கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே இன்றைக்கு தங்களுடைய மார்கத்தை உயர்வானதாக காட்டும்படிக்கு சில இஸ்லாமிய அறிஞர்கள் இயேசு கிறிஸ்துவை பற்றியும் அவருடைய அப்போஸ்தலர்கள் பற்றியும் எழுப்பும் பல்வேறு அவதூறுகளுக்கு நாம் தொடர்ந்து பதில்களை பார்த்து வருகிறோம்.அந்த வரிசையில் இஸ்லாமிய அறிஞர்களால் அடிக்கடி வைக்கப்படும் இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு இந்த கட்டுரையில் பதிலை பார்க்க போகிறோம்.
1) லூக்கா 22:36 அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்@ பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.
2) மத்தேயு 10:34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்,சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
மேலே உள்ள இந்த இரண்டு வசனங்கள் தான் அவர்களால் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையாக இருக்கிறது.இதில் அவர்கள் வைக்கும் வாதம் என்னவென்றால், முதலாவது இயேசு கிறிஸ்து வன்முறையை போதித்தார்.அவர் தன் சீடர்களிடம் பட்டயத்தை(வாளை) வைத்து போரிடும் படி சொன்னார்.அதற்கு ஆதாரமாக லூக்கா 22:36 வசனம் உள்ளது என்பது அவர்களுடைய வாதம்.
அடுத்தது இயேசு கிறிஸ்து சமாதானத்தை போதிக்க வந்தார் என்று கிறிஸ்தவர்கள் தவறாக போதிக்கிறார்கள்.அப்படி இல்லை இயேசு சமாதானத்தை போதிக்கவில்லை. அதற்கு மத்தேயு 10:34ம் வசனம் ஆதாரமாக உள்ளது என்பது அவர்களின் இன்னொரு வாதமாகும்.
இந்த இரண்டு வசனங்களையும் கிறிஸ்தவர்களாகிய நாம் தெளிவாக புரிந்துள்ளோம்.இந்த வசனங்கள் எந்த வகையிலும் வன்முறையையோ அல்லது சமாதான குறைவையோ சுட்டிக்காட்டும் வசனங்கள் அல்ல.இந்த இரண்டு வசனங்களும் வேறுபட்ட சூழ்நிலைகளில் சில அத்தியாவசிய காரியங்களை புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இயேசு கிறிஸ்துவால் தம் சீடர்களுக்கு சொல்லப்பட்டவைகளாகும்.ஆனால் தங்களை உயர்வாக காட்டிக்கொள்ள வேறு வழி தெரியாததால் இதுபோன்ற ஒன்றுக்கு உதவாத குற்றச்சாட்டுகளை எழுப்பி தங்களின் அறிவுத்திறமையை!?! உலக்குக்கு அடையாளம் காட்டி வருகின்றனர்.
முதலாவது,
லூக்கா 22:36 அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்@ பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.
தனியாக குறிப்பிடப்படும்போது வன்முறையும், பட்டயமும் ஒருவேளை அவர்கள் சொல்லுவது உண்மை போல் காணப்படலாம். அந்த வசனம் எல்லா சீடர்களும் போய் ஒரு பட்டயத்தை வாங்கிக் கொள்ளவேண்டும் என்பதாக காணப்படுகிறது. இயேசுவின் மரணம் மற்றும் அடக்கத்திற்கு பின் அவரில்லாமல் தனியாக உலகத்தை சந்திக்க வேண்டும் என அவர்கள் நினைத்தார்கள்.
இருந்த போதும், இந்த வார்த்தையை தனியாக பிரித்துபடிக்காமல் அதன் பின்னனியத்தோடு படிக்கையில் அதன் சரியான அர்த்தம் என்னவாயிருக்கும்? உண்மையாக இயேசு ஒரு பட்டயத்தை உபயோகித்தாரா? மேலும் தன்னுடைய சீடர்கள் ஆளுக்கொன்று வாங்கிக்கொள்ள வேண்டும் என்றிருந்தாரா?
லூக்கா 22:36 என்ன சொல்லுகிறது?
சுமார் மூன்று வருடங்கள் அவர் எருசலேமுக்குள் வெளிப்படையான ஒரு வெற்றி பவனியாக நுழைவதை தவிர்த்தார் .ஏனென்றால் அப்படி அவர் பரிசுத்த நகரத்திற்குள் கால் வைக்கும் போது பல நூறு வருடங்களுக்கு முன் ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டபடி (ஏசாயா 53:12) ஒரு பொதுக் குற்றவாளியின் மரணத்தை போல மரணம் அடைந்து தன் ஊழியத்தை நிறைவேற்ற வேண்டியிருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார் என்று லூக்கா 22:36 ன் சரித்திர பின்னனி தெளிவாக விளக்குகிறது. எனவே அவர் தன்னுடைய பணிகளை எருசலேமுக்கு வெளியே முடிக்க வேண்டியிருந்தது.
இறுதியாக தன்னுடைய தீர்க்கதரிசிகளை கொல்லுவதில் புகழ்பெற்ற (லூக்கா 13:33-34) அந்த நகரத்திற்குள் இயேசு பிரேவேசிக்கிறார். அவர் தன்னுடைய கைது,மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் அவை எல்லாவற்றையும் பற்றி முன்னுரைத்திருந்தார். யூதமதத்தலைவர்கள் அவரை ரகசியமாக கண்காணித்துக்கொண்டிருந்தார்கள் அவர் மீது பழிசுமத்துவதற்காக வஞ்சகமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.(லூக்கா 20:20) இந்த நேர்மையற்ற கேள்விகள் அவர் நகரத்திற்குள் பிரேவேசிப்பதற்கு கேட்கப்பட்டிருந்தாலும் அந்த நெருக்கமான பத்துநாட்களில் அவைகள் அதிகரித்துக்கொண்டேயிருந்தன். ஆனால் அவர்களுடைய எல்லா தந்திர வலைகளையும் தவிர்த்து அவர் ஆச்சரியமான விதத்தில் இயேசு கிறிஸ்து பதிலளித்தார். பிரச்சினைகளுக்கு நடுவிலும் ஒவ்வொரு நாளும் அவர் தேவாலயத்தில் பிரசங்கித்தார்,ஜனங்கள் திரளாய்கூடிவந்தார்கள் .ஜனங்களுக்கு பயந்ததினிமித்தம் அதிகாரிகள் அவரை கைது செய்ய முடியவில்லை. பிறகு யூதாஸ், ஜனக்கூட்டம் இல்லாத போது தான் அவர்களுக்கு அறிவிப்பு கொடுப்பதற்கும், அவரைக் காட்டிக் கொடுப்பதற்கும் முன்வந்தான். (லூக்கா 22:1-6)
பஸ்கா பண்டிகை நெருங்கியிருந்த போது அவர் இறுதி போஜனத்தை ஆயத்தப்படுத்தும் படி தன்னுடைய சில சீடர்களுக்குச் சொன்னார். புதிய உடன்படிக்கையில் (லூக்கா 22:17-20) உலகத்தின் பாவத்திற்காக சிந்தப்படுகிற தன் இரத்தத்தையும் ,பிட்கப்படபோகிறா தன் சரீரத்தையும் பிரதிபலிக்கிற ரொட்டியையும் ,திராட்சைரசத்தையும் அவர் உயர்த்திப்பிடித்தார். அப்படியிருக்கும்போது அந்த போஜனத்திலிருந்து யூதாஸ் நைசாக நழுவினான், அதிகாரிகளிடம் அவனுக்கு போகவேண்டியிருந்தது. ஏனென்றால் இயேசு வழக்கமாக ஒலிவ மலைக்கு சென்று ஜெபிப்பார் என்பதை (லூக்கா 21:37) அவன் அறிந்திருந்தான். அந்த இரவிலும் எந்த வித்தியாசமின்றி அப்படியே நடந்தது.
இந்த இடத்தில் லூக்கா 22: 3 தான் காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த ராத்திரியிலே அவர் கடைசி போஜனத்தை சாப்பிடுகிறார்.
வசனம் இப்படி சொல்லுகிறது.
லூக்கா 22: 35-38 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.
36 அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன் பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.
37 அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.
38 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.
இதன் பின்னனி குறைந்தது இரண்டு உண்மைகளை வெளிப்படுத்துகிறது. வேவுபார்க்கிறவர்களும் அதிகாரிகளும் இயேசுவை எப்படியாவது சிக்கவைக்க வேண்டும் என்று தீவிரமாக இருந்த அந்த பதற்றமான சில நாட்களில் எருசலேமுக்குள் நுழைவதற்கு முன் இயேசு தம்முடைய ஊழியத்தை வித்தியாசப்படுத்துகிறார். இயேசு எதற்காக தன்னுடைய சீடர்களிடம் பட்டயத்தைப் போய் வாங்கிக்கொள்ளுங்கள் என்பதை புரிந்து கொள்ளுவதற்கு இந்த பதற்றமான சூழ்நிலை ஏதாவது பங்கு வகிக்கிறாதா? இந்தக் கேள்விக்கு கீழே பதிலளிக்கப்பட்டுள்ளது. ஏசாயா 53:12 ல் முன்னுரைக்கப்பட்டபடி தான் கைது செய்யபடுவார் என்றும் அக்கிரமக்காரனைப் போல விசாரிக்கப்படுவார் என்பதையும் அவர் கூறினார். இதற்கும் பட்டயத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? குற்றவாளிகள் அதை தங்களோடு சுமந்துகொண்டிருப்பார்களா? இதுவும் கீழே விளக்கப்பட்டுள்ளது. பட்டயத்தை உபயோகப்படுத்தும் வன்முறையைக் காட்டிலும் ஏதோ ஆழமான அர்த்தம் இயேசுவுடைய மனதில் இருந்திருக்கும். அது என்ன?
எப்பொழுதும் ஒரு வசனத்தை நாம் விளங்கும் போது அதன் முன் பின் வசனங்களை கொண்டு விளங்க வேண்டும்.இன்னும் தெளிவு கிடைக்கவில்லையானால் வேறு பகுதிகளில் உள்ள விளக்கங்களை கொண்டு விளக்கவேண்டும்.அப்படியும் நமக்கு சரியான விளக்கம் கிடைக்காவிட்டால் இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீடர்களும் அதை நடைமுறை படுத்தியுள்ளார்களா என்பதையும்இஅந்த கால நடைமுறைகளையும் அறிந்துகொண்டு நாம் விளங்க வேண்டும்.இதுதான் நடைமுறை.உடனே இஸ்லாமிய அறிஞர்கள் என்ன வேண்டுமானாலும் கூப்பாடு போடலாம்.ஆனால் இது அவர்களின் குர்ஆனுக்கும் பொருந்தகூடியதாகும்.ஒரு தனிப்பட்ட வசனத்தை எடுத்து ஒரு சட்டத்தை சொல்லும்பொழுது அது தவறான அர்த்தமே கொடுக்கும்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிஞர்களோடு குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் அவர்கள் இதை புரிந்துகொள்ளுவதற்காக நாம் இது போன்ற ஒரு கேள்வியை எழுப்பியவுடன் மவ்லவி பிஜே அவர்கள் குர்ஆனின் இன்னொரு பகுதியில் இருந்து விளக்கத்தை காட்டினார்.அவர்களுடைய வேதப்புத்தகத்தின் கேள்விகள் வரும்பொழுது மட்டும் நல்ல தெளிவுள்ளவர்கள் போல் தங்களை காட்டிக்கொள்ளும் இஸ்லாமிய அறிஞர்கள் பைபிள் சம்மந்தப்பட்ட வாதங்களை வைக்கும் பொழுது மட்டும் தங்கள் சிந்தனை அறிவை மூட்டை கட்டி வைத்துவிடுகிறார்கள்.
இந்த வசனத்தை பொருத்தவரை; சரியான சொல்லுக்குரிய அர்த்தம்; லூக்கா 22:34: 38 க்குமஇ; கெத்சமனே தோட்டத்தில் கைது செய்யப்பட்ட (லூக்கா 22: 39-53) பகுதிக்கும் ஏன் சரியாக பொருந்தாது என்பதை ஆராய்வோம்.
பட்டயத்தின் சரியான உபயோகம்
இயேசு தன்னுடைய சீடர்களிடம் பட்டயத்தை வாங்கும் படிச் சொல்லுகிறர், அவர்கள் இரண்டு பட்டயத்தைக் காண்பித்தபோதோ அது போதும் என்கிறார். இயேசு பட்டயத்தை வாங்கும்படி சொன்னது ஒரு வேளை நமக்கு ஒரு சந்தேகத்தை உண்டுபண்ணுவதாக இருந்தாலும் அவர் சொன்ன இரண்டாவது பதில் நமக்கு சில தெளிவுகளை கொடுக்கிறது. இயேசு கிறிஸ்துவுடைய சீடர்கள் இரண்டு பட்டயத்தை காண்பித்தவுடன் இயேசு போதும் என்று சொல்லுவதை நாம் வாசிக்கிறோம்.
முதலில் வெளிப்படையான ஒரு கேள்வியை நாம் கேட்டுப்பார்க்க வேண்டும்: இரண்டு பட்டயங்கள் எதற்கு போதுமானது?
சரீரத்தில் அவரை கைது செய்வதை தடுத்து எதிர்த்து போராடுவதற்கு அந்த இரண்டு பட்டயங்கள் போதுமா? இது சரியானதாக இருக்க முடியாது. ஏனென்றால் இயேசு கைது செய்யப்படும்போது சீடர்களில் ஒருவராகிய பேதுரு(யோவான் 18:10) தன்னுடைய பட்டயத்தை எடுத்து பிரதான ஆசாரியனின் வேலைக்காரர்களில் ஒருவனாகிய மல்குஸ்சுடைய (யோவான் 18: 10;) காதை வெட்டினான். இயேசு பேதுருவிடம் பட்டயத்தை போடும்படி ‘இம்மட்டும் போதும் நிறுத்துங்கள்” என்று கடுமையாக கூறுகிறார். பிறகு மல்குஸ்சுடைய காதை மறுபடியும் அவனுக்கு பொருத்தி அவனை சுகப்படுத்துகிறார்.(லூக்கா 22: 49-51) இந்த சம்பவங்களில் இருந்து தெளிவாக அறியலாம் இரண்டு பட்டயஙகள் கைது செய்வதை எதிப்பதற்காக நிச்சயம் இருக்கமுடியாது.
இரண்டாவதாக, அந்த இரண்டு பட்டயங்கள் ஆயதந்தரித்த ஒரு சேனையாக அதிகாரிகளை எதிர்த்து அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக ‘இயேசு இயக்கத்தை” ஸ்தாபிப்பதற்கு போதுமானதா? லூக்கா 22:52 ல் இயேசு கிறிஸ்து இந்த நோக்கத்தை மறுக்கிறார். அதிகாரிகள் அவரை பிடிக்க வந்திருக்கும் போது, ‘நீங்கள் தடிகளோடும் பட்டயத்தோடும் என்னைப் பிடிக்க வருவதற்கு நான் என்ன கலவரத்தையா நடத்திக்கொண்டிருக்கிறேன்.” பதில் இல்லை என்பதுதான், அவர் பிடிக்கப்பட்டபோது, கொண்டு செல்லப்பட்டார்.(வச 54)
எனவே இதிலிருந்து நமக்கு தெளிவாக தெரிவது லூக்கா 22:36 ல் (பட்டயம் உபயோகப்படுத்தபடவேண்டும்) என்பது அதன் நீண்ட பின்னனியத்திற்கு பொருந்தாதது ஆகும். இரண்டு பட்டயமானது கைது செய்வதை எதிர்த்து எந்தவித கலகம் செய்வதற்கோ அல்லது அவர்கள் கெத்சமெனேத் தோட்டத்தில் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கோ போதுமாயிராது என்பது இங்கு நமக்கு புரியக்கூடியதாகவே இருக்கிறது.
ஏன் பட்டயத்தை வாங்க சொன்னார்?
பட்டயம் அல்லது வாள் எடுத்து போரிட வேண்டும் என்ற நேரடியான அர்த்தத்தை இந்த வசனங்கள் கொடுக்கவில்லை என்பதை அதன் சூழ்நிலைகளை கொண்டு நாம் தெளிவடைந்துள்ளோம்.அதனடிப்படையில் மேலும் சில காரியங்களை நாம் அறிந்துகொள்ளும் போது நிச்சயம் இந்த வசனங்களின் உண்மை நிலையை நாம் அறிந்துகொள்ள முடியும்.
முதலாவது, இயேசு எருசலேமுக்குள் பிரேவேசிப்பதற்கு முன்னரே தன்னுடைய சீடர்களிடத்தில் அவர்களுக்கான தன்னுடைய ஊழியத்தின் நோக்கம் என்ன என்பதை நினைவு படுத்துகிறார்.(லூக்கா 9:3- 10:1-17) அவர்களுக்கு ஒரு அதிகமான பணப்பையும், ஒரு பாதரட்சையும் தேவைப்பட்டதா? இல்லை, ஏனென்றால் ஜனங்கள் அவர்களிடத்தில் நட்பாக இருந்தார்கள். அவர் மீது அவர்களுடைய எதிர்பார்ப்பு மூன்று வருடங்களாக பரவியிருந்தது. இப்பொழுது அவர் எருசலேமில் இருக்கிறார், அவருடைய வார்த்தைகளாலேயே அவரை குற்றப்படுத்த வேண்டும் என்று முனைப்பாயிருந்த அதிகாரிகளின் கட்டுப்பாடான விரோதத்திற்கு உள்ளாயிருந்தார். அதிகாரிகள் இல்லாத போது அவர்கள் தங்கள் ஆட்களை வேவுபார்க்க அனுப்புவார்கள். எனவே சூழ்நிலையானது மிகவும் பதட்டமானதாக காணப்பட்டது – அந்த இரண்டு பட்டயங்கள் – பதட்டத்தை இன்னும் வெளிக்காட்டுகிறது. இயேசுவின் ஊழியம் தெளிவாக ஒரு ஆபத்திற்கு மாற்றப்பட்டிருந்தது சீடர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியிருந்தது. இருந்தபோதும், நாம் மேலே பார்த்தபடி நேரடியாக தன்னுடைய சீடர்கள் பட்டயங்களை உபயோகிக்க வேண்டும் என்று நிச்சயமாக எண்ணவில்லை. ஏனெனில் இயேசு கிறிஸ்து பேதுருவிடம் பட்டயத்தை(வாளை) தூக்கிப் எறிய சொல்பவராக இருக்கிறார்.
இரண்டாவதாக, அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவுபெறுங்காலம் வந்திருக்கிறது என்றார். (லூக்கா 22:37) இரண்டு பட்டயங்களுக்கான தெளிவான நோக்கம் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை (53:12) மேற்கோள்காட்டும் இயேசுவின் குறிப்பினால் விளங்குகிறது. அவர் ஒரு அக்கிரமக்காரனைப் போல் கைது செய்யபடவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தார், ஒரு அக்கிரமக்காரனைப் போலவே விசாரிக்கப்பட்டார், ஒரு அக்கிரமக்காரனைப் போலவே சிலுவையிலும் அறையப்பட்டார். ( ஆனால் அவரது கைது, விசாரணை, மரண தண்டன எல்லாம் பொய்ச் சாட்சிகளினிமித்தம் வழங்கப்பட்டது, அவர் நன்மைத் தவிர ஒன்றுமே செய்யவில்லை) இருந்தாலும் அவர் இரண்டு கள்ளர்களுக்கு நடுவே தொங்க வேண்டியாதாயிற்று, அதுவும் ஏசாயா தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாகும் (லூக்கா 23:32- 39-43) அக்கிரமக்காரர்கள் தங்களோடு எதை சுமந்துசெல்வார்கள்? ஆயுதங்களை, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்படுவதற்கு இயேசுவும் ஆயுதங்களை வைத்திருப்பது அவசியமாயிருந்தது. எனவே தான் இயேசு சொன்னார், இரண்டு பட்டயங்கள் போதுமென்று – தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற. இன்னும் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுவது பற்றி மத்தேயு (26:54) கூறுகிறார். ஒருவேளை இயேசுவை கைது செய்வதைத் தடுக்க பேதுரு தொடர்ந்து பட்டயத்தை உபயோகப்படுத்திக் கொண்டேயிருந்தால், தீர்க்கதரிசனம் தடையில்லாமல் இலகுவாக நிறைவேற்றப்பட்டிருக்க முடியாது. தான் வேண்டிக் கொண்டால் பன்னிரண்டு லேகியோனுக்கும் மேற்பட்டவர்களை தன்னுடைய பாதுகாப்பிற்காக பெறமுடியும் என்று இயேசு கூறுகிறார். ஆனால், தான் மரிக்க வேண்டிய பணியை நிறைவேற்றவதற்காக பிதாவினால் அனுப்பப்பட்டிருப்பதாகவும்,தன்னுடைய மரணத்தின் மூலம் வேத வாக்கியங்கள் நிறைவேற வேண்டும் என்பதையும் இயேசு சுட்டிக்காட்டுகிறார். (மத்தேயு 26:53). எனவே தான் இயேசு பேதுருவிடம் பட்டயத்தை அதன் உறையிலே போடும் படிச் சொன்னார். அதுமட்டுமல்ல பட்டயத்தை எடுப்பவனுக்கு பட்டயத்தாலே மரணம் என்று சுட்டிக்காட்டி வன்முறை வழிமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.(மத் 26:52) மேலும் லூக்கா சுவிசேஷத்தில் பேதுரு ஒருவனுடைய காதை வெட்டின பிறகு அவனிடம் சொல்லுகிறார், ‘இம்மட்டும் நிறுத்துங்கள்” என்று (22: 51)
மேலும் சபை வரலாறுகள் நமக்கு இன்று பெரிய ஆதாரங்களாக உள்ளது.முதல் நூற்றாண்டுகளில் கிறிஸ்துவின் சபையானது வன்முறையை ஒருபோதும் எடுத்துக்கொள்ளவே இல்லை.தங்கள் உயிருக்கும்,உடமைக்கு பங்கம் ஏற்பட்டபோது கூட தீமையை தீமையால் எதிர்த்து நிற்காமல் நன்மையினால் ஜெயித்தனர்.இதற்கு அத்தாட்சியாக இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் பெரும்பகுதியினர் இரத்தசாட்சிகளாக தங்களுடைய இன்னுயிரை கிறிஸ்துவுக்காக அர்பணித்தனர்.ஒருபோது இயேசு கிறிஸ்து வன்முறையை போதிக்கவும் இல்லை அதை செயல்படுத்தவும் இல்லை.அவரை பின்பற்றிய அப்போஸ்தலர்களும் வன்முறையை அனுமதிக்கவில்லை.அதை செயல்படுத்தவும் இல்லை.
அடுத்தபடியாக
மத்தேயு 10:34 ல் உள்ள பட்டயத்தைப் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை பார்ப்போம்.
‘பூமியின் மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்.சமாதானத்தை அல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.” மத்தேயு 10:34
இயேசு அடிக்கடி வெளிப்படையான பொருட்களைக் குறிப்பிட்டே (விதைகள், விளக்கு, திராட்சைத் தோட்டம், நாணயம், தொலைந்துபோன ஆடு இன்னும் பல உள்ளான) உலக உண்மைகளை கற்றுக் கொடுத்திருக்கிறார்.அதுபோலவே இந்த இடத்தில் பட்டயம் என்னும் வார்த்தைக்கு நேரடி பொருள் கொள்ளமுடியது என்பதை இதற்கு முன் உள்ள விளக்கத்தில் இருந்து அறிந்துகொள்ளலாம்.
உடனே இஸ்லாமிய அறிஞர்கள் அது எப்படி முன்பு உள்ள பட்டயம் நேரடி பொருளில் இருக்கும் பொழுது இது எப்படி நேரடியாக பொருள் கொள்ளாமல் உவமை என்று சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்புவார்கள்.
இதற்கு அவர்கள் குர் ஆனில் இருந்தே ஒரு விளக்கத்தை கொடுத்துவிட்டு பிறகு இதற்கான பதிலுக்கு வருகிறேன்.
முதலாவது குரான் 17:72ல்
இங்கே குருடராக இருப்பவர் மறுமையிலும் குருடராகவும்இ வழி கெட்டவராகவும் இருப்பார்.
என்று சொல்லப்பட்டுள்ளது.இதை விவாதத்தில் கேள்வியாக வைத்தபொழுது மவ்லவி பிஜே அவர்கள்
குர்ஆன் 20:124
எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.
என்று உள்ளதை கொண்டு மறுமையில் குருடனாக எழுப்பப்படுபவர்கள் இம்மையில் குர்ஆனின் போதனையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் குருடர்கள் என்று குர்ஆன் சொல்லுவதாக சொன்னார்.ஆனால் அது பொருந்தாத போதிலும் அவர்கள் எப்படி விளங்கிக்கொள்ளுகிறார்கள் என்பதற்கு அதனை எடுத்துக்கொள்ளலாம்.
இப்பொழுது மவ்லவி பிஜே அவர்கள் சொல்லுவதை போல் 17:72 ல் குருடர் என்று சொல்லப்படுவது கருத்து குருடர் என்று புரிந்துகொள்ள வேண்டுமென்றால் குர்ஆனில் குருடர் என்று வரும் அனைத்து இடங்களிலும் அப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னால் இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்றுகொள்ளமாட்டார்கள்.
உதாரணத்திற்கு
குர்ஆன் 80:1 தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்
என்று வருகிறது.இந்த இடத்தில் சொல்லப்படும் குருடரை கருத்துக்குருடர் என்று சொல்ல முடியுமா?இஸ்லாமிய அறிஞர்கள் அப்படி ஒரு விளக்கத்தை தருவார்களா?நிச்சயம் தர மாட்டார்கள்.80:1ல் சொல்லப்படுபவர் உண்மையாகவே குருடர் என்று நம்மிடம் சொல்லுவார்கள்.இதுபோலத்தான் ஒரு இடத்தில் உவமையாக சொல்லப்படும் வார்த்தை இன்னொரு இடத்தில் உண்மையான பொருளில் பயன்படுத்தப்படுவதை புரிந்துகொள்ளுவார்கள் என்று நம்புவோம்.
பட்டயத்தை அனுப்ப வந்தேன் என்பதின் உண்மையான விளக்கம் என்ன?
சரி விசயத்துக்கு வருவோம் அந்த கலாச்சார சம்பவங்கள் குடும்ப நபர்களுக்கு மத்தியில் இருந்த பிரிவினைகளைப் பற்றி காண்பிக்கும் உடனடி பின்னனியத்தைக் விளக்குகிறது. மத்தேயு 10:34 ல் உள்ள ‘பட்டயம்” என்பதின் அர்த்தத்தை விளக்குவதற்கு அதற்கான பின்னனியங்கள் முழுவதுமாக விளக்கப்பட வேண்டும்.
32. மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்.
33. மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.
34. ப+மியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்@ சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
36. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
37. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல@ மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
இந்த நீண்ட வேதப் பகுதியில் ஒரு முக்கியமான ஆதார வார்த்தை ‘பட்டயம்” அதன் அர்த்தம் இப்போது தெளிவாகிறது. இயேசு தன்னுடைய சொந்த யூத சமுதாய குடும்பத்தில் சமாதானத்தை அல்ல ‘பிளவை” கொண்டு வருவார், பட்டயத்தின் சரியான வேலையை உருவகப்படுத்தி கூறியிருப்பதை தெளிவாக குறிக்கிறது. அதற்கு அவருடைய சீடர்கள் தயாரா? இந்தவித காணற்கூடாத ஆவிக்குரிய பட்டயமானது ஒரு மனிதனை அவன் தகப்பனிடத்திலிருந்தும், மகளை தாயினிடத்திலிருந்தும் அப்படி பல உறவுகளை (மீகா 7:6) துண்டித்து விடுகிறது. துவக்கத்திலேயே எதிர்ப்பினால் சொந்த குடும்பத்தை விட்ட நிலையில்,(பின்னர் அவரோடு இணைந்தனர்) ஒருவன் என்னைப் பின்பற்ற விரும்பினால், என்ன நடந்தாலும் சரி, ஒருவேளை தன்னுடைய குடும்பத்தை இழக்க நேரிட்டாலும் சரி என்னை இறுதிவரைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் சொல்லியிருப்பது இயற்கையானது. ஆனால் இது, ஒரு குடும்பத்தினர் புதிதாக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட தங்களுடையவரை வெறுத்து ஒதுக்கும்போது மட்டுமே பொருந்தும். அவருடைய புதிய நம்பிக்கையில் அவரை ஏற்றுக்கொள்ளும் போது அந்த குடும்பத்தை அவர் வெறுத்து ஒதுக்கக்கூடாது.ஏனென்றால் இயேசு அவதாரமாக வந்ததின் முழு நோக்கமே எவ்வளவுக்கு அதிகமான மக்களை ஜெயித்து அவர் பக்கமாய் சேர்க்க முடியுமோ சேர்க்க வேண்டும் ஒருவேளை அது உலகமே இரண்டாக பிளவுபட வேண்டியதாயிருந்தாலும் வன்முறை இல்லாமல் செய்யப்படவேண்டும்.
இந்த இடத்தில் ஆரம்ப கால இஸ்லாமை ஏற்றுகொண்ட மக்கள் தங்கள் குடும்பங்களை கூட எதிர்த்து வாளேந்தி போரிட்டனர் என்ற உண்மையையும் இங்கு நினைவு படுத்துகிறேன்.
இப்பொழுது நாம் இன்னும் பெரிய வாக்கிய பின்னனியத்தைப் பார்ப்போம். லூக்கா சுவிசேஷத்திலுள்ள ஒரு இணை பகுதியில் பட்டயத்தின் விளக்கத்தை நாம் புரிந்துகொள்ள கூடிய கூடுதல் விளக்கம் உள்ளது.
வசனம் கூறுகிறது
லூக்கா 12:49-53 பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
50. ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.
51. நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
52. எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
53. தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும்,மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.
மத்தேயு மற்றும் லூக்கா சுவிசேஷத்தில் உள்ள இரண்டு ஒரே மாதிரியான பகுதிகளும் இரண்டு வெவ்வேறான சூழ்நிலைகளை பிரதிபலிக்கிறது என்பது முற்றிலும் சாத்தியாமானதாகும். இயேசு கற்றுக் கொடுத்த இந்த மூன்று வருடங்களில் அவர் இஸ்ரவேலைக் குறிக்கும் போது வெவ்வேறான பார்வையாளர்களுக்கு அவர் அநேக முறை (சுவிசேஷகங்களில் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டிருந்தபோதும்) இந்த அர்ப்பணிப்பின் அழைப்பைக் மீண்டும் மீண்டுமாக கொடுத்துள்ளதாக அறியப்படுகிறது. தன்னைக் கேட்பவர்களிடத்தில் அவர்களுடைய சிலுவையை எடுத்துக் கொண்டு தன்னைப் பின்பற்றி வரவேண்டும் என்ற தீவிரமான அழைப்பை அடிக்கடிக் கொடுத்திருக்கிறார். (மத் 16: 24- மாற்கு 8:34-லூக்கா 9:23- 14:27)
நாம் வேத வாக்கியங்களுக்கு விளக்கம் கொடுக்கும் சரியான முறை என்பது வசனங்களே வசனங்களை தெளிவுபடுத்துவதற்கு விட்டு விடுவதாகும், அதிலும் குறிப்பாக ஒரே மாதிரியான வேத பகுதிகளான லூக்கா 12: 49-53 இன்னொரு வேதபகுதியான மத்தேயு 10:34 விளக்கத்தை உறுதிபடுத்துகிறது. இயேசு ஒருவருடைய சொந்த குடும்பத்திற்கு விரோதமான சரீர வன்முறையை ஆதரிக்கவில்லை மாறாக குடும்பத்தில் பிரிவினைகள் உண்டாவதற்கான வாய்ப்புகளைப் பற்றி அவர் எச்சரிக்கிறார்.
எனவே ஒட்டுமொத்தமாக இதன் அர்த்தம் என்ன?
இயேசு ஒருபோதும் யாதொருவர் மீதும் பட்டயத்தை உபயோகிக்கவில்லை என்பதை சரித்திரம் நமக்கு தெளிவாக சித்தரிக்கிறது. மேலும் மத்தேயு 10:34 ல் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு யார் மீதும் பட்டயத்தை சுழற்றுவதற்கோ எந்தக் காரணத்திற்காகவும் குடும்ப சத்துருக்களை கொல்லுவதற்கோ அவர் கட்டளையிடவில்லை. ஆனால் ஒரு உண்மையான சீடன் இயேசுவை பூரணமாக பின்பற்றும் போது எதிர்ப்பு நிறைந்த குடும்பத்திலிருந்து வரும் போது தன்னுடைய சிலுவை சுமக்கும் (சீடனுக்கான அழைப்பில் மற்றொரு உருவகம்) அளவுக்கு எல்லாவித எதிர்ப்புகளிலிருந்து தன்னை துண்டித்துக் கொள்வதற்கு விருப்ப பட்டயத்தை (சரீரப் பிரகாரமான உண்மை பட்டயத்தை அல்ல) உபயோகிக்க வேண்டும். இயேசு இந்த உலகத்தை இரண்டு பிரிவாக பிரிக்கிறார் என்பது உண்மையே, அவரைப் பின்பற்றுபவர்கள் அவரைப் பின்பற்றாதவர்கள், வெளிச்சத்தில் உள்ளவர்கள் இருளில் உள்ளவர்கள். இருந்தபோதும் தன்னுடைய சீடர்களிடத்தில் எல்லார் மீதும் போர் தொடுங்கள் குறிப்பாக ஒருவனுடைய குடும்பத்தின் மீது என்று நிச்சயமாகக் கூறவில்லை. இயேசு ஒருபோதும் தன்னுடைய செய்தியை பரப்புவதற்கு பட்டயத்தை ஆதரிக்கவில்லை. இயேசு ஒருபோதும் ஒரு இராணுவப் புனிதப் போரை அறிவிக்கவில்லை, அவர் தன்னுடைய இயக்கத்திற்கு மரபு நெறிகளை மட்டுமே நியமித்தார்.
புதிய ஏற்பாட்டிலே சுவிசேஷத்தைப் பரப்புவதற்கோ, சபைகளை நாட்டுவதற்கோ அல்லது வேறு எதையும் சாதிப்பதற்கோ சபையானது பட்டயத்தை உபயோகிக்க வேண்டும் என்று ஒரு வசனம் கூட இல்லை. மாறாக புதிய ஏற்பாடு உலகபிரகாரமான பட்டயத்தை அரசாங்கத்திடம் கொடுக்கிறது (ரோமர் 13:1-6). எந்த விதத்திலும் உலகப் பிரகாரமான பட்டயத்தை அல்ல ஆவிக்குரிய பட்டயத்தை எடுக்க இயேசு கூறுகிறார், ஒருவேளை குடும்ப உறவுகளைத் துண்டிக்க நேர்ந்தாலும் சீடர்கள் அதற்கு தயாராக இருக்கவேண்டும் என்பதே இயேசு கிறிஸ்துவின் உபதேசமாகும்.
முடிவுரை
இந்த வசனங்களின் உண்மை பொருளையும்,இயேசு கிறிஸ்துவும்இஅவருடைய சீடர்களும் பின்பற்றிய வழியையும் இஸ்லாமிய அறிஞர்கள் நன்கு அறிவார்கள்.அதே வேளையில் இஸ்லாமின் ஆரம்பக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களையும் அவர்கள் அறிந்துள்ளார்கள்.ஆனால் தங்களுடைய நிலையை மறைக்க அவர்கள் பரிசுத்த வேதாகமத்துக்கு விரோதமாக பலவிதமான குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.ஆனால் அவைகள் எந்த விதமான அடிப்படையும் இல்லாதவைகளாக உள்ளது என்பதை இந்த கட்டுரை உங்களுக்கு உறுதிப்படுத்தும் என்று நம்புகிறோம்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சாந்தியும்இசமாதனமும் உங்கள் அனைவருக்கும் உண்டாவதாக.ஆமேன்
நல்ல திருப்திகரமான விளக்கம். இதனை இரு தனித்தனி கட்டுரைகளாக பதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்கள் ஊழியங்கள் சிறப்புற தேவனை பிரார்த்திக்கின்றேன்.
Dear Bro…
super….
Keep it
And i have one more Question .. please tell me .. bro…
Aathiyakamam 1: 26
What is the meaning of … SAYAL —– RUBAM….
Please bro help me….. somebody ask me …..
Useful explanation, may God bless U
பிரதர் பீற்றர்
சாயல், ரூபம் விளக்கம் தெளிதானதுதான் விரைவில் தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்தில் இதற்குரிய விளக்கத்தை பதிக்கிறேன்.
அல்லது நீங்கள் Genesis by Appleby எழுதிய நூலை பாருங்கள். தமிழிலும் இது வந்துள்ளது.
Anpulla sakothare meendum ungalin sevakan ……. Shalom … Ungal mel samadanam undavadaka …. Jesus vaalai upayokam paduthinaara? Enra katturaiai vaasithean nallathu jesus vanmuraiai thoonda villai enru kuripiteerkal unmaithaan sakothare naangal jesusai mathikiroam anaal verupattu mathipalipoam neengalum mathikinreerkal ungaluku mika mukkiya naparaka jesus ullaar nalla vishayam naam pothuvaana oru vishayathirku varuvoam jesus etharkaaka uvamaia pesinaar ? Isravelarku payanthu uvamaiaka pesinaara yaaruku anji uvamana paashaiel kuripitaar vilakungal jesus vaalai upayoka paduthinaara? Illaia? enru solkirean jesus sollia oru vasanathai kuripidukirean neengal mele kuripitathudaan matheyu 12.49. 53 varai ulla vasanam athavadu jesus koorukiraar naan poomien mel samadanathai kondu varavillai akkiniai poda vanthean athu ippozhudea patthi eriya vendum enru ninaikirean enru kooriyathu. sila muslimkal thavaraka purinthulanar neengalum appadiye koorukinreerkal prachanai illai naam oppitu paarpoam jesus koorukiraar oru kudumpathil ulla anaivarukkum virothamaka vanthean enru epdi enraal thaaikum thanthaikum makalukkum makanukum virothamaka vanthean enru koori vitu pinpu intha poomien mael akkiniai potu athu ippothea eriya vendum enru ninaikinrean enkiraar jesus intha vaarthaiai oru uvamaikave kuripidukiraar enpathu marukka mudiyatha unmai anaal ovvoru purajaathikalaium jesus ipdi veru paduthiye solkiraar ean enraal jesus kaalathil satthiyathuku virothamaka pala kulukkal irunthana athai jesus matthiya pakudiel ulla kulukall anaivaraium kudumpamaka paavithu pesi ulaar itharku thakka atharangal undu yaarum jesus visuvasam kollathanaal avar akkiniai uvamaika kuripitu sathhiyathai visuvasikatha isravelarkalai sathiyathin nimitham pothika ippothe satthiyathai podavanthean enru koorukiraar anaal neengal kuduthadu unga biple ke muranaka ullathu sakothare athu epdi muranaka ullathu enpathai naan kuripiduvean itharku thangalin vimarsanthai paarkirean
அருமையான விளக்கம் அண்ணா.
கர்த்தருக்கே மகிமை.
yes. Great Explanation. Jesus gave inner peace to every believer. He gave His peace to us.
I was Hindu. But now i am following Jesus. My family did not accept this. Then What will i do?
I can’t compromise with my family. Instead i should stand for Jesus. Everyday i am facing trouble in my family. This situation exactly happened to me. I am having peace of Jesus in my heart. But i am not having peace with my family. May Jesus save my family and our all Hindu friends and muslims also..Glory to Jesus!!