IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

அப்.பவுல் அவர்களின் சாட்சியில் முரண்பாடு உள்ளதா?

February 11, 2013

 

முன்னுரை: பொதுவாக இஸ்லாமிய அறிஞர்கள் “கிறிஸ்தவத்தின் ஸ்தாபகர் இயேசு கிறிஸ்து அல்ல, பவுல் தான், இவர் இயேசுவின் செய்தியை திருத்திவிட்டார், சிலுவை, மற்றும் இயேசுவின் உயிர்த்தெழுதல் போன்ற கோட்பாடுகள் எல்லாம் பவுல் கண்டுபிடித்தது தான்” என்று மிகப் பெரிய பொய்யை ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அப்போஸ்தலர் நடபடிகளை படிக்கிற ஒருவரும் இதுபோன்ற ஒரு கூற்றை சொல்லவே முடியாது.முதல் 8 அதிகாரங்கள் அப்.பவுல் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறியாதபொழுது நடைபெற்ற சம்பவங்களை தெளிவாக குறிப்பிடுகிறது.9 அதிகாரத்தில் அப்.பவுல் அவர்கள் ஆண்டவரை சந்தித்த விவரங்கள் கொடுக்கப்படுகிறது. முதல் 8 அதிகாரங்களிலேயே மற்ற அப்போஸ்தலர்கள் மூலம் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் உயிர்தெழுதல் என்பது பிரசங்கிக்கப்பட்டதை நாம் காண முடியும்.இதிலிருந்தே இஸ்லாமிய அறிஞர்கள் வேண்டுமென்றே துணிந்து பொய் சொல்லுகிறார்கள் என்பதை அறியலாம்.

 

இதற்குமுன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் செய்திக்கும் அப் .பவுல் அவர்களின் செய்திக்கும் எந்த முரண்பாடும் இல்லை என்பதையும்    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் செய்தியும், அப்.பவுலின் செய்தியும் ஒன்று தான், வெவ்வேறானது அல்ல என்பதை புதிய ஏற்பாட்டின் துணையோடு எடுத்துக் காட்டியுள்ளோம். அதாவது சிலுவை மரணம், மற்றும் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய விவரங்களை பவுல் தான் புகுத்தினார் என்று முஸ்லீம்கள் சொல்வது பொய், இயேசுவே பல சந்தர்பங்களில் இவைகளைப் பற்றி பேசியுள்ளார். கீழ் கண்ட இரண்டு கட்டுரைகளில் இயேசுவின் போதனைக்கும், பவுலின் போதனைக்கும் இடையே உள்ள 133 ஒற்றுமைகளை இரண்டு பகுதிகளாக காட்டியுள்ளோம்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் அப்.பவுலும் :

பாகம் 1     பாகம்  2

 

 

  

சவுலின் மனந்திரும்புதல் நிகழ்ச்சியில் முரண்பாடுகள் இல்லை

 

அப்போஸ்தலர் நடபடிகளின் ஆதாரங்கள் இஸ்லாமிய அறிஞர்களின் குற்றச்சாட்டுகளை தவிடுபொடியாகும் பொழுது  இஸ்லாமிய அறிஞர்கள் வைக்கும் அடுத்த வாதம் அப்.பவுலின்  மனந்திரும்புதல் நிகழ்ச்சியில் முரண்பாடு உள்ளது.அதனால் அதை ஏற்றுகொள்ள முடியாது என்பதாகும்.குறிப்பாக இந்த நிகழ்சியில் இஸ்லாமிய அறிஞர்கள் வைக்கும் வாதங்கள் கீழே கொடுக்கப்படுகிறது.

1. சவுல் மட்டும் கீழே விழுந்தாரா அல்லது எல்லாரும் விழுந்தார்களா?

 

2. சவுல் மட்டும் சத்தத்தை கேட்டாரா அல்லது சவுலோடு இருந்த மனிதர்கள் எல்லாரும் “சத்தத்தை” கேட்டார்களா?

 

3. சவுலோடு பிரயாணம் செய்த மனிதர்கள் “யாரையாவது” கண்டார்களா? இல்லையா?

 

4. அப் 9ம் அதிகாரத்தில் அம்மனிதர்கள் “பிரமித்து நின்றார்கள்” என்றும், அப் 26ம் அதிகாரத்தில் “அவர்கள் கீழே விழுந்தார்கள்” என்றும் உள்ளதே, இதைப் பற்றிய விளக்கம் என்ன?

 

5. சொல்லப்பட்ட மூன்று விவரங்களில் ஒரு விவரத்தில் மட்டும் இயேசு சவுலிடம் அதிகமாக பேசியதாக உள்ளதே இதன் விளக்கம் என்ன?

 

 

அப்போஸ்தலர் நடபடிகளில் பவுலின் சாட்சி்:

 

தமஸ்குவிற்கு போகும் வழியில் இயேசு சவுலை சந்தித்த நிகழ்ச்சி அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் மூன்று இடங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

 

அப் 9ம் அதிகாரத்தில்: இந்த அதிகாரத்தில் லூக்கா, சவுல் தமஸ்கு வழியில் எப்படி இயேசுவால் சந்திக்கபட்டார் என்பதைச் சொல்கிறார்.

 

அப் 22ம் அதிகாரத்தில்: இந்த அதிகாரத்தில் பவுல் எருசலேமிலுள்ள யூதர்களிடம் தன் சாட்சியை பகிர்ந்துக் கொள்கிறார். இந்த யூதர்களுக்கு, பவுல் யார் என்று தெரியும், அவர் இதற்கு முன்பு எதை செய்துக்கொண்டு இருந்தார், இப்போது யாரைப் பற்றி பிரச்சாரம் செய்துக்கொண்டு இருக்கிறார் என்றும் தெரியும்.

 

அப் 26ம் அதிகாரத்தில்: எருசலேமில் தன் சாட்சியை சொன்ன பிறகு, பவுல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு ரோம இராஜ்ஜியத்தின் கவர்னர் “பெஸ்து”க்கும் மற்றும் இராஜா ஏரோது அகிரிப்பாவிற்கு (Roman Governor Festus and King Herod Agrippa) முன்பாக பவுல் தன் சாட்சியை பகிர்ந்துக்கொள்கிறார், மற்றும் தனக்காக வழக்காடுகிறார், அதாவது த‌ண்டனை அடையும் அளவிற்கு அரசாங்கத்திற்கு எதிராக எந்த குற்றத்தையும் செய்யவில்லை என்று தனக்காக தானே வழக்காடுகிறார்.

 

 


கேள்வி 1: சவுல் மட்டும் கீழே விழுந்தாரா அல்லது எல்லாரும் விழுந்தார்களா? 

 

லூக்கா தான் எழுதிய முதல் இரண்டு விவரங்களில் “சவுலோடு வந்தவர்கள் விழவில்லை”. என்றுச் சொல்லவில்லை, அதற்கு பதிலாக இரண்டு விவரங்களில் “சவுல் விழுந்தார்” என்றுச் சொல்லியுள்ளார். அவர்களும் விழுந்தார்கள் என்ற விவரத்தை குறிப்பிடாமல் விட்டுவிட்டார் அவ்வளவே. எனவே ஒரு விவரத்தை சொல்ல வில்லையென்றால், அது நடக்கவில்லை என்று பொருள் இல்லை அது முரண்பாடும் இல்லை. அப் 26ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டது போல, எல்லோரும் தரையில் விழுந்தார்கள்.

 

 

அப் 9:4 அவன் தரையிலே விழுந்தான்….

அப் 22:7 நான் தரையிலே விழுந்தேன்…

அப் 26:14 நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது:…

 

 

ஏன் மூன்று இடங்களிலும் (எல்லாரும் விழுந்தார்கள் என்று) சொல்லக்கூடாது என்று கேட்டால், நாம் ஒரு விவரத்தை அல்லது நிகழ்ச்சியைப் பற்றி விவரிக்கும் போது, 

 

நாம் யாரிடம் அந்நிகழ்ச்சியை விவரிக்கிறோம், நமக்கு கொடுக்கப்பட்ட நேரம் எவ்வளவு? நாம் பேசும் சூழ்நிலை என்ன‌? மற்றும் நாம் பேசுவதை கேட்கும் நபர்களின் புரிந்துக்கொள்ளும் தன்மை, போன்றவற்றை கருத்தில் கொண்டு தான் விவரிப்போம். 

அதிகப்படியான தகவல்களை தருவது என்பதில் ஒரு முரண்பாடும் கிடையாது.இது சாதாரண நடைமுறையில் உள்ள விசயமாகும்.இதை இஸ்லாமிய அறிஞர்களும் நன்கு அறிவார்கள்.குர்ஆனிலும்,ஹதீஸ்களிலும் இதுபோன்ற நூற்றுக்கணக்கான விசயங்களை நாம் எடுதுக்காட்ட முடியும்.

 

அப்போஸ்தலர் நடபடிகளில் 9, 22 மற்றும் 29ம் அதிகாரத்தில் தேவையானது மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. 

எனவே, தமஸ்கு வழியில் எல்லாரும் விழுந்தார்கள் ஆனால், தேவைப்படும் போது தேவையான விவரங்கள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. 

 

 

கேள்வி 2: சவுல் மட்டும் சத்தத்தை கேட்டாரா அல்லது சவுலோடு இருந்த மனிதர்கள் எல்லாரும் “சத்தத்தை” கேட்டார்களா?

 

 

Act 9:7 அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள்.

Act 22:9 என்னுடனே கூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.

 

 

இந்த இரண்டு இடங்களில், 9ம் அதிகாரம் சொல்கிறது, “அவர்கள் சத்தத்தை கேட்டார்கள்”, ஆனால், 22ம் அதிகாரம் சொல்கிறது, “அவர்கள் என்னுடம் பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை” என்று. இந்த இடத்தில் “கேட்டல் – Hear – (akouō) ” என்ற கிரேக்க வார்த்தையின் பொருளை நாம் காணவேண்டும்.

 

 

G191
α
̓κούω

akouō
ak-oo’-o

A primary verb; to hear (in various senses): – give (in the) audience (of), come (to the ears), ([shall]) hear (-er, -ken), be noised, be reported, understand. 

Source: http://www.eliyah.com/cgi-bin/strongs.cgi?file=greeklexicon&isindex=191 

Outline of Biblical Usage 

1) to be endowed with the faculty of hearing, not deaf

2) to hear
…..b) to attend to, consider what is or has been said
…..c) to understand, perceive the sense of what is said

 

3) to hear something
…..a) to perceive by the ear what is announced in one’s presence
…..b) to get by hearing learn
…..c) a thing comes to one’s ears, to find out, learn
…..d) to give ear to a teaching or a teacher
…..e) to comprehend, to understand

Source: http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=G191&t=KJV

 

 

கிரேக்க வார்த்தை “akouō” என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன, 

அதாவது, “கேட்டல் – Hear” என்ற பொருளும் உண்டு, 

“புரிந்துக்கொள்ளுதல் – Understand” என்ற பொருளும் உண்டு.

இதன் படி, அப் 22:9ல் “என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை” என்றுச் சொல்லப்பட்டதின் அர்த்தம் அல்லது சரியான மொழிபெயர்ப்பு கிரேக்க மொழியில், “என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை” என்பதேயாகும். எனவே, இங்கு எந்த முரண்பாடும் இல்லை, கிரேக்க வார்த்தை “akouō” என்பதற்கு “கேட்டல்” மற்றும் “புரிந்துக்கொள்ளுதல்” என்ற அர்த்தங்கள் உள்ளன. 

 

கொரிந்தியரிலிருந்துஇன்னொருஉதாரணம் 

 

கிரேக்க வார்த்தைக்கு(akouō) வெறும் “கேட்டல்- Hear” என்று தான் பொருள் வரும், புரிந்துக்கொள்ளுதல்(Understand or perceive or comprehend) என்ற பொருள் வராது என்று சிலர் சொல்லக்கூடும். அவர்களுக்காக, இதே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள இன்னொரு வசனத்தை காண்போம். 

 

கீழ் கண்ட வசனத்தை கவனிக்கவும்: 1 கொரிந்தியர் 14:2 

 

ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும்அறியாதிருக்கிறபடியினாலே(akouō) அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். 

For he that speaketh in an unknown tongue speaketh not unto men, but unto God: for no man understandeth(G191-akouō) him; howbeit in the spirit he speaketh mysteries.

 

 

இந்த வசனத்தை கவனிக்கும் போது, ஒரு மனிதன் சபையிலே அந்நிய பாஷையிலே பேசும் போது, அதை கேட்பவனுக்கு அவன் பேசுவது கேட்குமே ஒழிய ஆனால், அதன் அர்த்தம் புரியாது. இந்த இடத்திலும் அதே கிரேக்க வார்த்தை(understandeth-akouo) பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு இதன் பொருள் என்ன? சத்தம் காதில் விழும் ஆனால், அதன் அர்த்தம் புரியாது. இந்த வசனத்திலும் “Akouo” என்ற வார்த்தை வருவதினால், “அவன் பேசுகிறதை ஒருவனும் கேட்கமுடியாது” என்று மொழிபெயர்க்க முடியாது, ஏனென்றால், பக்கத்தில் இருப்பவனுக்கு ஒருவன் சத்தமாக தேவனை வேறு ஒரு மொழியில் துதிப்பது காதில் விழாமல் இருக்காது, கண்டிப்பாக விழும், ஆனால், பக்கத்தில் இருப்பவனுக்கு “புரியாது” அவ்வளவே. இந்த இடத்தியில் “அறிய மாட்டான் அல்லது புரிந்துக்கொள்ளமாட்டன்” என்ற வார்த்தைக்கும் இதே கிரேக்க வார்த்தைத் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

 

பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் குர்‍ஆனை படிக்கும் முறை இது தான், அதாவது அவர்களுக்கு சத்தமாக ஓதத் தெரியும்(அதாவது அரபி எழுத்துக்களை படிக்கத்தெரியும்) ஆனால், அதன் அர்த்தம் புரியாது. மற்றவர்கள் அவர்களுக்கு குர்‍ஆன் வசனத்தின் பொருளைச் சொன்னால் தான் அவர்களுக்கு நாம் என்ன படிக்கிறோம் என்று புரியும் அல்லது அவர்களாகவே தங்களுக்கு தெரிந்த (தாய்) மொழியில் படித்து தெரிந்துக்கொள்ளவேண்டும்.

 

ஆக, சவுலோடு சென்ற எல்லா மனிதர்களும் சத்தத்தை கேட்டார்கள், அதாவது இயேசு பவுலோடு பேசுவதை கேட்டார்கள் ஆனால், அவர்களுக்கு இயேசு என்ன சொன்னார் என்பதின் அர்த்தம் புரியவில்லை. இதனையே ஒரு இடத்தில் விவரிக்கும் போது “அவர்கள் சத்தத்தை கேட்டார்கள்” என்றும், இன்னொரு இடத்தில் சொல்லும் போது “அவர்கள் அறிந்துக்கொள்ளவில்லை (புரிந்துக்கொள்ளவில்லை)” என்றுச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், கிரேக்க மொழியில் இரண்டு இடங்களிலும் ஒரே வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. 

 

இன்னொரு கேள்வி: ஒரு இடத்தில் எல்லாரும் இருக்கும் போது, பேசும் வார்த்தைகள் ஒருவருக்கு மட்டும் புரியும், இன்னொருவருக்கு எப்படி புரியாமல் போகும்: என்ற கேள்வி எழும்பும், அதாவது சவுலுக்கு புரிந்த வார்த்தைகள் மற்றவர்களுக்கு ஏன் புரியாது? இதற்கு பதில் மிகவும் சுலபம், அதாவது இறைவன் நினைத்தால், எதையும் எப்படியும் அவரால் செய்யமுடியும், அவரால் முடியாத காரியம் ஒன்றுமில்லை, இதனை இஸ்லாமியர்கள் கூட அங்கீகரிப்பார்கள். 

 

இருந்தாலும், இன்னொரு வசனத்தை பார்ப்போம், இங்கு பேசப்பட்டது வெவ்வேறு மனிதர்களுக்கு வித்தியாசமாக கேட்டுள்ளது அல்லது புரியவில்லை. கீழ் கண்ட வசனங்களைப் பாருங்கள்:

 

 

(யோவான் 12:28-29) பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிறசத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. அங்கே நின்றுகொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்:இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.

 

 

வானத்திலிருந்து வந்த ஒரு சத்தம், சிலருக்கு இடி முழக்கத்தின் சத்தம் போலவும், சிலருக்கு தேவதூதர் பேசியதாகவும் கேட்டுள்ளது. ஆக, தேவைப்படும் போது, தேவையானதை சரியாகச் செய்ய தேவனுக்கு எதுவும் தேவையில்லை. 

 

இரண்டாம் கேள்விக்கு பதில் என்னவென்றால், சவுலும் அவரோடு வந்த எல்லாரும் சத்தத்தை கேட்டார்கள், ஆனால், சவுலுக்கு மட்டுமே கேட்ட வார்த்தைகளின் அர்த்தமும் புரிந்தது, அதனால் தான் அவர் மறுபடியும் நீர் யார் என்று கேட்கிறார் பதில் பெறுகிறார், இதனை கவனித்துக்கொண்டு இருந்த மற்றவர்கள், என்ன நடக்கிறது என்று புரியாமல் பிரமித்து நிற்கிறார்கள்.

 

 

 

3. சவுலோடு பிரயாணம் செய்த மனிதர்கள் “யாரையாவது” கண்டார்களா? இல்லையா? 

 

சவுலோடு வந்தவர்கள் சத்தத்தை கேட்டார்களே ஒழிய அவர்கள் யாரையும் காணவில்லை. இங்கு முரண்பாட்டிற்கு இடமே இல்லை. அவர்கள் வெளிச்சத்தை கண்டார்கள், மற்றும் தங்களுக்கு புரியாத சத்தத்தை கேட்டார்கள், அவ்வளவே, அவர்கள் யாரையும் காணவில்லை. 

 

இதே போல நடந்த இன்னொரு நிகழ்ச்சியை காணலாம் – தானியேல் கண்ட தரிசனம்: 

 

இறைவன் விரும்பினால், ஒருவருக்கு மட்டுமே தரிசனம் தெரியும் படிச் செய்வார். எல்லாருக்கும் தன் சத்தம் கேட்கும் படிச் செய்வார் அல்லது ஒருவருக்கு மட்டும் கேட்கும் படிச் செய்வார். கீழே உள்ள வசனத்தை கவனிக்கவும், தானியேலுக்கு மட்டுமே தரிசனம் காணப்பட்டது, மற்றவர்கள் சத்தத்தை மட்டுமே கேட்டு, பயந்து ஒளிந்துக்கொண்டார்கள்.

 

 

(தானியேல் 10:4-7) முதலாம் மாதம் இருபத்துநாலந்தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து, என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன். அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது. தானியேலாகியநான்மாத்திரம்அந்தத்தரிசனத்தைக்கண்டேன்; என்னோடேஇருந்தமனுஷரோஅந்தத்தரிசனத்தைக்காணவில்லை; அவர்கள்மிகவும்நடுங்கி, ஓடி, ஒளித்துக்கொண்டார்கள்.

 

 

இன்னும் ஒரு சில முஸ்லீம்கள், இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம், ஒருவருக்கு கேட்டு, இன்னொருவருக்கு கேட்கப்படாமல் இருப்பது எப்படி சாத்தியம், ஒருவருக்கு தெரிந்து மற்றவருக்கு தெரியாமல் இருப்பது எப்படி சாத்தியம் என்று கேட்பார்களானால்  இப்படிப்பட்டவர்களுக்கு  ஹஜரத் முஹம்மது அவர்களுக்கு “குர்‍ஆன் வெளிப்பாடு” வந்த விதங்கள் எப்படி இருந்தது என்பதை அவர்கள் வாசித்தால் போதுமானதாகும். இஸ்லாமியரின் நபியாகிய ஹஜரத் முஹம்மது அவர்களுக்கு எப்படி வெளிப்பாடுகள் வந்தது, எந்த நேரத்தில் வந்தது என்பதைப் பற்றி ஒரு விவரத்தைத் ஹதீஸ்கள் தெளிவாக சொல்லுகிறது. அதனை படித்து அப்படிப்பட்டவர்கள் முடிவு செய்யட்டும்,  எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பதை.

 

 

 

கேள்வி 4: அப் 9ம் அதிகாரத்தில் அம்மனிதர்கள் “பிரமித்து நின்றார்கள்” என்றும், அப் 26ம் அதிகாரத்தில் “அவர்கள் கீழே விழுந்தார்கள்” என்றும் உள்ளதே, இதைப் பற்றிய விளக்கம் என்ன? 

 

சவுல் மட்டும் விழுந்தாரா? அல்லது எல்லாரும் விழுந்தார்களா? எல்லாரும் விழுந்திருந்தால் ஏன் “பிரமித்து நின்றார்கள்” என்று வருகிறது என்ற கேள்வி எழும்புகிறது. 

 

மேலோட்டமாக இந்த நிகழ்ச்சியை நாம் படித்தால், நமக்கு இப்படிப்பட்ட கேள்விகள் எழும்பும், ஆனால், நம்மையே அந்த இடத்தில் சவுலோடு வந்தவர்களில் ஒருவராக நினைத்து படித்தோமானால், இது ஒரு முரண்பாடே அல்ல என்பது விளங்கும். 

 

இந்த கட்டுரையின் முதல் கேள்வியில் விளக்கியுள்ளோம், சவுலோடு கூட எல்லாரும் விழுந்தார்கள். நாம் பேசும் இடம், நமக்கு தரப்பட்ட நேரம், மற்றும் நம்முடைய பேச்சில் நாம் சொல்லவேண்டிய முக்கியமான விவரம் போன்றவற்றை மனதில் கொண்டு, ஒரு நிகழ்ச்சியை ஒரே மாதிரியாக எப்போதும் நாம் சொல்லமாட்டோம், ஒரு சில விவரங்களை விட்டுவிடுவோம். ஆகையால் எல்லாரும் விழுந்தார்கள் என்பது தான் சரியாது. 

 

அப்படியானால், அப் 9ம் அதிகாரத்தில் அவர்கள் பிரமித்து நின்றார்கள் என்று உள்ளதே அது எப்படி? 

 

நீங்கள் சவுலோடு கூட சென்றுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள், அப்போது, வெளிச்சத்தினால் எல்லாரும் கீழே விழுந்தார்கள், அதில் நீங்களும் இருக்கிறீர்கள். விழுந்த உடன் என்ன செய்வீர்கள்? விழுந்த இடத்திலேயே அப்படியே இருப்பீர்களா அல்லது சில நொடிகளில் எழும்பி நிற்க முயற்சி செய்வீர்களா? 

 

 ஒருவர் திடீரென்று ஒரு வெளிச்சம் கண்டு தடுமாறி விழும் போது, உடனே சுதாரித்துக்கொண்டு எழும்புவார்,  சவுலோடு கூட சென்றவர்கள் எல்லாரும் விழுந்தார்கள், ஆனால், உடனே எழுந்திருக்க முயற்சி எடுத்து, சில வினாடிகள் ஆனாலும் எழுந்து நின்று இருப்பார்கள். விழுந்த எல்லாரும் விழுந்த நிலையிலேயே இருக்கமாட்டார்கள். 

 

அப்படியானால், ச‌வுல் மட்டும் ஏன் எழுந்திருக்கவில்லை? 

 

சவுல் கூட எழுந்திருக்கவேண்டும், ஆனால், அவரால் முடியாத நிலை? ஏன்? அந்த வெளிச்சத்தினால், சவுலின் கண்கள் இருண்டுவிட்டது, மட்டுமல்ல, தன்னுடைய பெயரைச் சொல்லி ஒருவர் தன்னுடன் பேசுவதை அவர் கேட்டார். 

 

இப்படி சவுலே சவுலே என்று இரண்டு முறை கூப்பிட்டு, முள்ளில் உதைப்பது நல்லதல்ல என்றுச் சொன்னபோது, நீர் யார் ஆண்டவரே என்று சவுல் கேட்டபோது, அதற்கு நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே என்றுச் சொன்ன இந்த நேரத்தில் தான், மற்றவர்கள் குருடராக ஆகாத காரணத்தால், எழுந்திருந்து, சத்தம் மட்டும் வருகிறது, சவுலும் பேசுகிறார் ஆனால், யாரையும் காணவில்லையே என்று பயந்து பிரமித்து நின்றார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. 

 

சவுலும் இயேசு பேசும் அந்த ஒரு சில நிமிடங்கள் எல்லா மனிதர்களும் விழுந்த நிலையிலேயே இருப்பார்கள் என்று எண்ணுவது அறிவுடமையாகாது. 

 

ஆக, எல்லாரும் விழுந்தார்கள், உடனே எழும்ப முயற்சி எடுத்து எழும்பினார்கள், சவுலும் இயேசுவும் பேசும் அந்த நேரத்தில் பிரமித்து நின்றார்கள், இதில் எங்கும் முரண்பாடு இல்லை. 

 

ஆக, எல்லாரும் விழுந்தார்கள், உடனே எழும்ப முயற்சி எடுத்து எழும்பினார்கள், சவுலும் இயேசுவும் பேசும் அந்த நேரத்தில் பிரமித்து நின்றார்கள், இதில் எங்கும் முரண்பாடு இல்லை. நான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, அப் 9ம் அதிகாரத்தில் லூக்கா இந்த நிகழ்ச்சியை தன் புத்தகத்தை படிப்பவர்களுக்காக சொன்னது, 22ம் அதிகாரத்தில் பவுல் எருசலேமில் யூதர்களுக்கு முன்பாக சாட்சியாகச் சொன்னது, மற்றும் இந்த 26ம் அதிகாரத்தில் பவுல் பெஸ்து என்ற ரோம ஆளுநருக்கு மற்றும் அகிரிப்பா இராஜாவிற்கும் சாட்சியாக சொன்னவிவரங்களாகும்.

 

 

(Act 26:13-19) மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. இப்பொழுது நீ எழுந்து, காலுன்றிநில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன். உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்படியாதவனாயிருக்கவில்லை.

 

 

நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, இங்கு தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் பவுல் ஒன்றுவிடாமல் சொல்லவில்லை, தேவையானதை மட்டுமே சொல்லியுள்ளார். 

 

மேலேயுள்ள‌ வசனங்களை படித்தோமானால், இந்த இடத்தில் மட்டும் பவுல் எந்த விவரங்கள் தேவையற்றது என்பதால் விட்டுவிட்டார் என்பது நன்றாக விளங்கும். 26ம் அதிகாரத்தில் பவுல்:

 

1. தனக்கு கண்கள் குருடானதை அவர் சொல்லவில்லை,

 

2. அன‌னியா என்ப‌வ‌ர் மூல‌மாக ம‌றுப‌டியும் க‌ண்க‌ள் வ‌ந்த‌ விவ‌ர‌த்தைப் ப‌ற்றி அவ‌ர் சொல்ல‌வில்லை.

 

3. தான் எப்ப‌டி த‌ம‌ஸ்குவிற்கு க‌ண்க‌ள் இல்லாம‌ல் ம‌ற்றவ‌ர்க‌ளின் உத‌வியோடு வ‌ந்தார் என்றுச் சொல்ல‌வில்லை,

 

4. எத்த‌னை நாட்க‌ள் க‌ண்க‌ள் இல்லாம‌ல் இருந்தார் என்றும் சொல்ல‌வில்லை.

 

5. அதற்கு பதிலாக, தன் சாட்சியை சுருக்கமாகவும், அதே நேரத்தில் யூதர்கள் தன் மேல் சாட்டும் குற்றங்களை அவர்கள் நிருபிக்கமுடியாது என்றும் சொல்கிறார். அதனால், தான் அனனியா தனக்கு சொன்னவிவரங்களையும், தான் ஞானஸ்நானம் பெற்ற விவரத்தையும் அவர் சொல்லவில்லை.

 

6. ஆனால், லூக்கா தான் நிகழ்ச்சிகளை விவரிக்கும் போது, ஞானஸ்நானம் (அப் 9:18) பற்றியும் இதர விவரங்களையும் சொல்கிறார்.

 

 

ஆக, இந்த 26ம் அதிகாரத்தில் பல விவரங்களை எடுத்துவிட்டு, அனனியாவை பவுல் சந்தித்த பிறகு தனக்கு இயேசுவிடமிருந்து கிடைத்த தரிசனங்கள் மற்றும் கட்டளைகள் போன்றவற்றை சுருக்கமாகச் சொன்னார். பவுலின் வார்த்தைகள் எப்படி இருந்தது என்றால், நியாயம் விசாரிக்க உட்கார்ந்து இருக்கும் அகிரிப்பா இராஜாவையே கிறிஸ்தவராக மாற்றும் அளவிற்கு, தீர்க்கதரிசிகளை நீர் நம்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன், உமக்கு யூதர்களின் அனைத்து விவரங்களும் தெரியும் என்று பலவாறுச் சொல்கிறார். 

 

இந்த 25 மற்றும் 26ம் அதிகாரங்களை முழுவதுமாக படித்துப்பாருங்கள், பவுல் கொடுத்த சாட்சியின் பின்னனி என்ன என்பது தெளிவாக புரியும். பவுல், தான் எப்படி இயேசுவை ச‌ந்தித்தார் என்ற ஒரு நிகழ்ச்சியை மட்டும் சொல்லவில்லை, அதற்கும் அதிகமாக பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள், மோசே என்று ஆரம்பித்து அனேக விவரஙகளைச் சொன்னார், அதற்கு பெஸ்து ஆளுநர் “உனக்கு பயித்தியம் பிடித்துள்ளது” என்று சத்தமிடுகிறார். அகிரிப்பா இராஜாவோ, “என்னை கிறிஸ்தவாக மாற்றிவிடுவாய் போல் இருக்கிறதே” என்றுச் சொல்கிறார்(புலம்புகிறார்).

 

 

(அப் 26:24-28) இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், பெஸ்து உரத்த சத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான். அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன். இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகக் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல. அகிரிப்பா ராஜாவே, தீக்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீர் என்று அறிவேன் என்றான். அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப் பண்ணுகிறாய் என்றான்.

 

 

ஆக, இஸ்லாமியர்கள் கேட்ட கேள்விக்கு பதில் என்னவென்றால், பவுல் தன் சாட்சியை சுருக்கமாகவும், பழைய ஏற்பாட்டு விவரங்களோடும், அதற்கு பின்பு நடந்த விவரங்களோடும், தனக்காக வழக்காடிய விவரங்களே 26ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

 

பவுல் தரையிலே விழுந்து இருந்தபோதே இயேசு எல்லாவற்றையும் சொல்லவில்லை, பவுலை அனனியா சந்தித்து, கண்பார்வை அடைந்து, ஞானஸ்நானம் பெற்று, பிறகு தொடர்ந்து தனக்கு கிடைத்த இதர தரிசனங்களின் சுருக்கத்தையே பவுல் இங்கு சொல்லியுள்ளார். இது முரண்பாடோ அல்லது பிழையோ அல்ல. 

 

முடிவுரை: 

ஒவ்வொரு முறையும் நடந்த நிகழ்ச்சியை தேவையில்லாத இடங்களிலும் ஆதியிலிருந்து அந்தம்வரை யாரும் சொல்லிக்கொண்டு இருக்கமாட்டார்கள். எதற்கு முக்கியத்தும் தரவேண்டுமோ அதற்கு தந்து சுருக்கமாகச் சொல்வார்கள். இதனை புரிந்து கொள்ளாமல், இஸ்லாமிய அறிஞர்கள், ஆகா, இது தான் முரண்பாடு என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஹதீஸ்களில் காணப்படும் குர்ஆன்,மற்றும் ஹதீஸ்களின் வஹியை பற்றிய விவரங்களை இஸ்லாமிய அறிஞர்கள் சாமர்த்தியமாக மறைத்துவிட்டு பரிசுத்த வேதாகமத்தை எப்படியாகிலும் குறை காண வேண்டும் ஒரே குறிக்கோளை மட்டுமே கொண்டிருப்பதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பிவருகிறார்கள்.ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பரிசுத்த வேதாகமத்தை எந்த விதத்திலும் பாதிக்க போவதில்லை.அதன் குறையற்ற தன்மையை உறுதிப்படுத்தவே செய்கின்றது என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

 

 

 இந்த கட்டுரை ஈசா குர்ஆன்  கட்டுரையின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

Comments

  1. t.dinesh says

    February 12, 2013 at 4:50 PM

    மிக பயனுள்ள கட்டுரை ஐயா . இதை குறித்து நானும் அதிகம் யோசித்தேன். இன்றுதான் பதில்
    கிடைத்தது. நன்றி

    Reply
  2. R.Melvin Robert says

    March 11, 2013 at 7:40 AM

    Excellent Explanation brother. God Bless You. More and more muslims will come under the feet of our Lord and saviour Jesus Christ.

    Reply
  3. Milton R says

    August 10, 2013 at 11:31 PM

    True Answer

    Reply

Leave a Reply to R.Melvin Robert Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network