பில்குயிஸ் ஷேக் என்பவர் பாக்கிஸ்தானில் உயர்குடி இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஒரு சகோதரி.உயர் பதவி வகித்து வந்த இவரது கணவர் கைவிட்ட காரணத்தால் மன சாந்தியடைய பகட்டான உலக வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டு கிராமத்தில் உள்ள தன் குடும்பப் பண்ணைவீட்டில் குடி புகுந்தார்.அச் சமயம் இயேசு கிறிஸ்துவை அவர் வாழ்க்கையில் சந்தித்த விதமும்,அதன்பின் அவரைத் தன் இரட்சகராகத் தெரிந்துகொண்டதும் ஒரு ஆச்சரியமே.
பகைமை பாராட்டும் ஒரு இஸ்லாமிய நாட்டில் உற்றார்,பெற்றோர்,நண்பர்கள்,வாழ்க்கை இன்பங்கள் ஆகிய அனைத்தையும் துறந்து,தன் வாழ்வில் கண்டுகொண்ட கிறிஸ்தவ விசுவாசத்தினை வெளியாங்கமாக அறிக்கை பண்ணும் இச் சகோதரியின் ஆர்வம்,தீரம்,துணிவு முதலிய அருங்குணங்கள் இந்நூலை வாசிக்கும் அன்பர்களின் உள்ளத்தில் உவகையையும்,எழுப்புதலையும் அளிக்கும் என்பது உறுதி..
இந்த நூல் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்து முன்னனி கிறிஸ்தவ புத்தக நிலையங்களிலும் கிடைக்கிறது.
இந்த புத்தகத்தின் உருது மொழி புத்தகம் இங்கு கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
நூல் பெயர் :பிதாவே என்று அழைக்க துணிந்தேன்
வெளியீடு : சுவிசேஷ ஊழிய நூல் நிலையம் (ELS),
வேப்பேரி நெடுஞ்சாலை,சென்னை-6000007
புத்தகம் தேவை (தமிழில் வேண்டும்)
தொடர்புக்கு:7200949000
Praise the lord.. I want this book..