் பின்வாங்கவில்லை.திடவிசுவாசத்தோடு முழு நேர ஊழியத்துக்கு தன்னை ஒப்புகொடுத்தார்.எதிர்புகள் நிறைந்த ஒரு சமுதாயத்தில் தேவன் வல்லமையான அற்புத அடையாளங்களுடன் குல்ஷான் எஸ்தரை பயன்படுத்தி வருகிறார்.

3 thoughts on “நூல் அறிமுகம் :கிழியுண்ட திரை”

  1. Praise The Lord Jesus. I am preying every time to Muslim people. Jesus answer me. Thanks Lord. Thanks Jesus.

    Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.