IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ
You are here: Home / பதில் கட்டுரைகள் / பைபிள் கேள்விகள் :இயேசு கிறிஸ்து தன்னை கடவுள் என்று சொல்லகூடாது என்று சொல்லியுள்ளாரா?

பைபிள் கேள்விகள் :இயேசு கிறிஸ்து தன்னை கடவுள் என்று சொல்லகூடாது என்று சொல்லியுள்ளாரா?

January 21, 2013

 

இஸ்லாமிய அறிஞர்களின் வாதம்

இஸ்லாமிய அறிஞர்கள் இயேசு கிறிஸ்து கடவுள் அல்ல என்பதற்காக வேதாகமத்தில் பல வசனங்களை வைத்து விவாதிப்பது உண்டு.அதில் மிகவும் பிரதானமாக மத்தேயு 7:21-24 வரையுள்ள வசனங்களை சுட்டிக்காட்டி பாருங்கள் கிறிஸ்தவர்களே சிந்தியுங்கள்.இயேசு கிறிஸ்துவே தன்னை கடவுள் என்று கூப்பிடுகிறவனை தெரியாது என்று சொல்லிவிடுவார்.பரலோகத்தில் உள்ள பிதாவின் சித்தத்தை செய்கிறவன் தான்  சொர்க  ராஜ்ஜியம்  செல்லுவான் என்று உங்கள் பைபிளே சொல்லுகிறது.நீங்கள் தான் இயேசுவை கடவுள் என்று சொல்லுகிறீர்கள் என்று குற்றசாட்டினை வைப்பார்கள்.இயேசு அப்படி போதிக்கவில்லை என்று வாதிப்பார்கள்.

 

இஸ்லாமிய அறிஞர்களின் சூழ்ச்சி

 

பொதுவாக பைபிளை விமர்சிக்கும் பொழுது மட்டும் இஸ்லாமிய அறிஞர்கள் அறிவு குறைவானவர்கள் போல நடந்துகொள்ளுவார்கள்.இதே போல் குரானின் ஒரு வசனத்தை எடுத்து நாம் விளக்கம் கொடுத்தால் உங்களுக்கு விளங்கத்தெரியவில்லை .எங்களை போன்ற அறிஞர்கள் தெளிவாக விளக்குவோம் .அதன் முன் பின் வசனங்களையும் அதற்கு தொடர்புடைய வசனங்களையும் ஏன் குரானில் இல்லாவிட்டாலும் அதற்கு வெளியே 250 வருடங்களுக்கு பிறகு தொகுக்கப்பட்டு பல பொய்யான வசனங்களையும் உள்ளடக்கிய ஹதீஸ்களின் துணைகொண்டுமே குரானை நாம் விளங்கவேண்டும் என்று சொல்லுவார்கள்.ஆனால் பைபிளுக்கு வரும்பொழுது ஒரு குறிப்பிட்ட வசனத்தை அவர்கள் விரும்பியதுபோல விளக்கம் கொடுத்து கேள்விகளை எழுப்புவது அவர்களுக்கு கைவந்த கலையாகும்.

ஆனால் அவர்களின் இது போன்ற வாதங்களை பைபிளே படிக்காதவர்களிடம் வேண்டுமானால் செல்லுபடியாகும்.தாய்மொழியில் வேதாகமத்தை படித்து புரிந்துவைத்துள்ள மக்களிடம் இவர்களின் சூழ்ச்சி எடுபடாது.

 

 

கர்த்தாவே கர்த்தாவே( Lord, Lord, )

 

 

சரி மத்தேயு 7ம் அத்தியாயத்தில்  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் என்ன என்பதை இங்கு விரிவாக ஆராய்வோம்.

உண்மையில் சொல்லப்போனால் இந்த மத்தேயு 7:21-24 வசனங்கள் கிறிஸ்து இயேசுவுடைய தெய்வீகத்தை மறுக்கிறவர்களுக்கு சவுக்கடியாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த அதிகாரத்தில் 21-24 வரை உள்ள வசனங்களுக்கு முன்பாக 15 வசனத்தில் இருந்து இந்த வசனங்களின்  ஆரம்பம் உள்ளது.அதாவது கள்ளத்தீர்கதரிசிகளை குறித்து எச்சரிக்கை செய்யும்பொழுது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த வார்த்தைகளை சொல்லுகிறார்.

மத்தேயு 7: 15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேசத்துக்கு எதிரான சிலரும் அவருடைய நாமத்தை கொண்டு அற்புதங்கள் அடையாளங்களை செய்வார்கள் என்றும், அவருடைய உபதேசங்களுக்கு மாறுத்தரமாகவும்,பரிசுத்த சத்தியங்களுக்கு முரண்பாடாகவும் போதிப்பார்கள் என்றும் அவர்களின் மூலம் வெளிப்படும் செயல்கள் மூலம் அவர்களை அடையாளம் காணலாம் என்றும் இயேசு கிறிஸ்து உபதேசிப்பதை புரிந்துகொள்ள முடியும்.மேலும் 21-24 வரை உள்ள வசனங்களில் பிதாவினுடைய சித்தத்தை செய்யாமல் வெறுமனே தன்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று கூப்பிட்டு இயேசு கிறிஸ்துவின் பெயரில் அற்புதங்களை செய்கிறவர்களின் நிலை பரிதாபத்திற்குள்ளாகும் என்பதையும் இயேசு கிறிஸ்து இங்கு தெளிவாக சுட்டிக்காட்டுகிறார்.

 

மத்தேயு

7 :21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
Not every one that saith unto me, Lord, Lord, shall enter into the kingdom of heaven; but he that doeth the will of my Father which is in heaven.

22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
Many will say to me in that day, Lord, Lord, have we not prophesied in thy name? and in thy name have cast out devils? and in thy name done many wonderful works?

23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
And then will I profess unto them, I never knew you: depart from me, ye that work iniquity.

24. ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
Therefore whosoever heareth these sayings of mine, and doeth them, I will liken him unto a wise man, which built his house upon a rock:

 

இந்த வசனங்களின் மூலம் இயேசு தன்னை கடவுளே என்று கூப்பிட கூடாது என்று சொன்னதாக இஸ்லாமிய அறிஞர்கள் புரிந்து கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.ஆனால் இயேசு தன்னை கடவுளே என்று அழைப்பதை முக்கியப்படுத்தி  இங்கு கூறாமல் பிதாவின் சித்தம் செய்வதையே முக்கியப்படுத்துகிறார்.சாதாரணமாக இயேசு கிறிஸ்து சொன்னதற்கு இஸ்லாமிய நண்பர்கள் புரியும் அர்த்தம் கொடுக்கவேண்டுமானால் இயேசு கிறிஸ்து அதை அப்படி விளக்கி இருக்கவேண்டும்.அல்லது செயல்படுத்தி இருக்கவேண்டும்.குறைந்த பட்சம் அப்போஸ்தலர்களாவது அப்படி சொல்லி இருக்க வேண்டும்.ஆனால் வேதாகமத்தை தெளிவாக வாசித்தால் தன்னை தேவன் என்றும் கடவுள் என்றும் சொல்லுவதை இயேசு கிறிஸ்து தடுக்கவில்லை என்பதை நாம் வேதாகமத்திலிருந்து அறிந்துகொள்ளலாம்.அதே போல அப்போஸ்தலர்களும் இயேசு கிறிஸ்துவை தேவன் என்று  அழைப்பதை நாம் காணமுடியும்.

 

ஆண்டவர் என்று அழைக்கும் தாவிது அரசன்

உதாரணத்துக்கு கிறிஸ்துவை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று யூத அறிஞர்களை பார்த்து கேள்வி கேட்ட இயேசு அதற்கு பதிலாக என்ன சொல்லுகிறார் என்பதை வேதாகமம் விளக்குகிறது.

மத்தேயு 22:42. கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
Saying, What think ye of Christ? whose son is he? They say unto him, The son of David.

43. அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?
He saith unto them, How then doth David in spirit call him Lord, saying,

44. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
The Lord said unto my Lord, Sit thou on my right hand, till I make thine enemies thy footstool?

45. தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
If David then call him Lord, how is he his son?

46. அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
And no man was able to answer him a word, neither durst any man from that day forth ask him any more questions.

 

இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கத்தில் உள்ள அறியாமையை நாம் இங்கு உணரலாம்.எந்த மத்தேயு சுவிஷேசத்தில் இயேசு தன்னை கடவுளே என்று சொல்ல வேண்டாம் என்று சொன்னார் என்று சொல்லுகிறார்களோ அதே சுவிஷேசத்தில் இயேசு கிறிஸ்து தன்னை ,தனக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாவீது இராஜாவே தீர்க்கதரிசனமாக ஆண்டவரே என்று கூப்பிட்டு முன்னறிவிப்பு செய்து உள்ளார் என்பதை சுட்டிக்காட்டுகிறார்.இதை கேட்டபின் ஒருவரும் அவரிடம் வாய்திறக்கவில்லை என்று வேதம் சொல்லுகிறது.

 

கடவுளே என்று அழைத்த தோமா

மேலும் அப்.தோமா அவர்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்கு பின் அவரை விசுவாசிக்காமல் அவரை தோட்டுப்பார்க்க விருப்பி தொட்டுப்பார்த்து உறுதிப்படுத்தியவுடன் அவர் சொன்ன வாசகத்தை வேதாகமத்தில் நாம் காணமுடியும்.

யோவான் 20 :28. தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
And Thomas answered and said unto him, My Lord and my God.

29. அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
Jesus saith unto him, Thomas, because thou hast seen me, thou hast believed: blessed are they that have not seen, and yet have believed.

 

இங்கு தோமா இயேசு கிறிஸ்துவை அவருக்கு முன்பாகவே என் தேவனே என் ஆண்டவரே என்று அழைப்பதை பார்கிறோம்.இங்கு இஸ்லாமிய அறிஞர்களின் வாதம் தரைமட்டமாகிவிடுகிறது.இயேசு கிறிஸ்து தன்னை கடவுளே என்று அழைக்க கூடாது என்று சொல்லி இருந்தால் அப்போஸ்தலர் தோமா அப்படி அழைத்திருக்க மாட்டார்.ஒரு வேளை அவர் தவறாக அழைத்திருந்தால் இயேசு கிறிஸ்து உடனே அதை திருத்தி என்னை கடவுள் என்று சொல்லாதே என்று சொல்லி இருப்பார்.ஆனால் இயேசு கிறிஸ்து அவருடைய வார்த்தைகளை அங்கீகரிக்கிறார்.இதிலிருந்தே மத்தேயு 7:21-24 வசனங்களில் அவர் சொல்ல வந்த விசயம்  அதுவல்ல என்பதும் மிக முக்கியமாக பிதாவின் சித்தம் செயல்படுத்தப்படவேண்டும் என்பதையும் சொல்லுகிறார் என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.

 

கடவுளே என்று அழைத்த அப்போஸ்தலர்கள்

இயேசு கிறிஸ்துவுடைய அப்போஸ்தலர்களும் அவர்களுடைய சீடர்களும் அவரை தேவன் என்று அழைத்துள்ளனர்.உதாரணத்துக்கு பல வசனங்கள் உண்டு அவைகளை கீழே காணலாம்.

யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

அப்போஸ்தலர் 20:28 ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.

ரோமர் 9:5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்.

I தீமோத்தேயு 3:16 அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.

 

தீத்து 2:13 நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.

II பேதுரு 1:1 நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:

I யோவான் 5:20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும்நித்தியஜீவனுமாயிருக்கிறார்.

 

பிதாவின் சித்தம் என்ன?

இந்த வசனங்கள் எல்லாம் நமக்கு தெளிவு படுத்துவது என்னவென்றால் இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுபோல் மத்தேயு 7:21-24 வரையுள்ள வசனங்கள் இயேசு கிறிஸ்துவை கடவுளே என்று என்று கூப்பிடுவதை முக்கியப்படுத்தாமல் பிதாவின் சித்தம் செய்யாதவர்களையே முக்கியப்படுத்தி சொல்லப்பட்டுள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

பிதாவின் சித்தம் என்ன என்று நாம் வேதாகமத்தை வாசித்துப்பார்த்தால் தெளிவாக விளங்கும்.யோவான் சுவிஷேசத்தி 3:16 வசனம் பிதாவின் சித்தம் என்ன என்பதை தெளிவாக விளக்குகிறது.

யோவான் 3 :16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

 

இயேசு கிறிஸ்துவின் மூலமாக நித்திய ஜீவனை அருள வேண்டு என்பதே பிதாவின் சித்தமாகும்.அதை இன்னும் விளக்கமாக கீழ்காணும் வசனத்தின் மூலம் உணரலாம்.

 

யோவான் 6 :40. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.

 

இயேசு கிறிஸ்துவை தன்னுடைய பாவத்துக்கு மரித்தார் என்று விசுவாசித்து அவர் மூலமாகவே நித்திய ஜீவன் கிடைக்கும் என்ற அறிவை அடையாமல் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் பெயரை வைத்து என்ன ஏமாற்றினாலும் வேதாகமம் அவர்களை கள்ள தீர்க்கதரிசி என்றே அடையாளம் காட்டுகிறாது.இயேசு கிறிஸ்துவின் பெயரை சொல்லி அவரை சாதாரண தீர்க்கதரிசி என்றோ,சாதாரண மனிதர் என்றோ சொல்லி இயேசுவை நாங்கள்தான் பின்பற்றுகிறோம் என்று சொல்லியும் உள்ளத்தில் அவரை இரட்சகராகவும் மீட்பராகவும்  நம்பாமல் இருப்பவர்களை தான் ஆண்டவர் இங்கு தெளிவாக கள்ளதீர்க்கதரிசிகள் என்று சொல்லுகிறார்.

 

முடிவுரை

 

பிதாவின் சித்தப்படி இயேசு கிறிஸ்துவை கண்டு அவர் நமக்காக பலியானார் என்று விசுவாசித்து அவர் மூலமாக கடைசி நாட்களில எழுப்பப்பட்டு நித்திய ஜீவனை சுதந்தரிப்போம் என்ற நம்பிக்கை இல்லாதவர்களை பார்த்து சொல்லப்பட்ட வசனம் தான் மத்தேயு 7:21-24 வரை உள்ள வசனங்கள் என்பதை நாம் திட்ட வட்டமாக அறிந்துகொண்டோம்.இதை வாசிகின்ற அருமையான இஸ்லாமிய நண்பர்களே பிதாவினுடைய  சித்தம் செய்ய நீங்கள் விரும்பினால் இயேசு கிறிஸ்துவை மெய்யான இரட்சகராகவும் மீட்பராகவும் ஏற்றுகொள்ள உங்களை அழைக்கிறோம்.அவர் உங்களுக்காகவும் இரத்தம் சிந்தியுள்ளார்.இன்றைக்கும் உயிரோடு கூட சொர்க இராஜ்ஜியத்தில் வீற்றிருக்கிறார்.நம்முடைய ஜெபங்களை கேட்கிறவராக  மட்டுமல்ல நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராகவும் இருக்கிறார்.அவர் மூலமாகவே முடிவில்லாத வாழ்க்கையை பெற முடியும் .சொர்க ராஜ்ஜியம் செல்ல முடியும்.இயேசு கிறிஸ்துவின் சாந்தியும் சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக.ஆமேன்

Comments

  1. D.S.D says

    January 24, 2013 at 1:19 PM

    *இயேசு கிறிஸ்து தன்னை கடவுள் என்று சொல்லக்கூடாது என்று சொல்லியுள்ளாரா?என்ற
    கேள்விக்கு மறைமுகமாக தன்னை கடவுள் என்று சொல்லியுள்ளார் என்பதை நமக்கு நன்றாக‌
    தெறிந்த வசனமாகிய யோவான் 14:8,9ல் பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்? என்று இயேசு தன்னை தேவன் என்று மறைமுகமாக சொல்வதை
    பார்த்தும் அவர் கடவுள் என்கிற உணர்வு இன்னும் அநேகருக்கு வராமல் இருப்பது, இன்னும் அவர்கள் மெய்யான தேவனை மெய்யாகவே தெடாமல் இருக்கிறார்கள் என்பதைக்காட்டுகிறது.

    *மேலே உள்ள கட்டுரையில் மதிப்பிற்குரிய சகோதரன் ADMIN அவர்கள் அதிகமான வசனங்க‌
    ளை கொடுத்து விளக்கியுள்ளது, இயேசு தேவன் என்பதை நன்றாக காட்டுகிறது. இதையெல்லாம் படித்தும் இயேசுவை தேவனென்று ஏற்றுக்கொள்ளாதவர்கள், தைரியம் இல்லாதவர்கள் என்றுதான் சொல்லமுடியும்.ஏனென்றால் உண்மையை ஒத்துக்கொள்ளவே தைரியம் வேண்டும் இந்த தைரியம் இல்லாதவர்கள் விவாதம் பண்ணியும் கடைசியில் எதையோ பின்பற்றி மோசம் போவார்கள் என்பதுதான் நிஜம்.!

    *சரி,இயேசு ஏன் தன்னை கடவுளென்று மறைமுகமாக வெளிப்படுத்தினார்?மத்தேயு 17:1,2,3,
    4,5,6,7,8,9,ல் ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின் மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. அப்பொழுது மோசேயும், எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள் அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. சீஷர்கள் அதைக்கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள். அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள் பயப்படாதேயுங்கள் என்றார். அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில் இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார். இப்படியான காட்சியைக் கண்டவர்களிடம் இயேசு ஏன் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்?
    காரணம் அவர் கடவுள் என்பது எல்லோருக்கும் அப்பொழுது தெறியவேண்டாம் என்பதற்காக.

    *மாற்கு 8:27,28,29,30,31.ல் பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு, பிலிப்புச் செசரியா பட்டணத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்றுகேட்டா. அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான். அப்பொழுது, தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார். அல்லாமலும், மனுஷகுமாரன் பலபாடுகள் பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்று நாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்க வேண்டியதென்றுஅவர்களு க்குப் போதிக்கத்தொடங்கினார். என்று பார்க்கிறோம்.

    இந்த இடத்திலும் ஒருவருக்கும் சொல்லக்கூடதென்று உறுதியாக கட்டளையிட்டார் என்பதை நாம் பார்க்கிறோம். இதற்கு கார‌ணம் என்ன ?? கடவுள் மனிதனாய் வந்து நம் மத்தியில் வாசம்பண்ணி நம்மை இரட்சிப்பார் என்று வேததில் சொல்லப்பட்ட மேசியா இவர்தான் என்று மூப்பர்களும் பிரதான ஆசாரியர்களும் வேதபாரகர்களும் தெறிந்துகொண்
    டால், அவர்கள் இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்க மாட்டார்கள். அதுவே இயேசு சிலுவயில் அறையப்படாதபடிக்கு தடையாக வந்து நிற்கும். ஆனால், இயேசு சிலுவையில் மரித்துதான் உலகத்திற்கு இரட்சிப்பைக் கொண்டுவரவேண்டும் என்பது இயேசுவின் நியதி, அதுவே தேவ சித்தம்!

    *அதனால்தான் அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார். அவரை தேவனென்று கண்டுகொண்டவர்க ளாகிய அவருடைய சீடர்கள் இயேசுவின் காட்டளையின்படியே பிற்காலத்தில் அவரை தேவனென்று உலகுக்கு அறிவிக்கிறார்கள். ADMIN அவர்களின் கட்டுரையிலும் இதை நாம் பல வசனங்களில் பார்க்கிறோம்.

    *மேலும் இரத்தின சுருக்கமாய் ஒரு வசனத்தை மட்டும் இங்கு பதிவ செய்கிறேன்.
    1யோவான் 5:20ல் அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார். என்று இயேசுவை நேரடியாக பார்த்த யோவான் இவரே மெய்யான தேவனென்று சொல்கிறார். ஆகவே;

    *இயேசு மெய்யான தேவனென்று எங்கள் வேதம் சொல்வதால் அதை உங்களுக்கும் அவர்
    தேவனென்று அறிவிக்கிறோம். இதை எற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாமல் போய்
    எதைஎதையோ பின்பற்றி ஏமாந்து போவதும் உங்கள் உள்ளத்தில்தான் இருக்கிறது.!!!

    Reply
  2. PAUL SUBBIAH says

    February 15, 2013 at 8:18 AM

    we need not answer to muslims. because they are our wicked brothers origin from Abraham.
    Because already bible says that they would be wicked in all ways. so we have to pray for redeem only.

    Reply

Leave a Reply to D.S.D Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network