IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ
You are here: Home / பதில் கட்டுரைகள் / பைபிள் கேள்விகள்:நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன் என்று இயேசு கிறிஸ்து சொன்னது ஏன்?

பைபிள் கேள்விகள்:நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன் என்று இயேசு கிறிஸ்து சொன்னது ஏன்?

January 12, 2013

 நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? (மத்தேயு 19:17)

 

இயேசுக்கிறிஸ்து கடவுள் இல்லை அவர் தன்னையே நல்லவன் அல்ல என்று சொல்லியுள்ளார் என்று இஸ்லாமிய அறிஞர்கள்  சுட்டிக் காட்டும் இன்னுமொரு வேதவசனம், “தம்மை நல்ல போதகரே“ என்று அழைத்தவனுக்கு இயேசுக்கிறிஸ்து கொடுத்த பதிலாகும் அதற்கு அவர்:

“நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே (மத்தேயு 19:17, மாற்கு 10:18)

என்று இயேசுக்கிறிஸ்து கூறியமையால் அவர் நல்லவர் அல்ல என்றும், இயேசுக்கிறிஸ்துவின் கூற்றின்படி தேவன் மட்டுமே நல்லவராயிருப்பதால், இயேசுக்கிறிஸ்து தேவன் அல்ல. அவர் சாதாரண நபி என்றும் இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர்.   எனினும் இயேசுக்கிறிஸ்துவின் கூற்று இத்தகைய அர்த்தம் கொண்டதல்ல. தாம் நல்லவர் இல்லை என்று அவர் இவ்வசனத்தில் கூறவில்லை. மாறாக தேவன் மட்டுமே நல்லவர் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். 

 

இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளில் ஒரு கேள்வியும் இருப்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். தன்னை நல்ல போதகரே என்று தம்மை அழைத்தவனிடம் (மத். 19.16) “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்?“ என்று கேட்கிறார். அதாவது, நீ என்னை இவ்வாறு   அழைப்பதற்கான காரணம் என்ன என்று அவனிடம் கேட்கிறார். ஏனென்றால் “அக்காலத்தில் யூதர்கள் தங்கள் மதத்தலைவர்களை இவ்வாறு “நல்ல போதகரே“ என்று அழைப்பதில்லை.தேவனை மட்டுமே இவ்வாறு அழைக்க முடியும் என்பதே அக்காலத்து யூதரது கருத்தாயிருந்தது. எனவே, அவன் தேவனுக்கு மட்டுமே உரிய தன்மையை அதாவது நல்லவர் என்னும் தன்மையை இயேசுக்கி்றிஸ்துவுக்கு உபயோகித்தமையால் நீ என்னை இவ்வாறு நல்லவன் என்று சொல்வதற்கான காரணம் என்ன? தேவனை அழைப்பதைப் போல நீ என்னை ஏன் அழைக்கிறாய்? என்று அவனி்டம் கேட்டார். இதனால்தான் தேவன் மட்டுமே நல்லவர் என்பதையும் இயேசுக்கிறிஸ்து அவனுக்குச் சுட்டிக் காட்டியுள்ளார். “அவன் தம்மை நல்லவன் என்று அழைக்க வேண்டுமானால், தாம் தேவன் என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை அவனுக்கு உணர்த்துவதற்காகவே இயேசுக்கிறிஸ்து இவ்வாறு கூறியுள்ளார்.

 

இயேசுக்கி்றிஸ்து வார்த்தைகள் “நான் தேவனாக இல்லாதுவிட்டால் நீ என்னை இவ்வாறு அழைக்க வேண்டாம். ஏனென்றால் தேவன் மட்டுமே நல்லவர் எனும் அர்த்தமுடையது எனவே, “இவ்வசனம் இயேசுக்கி்றிஸ்து தேவத்துவத்தை மறுதலிக்கவில்லை. மாறாக அதை மறைமுகமாக அறிய தருகிறது.

 

இந்த கட்டுரை Dr.M.S .VASANTHA KUMAR அவர்களின் கட்டுரையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.

Comments

  1. D.S.D says

    January 15, 2013 at 9:47 PM

    நீ என்னை நல்லவன் என்று ஏன் சொல்லனும் ? தேவன் ஒருவர் தவிற நல்லவன் ஒருவனும் இல்லையே என்று இயேசு ஏன் சொன்னார் என்பது மிக சிந்திக்க வேண்டிய விஷயம்.

    1. ‍முதகலாவது அந்த வாலிபன் சொன்ன அந்த வார்த்தைக்கு இயேசு மறுப்பு தெறிவிக்கிறார்.

    2. இரன்டாவது தேவன் ஒருவர்தான் நல்லவர் என்பதையும், மனிதர்கள் நல்லவர்கள் இல்லை என்பதையும், நல்லவர் என்கிற வார்த்தைக்கு தகுதியானவர்கள் மனிதர்கள் இல்லை என்பதையும் இயேசுவின் வார்த்தை சுட்டிக்காட்டுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள‌வேண்டும்.

    3.மூன்றாவது இயேசு ஏன் இந்த வார்த்தையை தனக்கு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால்; எந்த ஒரு போத‌கனும் பிறந்த‌து முதல் நல்லவனாக இருந்தது இல்லை. வளர்ந்து பெரியவ‌னாகி மனம் திருந்தி பிறகு போதகர் என்று அழைக்கப்படலாம்,ஆனால் அவர்கள் பாவிகளாய் இருந்து வந்தவர்களே.அந்த வகையில் பார்க்கும் பொழுது நல்லவன் ஒருவனும் இல்லையே என்று இயேசு சொன்ன வார்த்தையானது உன்மையாகிறது.(சங் 14:1.ரோமர் 3:10,11,12,23.)

    மேலும்,அந்த வாலிபன் சொன்ன வார்த்தை எல்லா போதகர் போல இவரும் ஒரு போதகர் என்கிற நிலையில் மனிதர்களோடு ஒப்பிட்டு இருந்தபடியினால், இயேசுவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் இயேசு மனித வடிவில் இருந்தாலும் அவரே தேவனாகவும் இருந்தார்.(யோவான் 14:8,9.)எனவே இந்த வசன‌த்தின் மூலம் அவர் தேவன் என்பதையும்,அவரே அந்த நல்ல தேவன் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

    > குறிப்பு எம்.எஸ். வசந்தகுமாரின் கட்டுரை தவரானது என்பதையும் டி.எஸ்.டி என்கிற நான் தெறிவித்துக்கொள்கிறேன்.

    Reply
    • admin says

      January 16, 2013 at 5:12 AM

      ///> குறிப்பு எம்.எஸ். வசந்தகுமாரின் கட்டுரை தவரானது என்பதையும் டி.எஸ்.டி என்கிற நான் தெறிவித்துக்கொள்கிறேன்.////நீங்கள் எழுதிய விளக்கம் எம்.எஸ். வசந்தகுமார் அவர்களின் கட்டுரைக்கு எந்தவிதத்திலும் முரண்படவில்லை.மேலும் தவறு என்று சொல்லும் நீங்கள் எது தவறு என்று சுட்டிக்காட்டுங்கள்

      Reply
      • கிறிஸ்துவின் ஊழியன் says

        March 10, 2013 at 10:58 AM

        //இயேசுக்கிறிஸ்து கூறியமையால் அவர் நல்லவர் அல்ல என்றும், இயேசுக்கிறிஸ்துவின் கூற்றின்படி தேவன் மட்டுமே நல்லவராயிருப்பதால், இயேசுக்கிறிஸ்து தேவன் அல்ல. அவர் சாதாரண நபி என்றும் இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர்//

        ஆம், இயேசு நாதரின் கூற்று உண்மையே. இஸ்லாமிய அறிஞர்கள் புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

        “நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்” – யோவான் 10: 11

        “நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்” – யோவான் 10:14,15

        இஸ்லாமிய சகோஸ்… தேவன் ஒருவரே நல்லவராய் இருக்க எதனால் ஏசு தன்னை நல்லவர் என்றார்?

        Reply
  2. colvin says

    January 16, 2013 at 10:53 AM

    கட்டுரையை ஒழுங்காது வாசி்க்காது எழுதும் பதிவர்களில் இவரும் ஒருவர். மற்றும் மேம்போக்காகவே இவரது விளக்கம் அமைந்துள்ளது.

    Reply
  3. robert dinesh says

    August 28, 2014 at 4:22 PM

    http://www.hichristians.com/2013/10/blog-post.html?showComment=1409228433584#c3053257782529019372

    யூதர்கள் தேவனை மட்டுமே நல்லவர் என்று கூறுவார்கள். அப்படியிருக்க இயேசுவை ஒரு மனிதன் நல்ல போதகரே என்று அழைக்கிறான்.

    அவனைப் பார்த்து தான் யேசு கேட்கிறார் தேவனை மட்டுமே நல்லவர் என்று கூறும் சமுதாயத்திலுள்ளவனே நீ என்னை நல்லவன் என்று கூறுவதன் மூலம் என்னை தேவனென்று ஏற்று கொள்கிறாயா ? என்னும் தொனியிலேயே கேட்டார்

    இயேசு தேவன் என்பதற்கும், அவர் பாவம் செய்யாதவர் என்பதற்கும் ஏகப்பட்ட ஆதார வசனங்கள் வேதாகமத்தில் உண்டு. அவர்களுடைய கண்ணில் பட்டது இவ்வசனம் மட்டும்தான்.

    அவ்வசனத்தை மேற்கோள் காட்டி யேசுவை நல்லவரில்லை என்று கூறுபவர்கள் யேசு தன்னுடைய வாயினால் சொன்ன இந்த வசனத்தை ப்பற்றி மூச்சு விடுவதில்லை.

    இங்த வசனத்தை வாசியுங்கள்.

    யோவான் 8:46 என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.
    “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?“ என்று தைரியமாக கேட்ட வேறு யாராவதொருவர் இவ்வுலகத்தில் இருந்ததாக கேள்விப் பட்டுள்ளீர்களா?

    இவ்வசனத்தை சொல்லும் தகுதி இயேசுவுக்கு மட்டுமே உரியது. இயேசு மனிதனாக பிறந்த தெய்வம்…….…

    Reply

Leave a Reply to D.S.D Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network