IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ
You are here: Home / பதில் கட்டுரைகள் / இயேசு கிறிஸ்து ஓடி ஒளிந்தார்-பிஜே அவர்களின் வாதத்துக்கு மறுப்பு.

இயேசு கிறிஸ்து ஓடி ஒளிந்தார்-பிஜே அவர்களின் வாதத்துக்கு மறுப்பு.

January 11, 2013

என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27.46)

இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் பிஜே அவர்களின் வாதம்

இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போது “என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்“ என்று கூறியது அவர் மரிக்க விரும்பவில்லை என்பதற்கான ஆதாரமாய் உள்ளது . அவர் ஓடி ஒளிந்தார் என்று பைபிள் சொல்லுகிறது.இயேசு மரிக்க விரும்பாததினாலேயே காட்டிக்கொடுக்க வேண்டிய அவசியமாகிறது.காட்டிக்கொடுக்கப்பட்டார் என்பதே அவர் சிலுவையில் அறைய விரும்பவில்லை என்பதை காண்பிக்கிறது.மேலும் அவர் வந்ததே ஜனங்களின் பாவங்களை சுமக்க என்றால் சிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் சந்தோசமாகதானே அதை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.ஆனால் அதற்கு மாறாக அவர் ஏன் இப்படி கூறினார்.எனவே இயேசு சிலுவையில் பலியாகவில்லை என்று இஸ்லாமிய அறிஞர்கள் வாதங்களை முன்வைக்கிறார்கள்.குறிப்பாக மவ்லவி பிஜே அவர்கள் பேசிய ஒரு வீடியோவை இதில் காணலாம்.

இவை அறிவுப்பூர்வமான கேள்விகளா?

பைபிளில் இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி மக்களை ஏமாற்ற பார்கிறார்கள் இஸ்லாமிய அறிஞர்கள்.முதலாவது பிஜே அவர்கள் இந்த வீடியோவில் இயேசு பலியாக வந்தது உண்மையானால் நேரக பிலாத்துவிடம் போய் பிலாத்து மன்னரே என்னை பலியிடுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும் அல்லவா?ஏன் அப்படி செய்யவில்லை என்று ஒரு கேள்வியை கேட்கிறார்.ஆனால் சாதாரணமாக சிந்தித்திருதால் கூட இப்படிப்பட்ட கேள்வி கேட்டிருக்க முடியாது.இயேசு கிறிஸ்து அப்படி சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும்.அவரை சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள்.புத்தி சுயாதினமில்லாதவர் என்று சொல்லி அனுப்பி இருப்பார்கள்.இப்படிப்பட்ட ஒரு கேள்வி, ஏதாவதும் கேட்கவேண்டும் என்னும் நோக்கத்திலேயே கேட்கப்படுகிறது.அறிவுபூர்வமான கேள்வியல்ல.

இயேசு ஓடி ஒளிந்தார் என்பது உண்மையா?

இயேசு கிறிஸ்து சிலுவையில் பலியாக விரும்பவில்லை,ஓடி ஒளிந்தார் என்று சொல்லப்படும் கூற்றானது எவ்வளவு அறிவீனமானது என்பதை சுவிஷேச புத்தகங்கள் நமக்கு விளக்கி காட்டுகிறது.

மாற்கு 14:41 அவர் மூன்றாந்தரம் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.

யோவான் 12:27 இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.

யோவான் 13:1 பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.

அவர் வேளைக்காக காத்திருந்தார் என்பது மேலே உள்ள வசனங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுத்துகிறது.மேலும்
சிலுவை மரணம் என்பது இயேசு எதிர்பார்த்திருந்த ஒன்றே.ஆனால் அதற்கான வேளைக்காக காத்திருந்தார்.

சரி ஏன் காட்டிக்கொடுக்கப்படவேண்டும் என்னும் கேள்விக்கும் வருவோம்.இயேசு கிறிஸ்துவை பகலில் பிடிக்க யூத ஆசாரியர்களுக்கு தைரியம் இருக்கவில்லை.பல சமயங்களில் அவரை பிடிக்க நினைத்தும் ஜனங்களுக்கு பயந்து அவர்கள் அதை செய்யவில்லை.

மேலும் இயேசு கிறிஸ்துவும் தன்னை பிடிக்க வந்தவர்களிடம் இதை கேட்டுள்ளதை நாம் வாசிக்கலாம்.

மத்தேயு 26:55 அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறது போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே.

அப்படியானால் ஏன் காட்டிகொடுக்க வேண்டும் என்று நாம் சிந்தித்தால் தெளிவாகபுரியக்கூடியதே.சாதாரணமாக ஒருவரை பலமுறை முயற்சித்தும் கைது செய்ய முடியாமல் போகும் பொழுது ஒரு வாய்ப்பு கிடைக்கும் பொழுது சரியாக பயன்படுத்த வேண்டும் என்பது யூத ஆசாரியர்களின் எண்ணமாக இருந்தது என்பதை அறிந்துகொள்ளலாம்.இதை நன்கு அறிந்திருந்த யூதாஸ் அவர்களிடம் சென்று காட்டிக்கொடுக்க சம்மதிக்கிறான்.அதற்கான திட்டமிட்டு ஜனக்கூட்டம் இல்லாத இடத்தில் காட்டிக்கொடுக்கவும் முயற்சி செய்து வருகிறான்.

லூக்கா 22:4 அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத் தலைவர்களிடத்திலும் போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான்.

லூக்கா 22:6 அதற்கு அவன் சம்மதித்து, ஜனக்கூட்டமில்லாத வேளையில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான்.

அதே போல் அவன் காத்திருந்த ஒரு தருணம் தான் இயேசு கிறிஸ்து தன்னுடைய வேளை வந்தது என்று ஆயத்தமாக இருந்த கெத்சமனே தோட்டம்.

மாற் 14: 41. அவர் மூன்றாந்தரம் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.

42. என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள் போவோம் என்றார்.

இங்கு முதலில் பிரதான ஆசாரியர்களின் வேலைக்காரர்களை எதிர்கொண்டு போன இயேசு கிறிஸ்து நீங்கள் தேடுகிற இயேசு நான் தான் என்று சொன்ன பொழுதும் ஏமாற்றப்பட்டுவிடுவோமோ என்று பயந்து யூதாஸின் கண் அசைவுக்காக அவர்கள் காத்திருந்தனர்.யூதாஸும் தன்னுடைய வார்த்தையின் படியே இயேசு கிறிஸ்துவை முத்தமிட்டு காட்டிகொடுத்தான்.எனவே இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தை கண்டு ஓடி ஒளியவோ பயந்துவிடவோ இல்லை என்பதை வேதாகமம் தெளிவாக சொல்லுபொழுது இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பாக மவ்லவி பிஜே அவர்களை போன்றவர்கள் துணிந்து பொய்யை இட்டுக்கட்டுகிறார்கள்.

இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போது “என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்“ என்று கூறியது ஏன்?

முதலாவது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகில் மனிதனாக பிறப்பது முதல் அவருடைய மரணம் உயிர்தெழுதல் வரை பல தீர்க்கதரிசிகள் மூலம் தீர்க்கதரிசனமாக அறிவிக்கப்பட்டதாகும்.

குறிப்பாக அதில் சங்கீதங்களின் புஸ்தகம் 22 அதிகாரத்தில் பல வசனங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் போது நிறைவேறியதாகும்.சங் 22:1 வசனத்தின் முதல் பகுதி இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த வார்த்தையாகும்.

சங்கீதம் 22 :1. என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?

அந்த சங்கீதத்தை முழுமையாக இணையதளத்தில் வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் சங்கீதம் 22

இந்த வார்த்தைகள் இயேசு சிலுவையில் மொழிந்தது ஒரு தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாகும்.ஏதோ தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டுவிட்டது,அதனால் அந்த வார்த்தையை வெறுமனே இயேசு கிறிஸ்து சொல்லவில்லை.உண்மையில் இயேசுக்கிறிஸ்துவுக்கு சிலுவையில் என்ன நடந்து என்பதை நாம் அறிந்திருந்தால் மட்டுமே அவரது இக்கூற்றை சரியாக புரிந்து கொள்ள முடியும். அதேசமயம், “ தேவனோடு எப்போதும் ஐக்கியமாயிருந்த தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து தேவனால் கைவிடப்பட்டதை புரிந்து கொள்ளாத வரையில், அவரது சிலுவை மரணத்தையும் நம்மால் சரியாக விளங்கிக் கொள்ள முடியாது. இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போதே எத்தகைய நிலையில் இருந்தார் என்பதை அடிப்படையாகக் கொண்டே அவரது இக்கூற்றை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே ஒரு கட்டுரையில் இயேசு கிறிஸ்துவுக்குள் தெய்வீக தன்மையோடு கூட மனிதத்தன்மையும் எப்படி இணைந்திருந்தது என்பதை குறிந்து விளக்கியுள்ளோம்.அதன் தொடுப்பு:அந்த நாளை குமாரனும் அறியார்

மனிதனாக வந்த தேவன் எப்படி முழு மனித தன்மையோடு கூட செயல்பட்ட போது அவருக்குள் இருந்த தெய்வீக நிலையை நாம் அறிந்துகொண்டோம்.அதை போலவே அவர் தன்னுடைய தெய்வத்தன்மையை மனிதத்தன்மைக்குள் அடக்கிகொண்டார் என்பதையும் அறிந்துகொண்டோம்.அப்படிப்பட்ட மனிதனாக அவதரித்த இயேசு கிறிஸ்து சிலுவையில் மனிதர்களின் பாவங்களை சுமந்த பொழுது என்ன நடந்தது என்பதை முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

சிலுவையில் இயேசு நமக்காக பாவமானார் என்று வேதம் கூறுகிறது. (2 கொரி. 5:21). பரிசுத்தமான தேவன் பாவத்தை வெறுப்பவராகவும் (சங். 5:5, 11:5, சக. 8:17) அதைப் பார்க்க விரும்பாதவராகவும் இருக்கிறார். (ஆப. 1:13). பாவம் தேவனை மற்றவர்களிடமிருந்து பிரித்து விடுகிறது. (ஏசா. 59:2).

இதனால் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் உலக மாந்தர் அனைவருடைய பாவங்களையும் சுமந்து தீர்த்து நமக்காகப் பாவமாகியபோது (2 கொரி. 5:21, யோவா. 1:29) அவர் தேவனால் கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தார்.
எப்படி சிருஷ்டிகளின் மேல் உள்ள அன்பால் பிதாவகிய தேவன் குமாரனை பூமிக்கு அனுப்பினாரோ அதே போல் பாவத்தின் மேல் உள்ள வெறுப்பின் காரணமாக அதுவரைகாலமும் இயேசுவுக்கும் தேவனுக்குமிடையில் இருந்த அந்நியோன்ய சம்பந்தமான உறவு அச்சந்தர்ப்பத்தில் இல்லாமல் போய்விட்டது. “பாவத்திற்கான தேவ தண்டனையின் கடுமையான பகுதி, தேவனிடமிருந்து முற்றிலுமாய் அப்புறப்படுத்தலாகும். இயேசுக்கிறிஸ்து மானிட பாவங்களுக்கான முழுமையான தண்டனையையும் சிலுவையில் அனுபவித்தமையால் அச்சந்தர்ப்பத்தில் தேவனோடிருந்த உறவு துண்டிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இருந்தார்.

பாவமற்ற இயேசுக்கிறிஸ்து சிலுவையில் பாவியைப் போல மரித்து அதன் கொடூரமான தனிமையை அனுபவித்தார். உண்மையில், ” இயேசுக்கிறிஸ்துவுக்கும் தேவனுக்குமிடையில் அதுவரை காலமும் முறிவடையாமல் இருந்த உறவு சிலுவையில் முறிவடைந்தது. இதனால் “சிலுவையில் இயேசுக்கிறிஸ்து தனிமையிலேயே இருந்தார். இதனால் “சிலுவையில் மரிக்கும்போது “என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று அதிக சத்தத்தோடு கத்தினார். தேவனால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மாந்தரை தேவனோடு ஒப்வுரவாக்குவதற்காக. இயேசுக்கிறிஸ்து அம்மக்கள் இருந்த இடத்திற்கே அதாவது தேவனால் கைவிடப்பட்ட நிலைக்கே சென்று அவர்களை மீட்டுள்ளார். இதனாலேயே சிலுவையில் மரிக்கும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இதன் மூலம் கடவுள் மனிதன் மேல் வைத்த அன்பையும் அதே நேரத்தில் பாவத்தின் மேல் உள்ள வெறுப்பையும் உணர்த்திக்காட்டினார்.

இயேசு கிறிஸ்துவின் இந்த சொல்லானது சிலுவை மரணத்தை விரும்பாமல் சொல்லப்பட்டதல்ல உலக மாந்தர்களின் பாவத்திற்கான விளைவை நினைத்து சொல்லப்பட்டதாகும்.இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தை பல வசனங்கள் மூலம் ஏற்கனவே முன் குறித்து இருந்தார்.எனவே அவர் சிலுவை மரணத்தை நம்மை மீட்கும் படி விரும்பியே ஏற்றுகொண்டார் என்பது தெளிவான காரியமாகும்.

முடிவுரை

அன்பான சகோதர சகோதரிகளே இதுபோல் தான் இஸ்லாமிய அறிஞர்கள் பைபிளின் எதோ சில வசனங்களை மட்டும் எடுத்து அதை தங்களின் சுய இஷ்டம் போல விளக்கம் கொடுத்து மக்களை திசைதிருப்ப முயற்சி செய்து வருகிறார்கள்.ஆனால் தேவனாகிய கர்த்தர் நிச்சயம் அவர்களின் சூழ்சிகளை வெளியரங்கமாக்குவார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.அவர்கள் எழுப்பும் எந்த கேள்விகளையும் நமது வேதாகமத்தின் ஆதாரத்திலேயே தேவனுடைய துணை கொண்டு முறியடிக்க முடியும் என்பதை கடந்த காலங்களில் தேவன் உறுதிப்படுத்தி வருகிறார்.அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் நாம் சொல்லிகொள்லுவது என்னவென்றால் அறிஞர்கள் சிலர் தப்பும் தவறுமாக வேதாகமத்தை புரிந்து அதை பிரசங்கித்து வருகிறார்கள்.தயவு செய்து அவர்களின் பேச்சை கேட்பதோடு நிறுத்திவிடாமல் அது உண்மையா என்று பரிசுத்த வேதாகமத்தை வாங்கி முழுமையாக வாசித்து தெளிவடைய வேண்டுகிறோம்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மேலும் உண்டாயிருப்பதாக.ஆமேன்.

Comments

  1. RichardAsir says

    January 11, 2013 at 1:33 PM

    கடைசி காலங்களில் எழும் கள்ள உபதேசிகளிடமிருந்து தேவன் தன் ஜனத்தை காக்க வல்லமையான ஊழியர்களை எழுப்புவது கண்டு தேவனை துதிப்போமாக! இந்த கட்டுரை அருமை இஸ்லாமிய மக்களுக்கும் வேதத்திலிருக்கும் சத்தியத்தை அறிய உதவிட தேவனிடம் ஜெபிப்போமாக!ஆமென்.

    Reply
  2. johnsondurai mavadi says

    January 11, 2013 at 2:59 PM

    மிகவும் புரோஜினமாய் இருந்த்தது.இதை நம்முடைய கிறிஸ்தவ நண்பர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டும் அப்போதுதான் கயவர்களின் சூழ்சிகளை அப்பட்டமாக வெளிப்படுத்தமுடியும்

    Reply
  3. jaba says

    January 13, 2013 at 2:44 AM

    praise god . pj down down

    Reply
  4. RUN_AWAY says

    January 13, 2013 at 1:58 PM

    டேய் கோயம்புத்தூர் வெங்கடேசா !!!
    \\ ஆனால் சாதாரணமாக சிந்தித்திருதால் கூட இப்படிப்பட்ட கேள்வி கேட்டிருக்க முடியாது.இயேசு கிறிஸ்து அப்படி சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும்.அவரை சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள்.புத்தி சுயாதினமில்லாதவர் என்று சொல்லி அனுப்பி இருப்பார்கள் //.

    இது என்ன பதிலா !!!
    உனக்கு என்ன புத்தி சுவாதீனம் இல்லையா ?????
    முதல ஒழுங்கா பதில் எழுத கத்துக்க.
    பன்னாடை !!!!!

    Reply
    • Deepak sharma says

      December 15, 2013 at 8:59 AM

      super bro //’

      Reply
  5. Sekar says

    January 14, 2013 at 5:33 AM

    பீ ஜே கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொள்ளும் காலம் மிகவிரைவில் வர உள்ளது. பீ ஜே வைவிட மிகவும் லூசுத்தனமாக பேசியா நான் மற்றும் அனேகர் இன்று கிறிஸ்து இயேசுவின் கிருபையால் அன்பும், சமாதானத்துடனும் வாழ்ந்து வருகிரோம், புதிய கிறிஸ்தவ நண்பர்களே பீ ஜே மற்றும் அவரின் கூட்டத்தினர் பேசுவதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொல்ல வேண்டாம். (பிசாசு கொல்லவும் அழிக்கவுமேயன்றி வேரொன்றுக்கும் வரான். இதை மாத்திரம் நிணைவில்வைக்கவும்) பீ ஜே கூட்டத்தினருக்காக நாம் தொடர்ந்து ஜெபிப்போம்.

    Reply
  6. D.S.D says

    January 15, 2013 at 7:10 PM

    ஏசு ஓடி ஒலியவில்லை யூதாஸ் தன்னை காட்டிக்கொடுப்பான் என்பது முன்னதாகவேஅவரு க்கு தெரியும்.இதை யோவான்13:21ல்,உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன் என்று ஏசு கூறுகிறார். மேலும் யோவான் 13:27ல் நீ செய்கிறதைச் சீக்கிரமாய் செய் என்று யூதாசிடம் சொல்கிரார். அதாவது, என்னை காட்டிக்கொடுக்கிற வேலையை செய் என்று சொல்கிறார்.

    இதில் சீக்கிரமாய் என்பதை கவனிக்கவேண்டும்.ஏசு சிலுவையில் மரிக்கும் நேரம் வந்து விட்டது என்பதையும், யூதாஸ் தன்னைக்காட்டிக் கொடுப்பான் என்று ஆயிரம் வருடதிற்கு முன் சொல்லப்பட்ட தீர்க்க தரிசனம் நிறைவேற வேன்டும் என்பதையும் அறிந்தவராக இதை கூறுகிறார்.

    தன்னை சிலுவையில் ஒப்புக்கொடுக்க அத‌ற்கான நேரம் வந்துவிட்டது என்பதை அவர் அறிந்திருந்தபடியால் சீக்கிரமாய் என்று கூறுகிறர்.தன்னை மரணத்திற்கு ஒப்பு கொடுக்க‌
    தயாராகிவிட்டதால் தானே இப்படிக் கூறுகிறார் ??

    அந்த திருவிருந்தையும் அதற்காகவே செய்கிறார்.ஏசு ஓடி ஒலிவார் என்றால்,யூதாசுக்கு நன்கு தெறிந்த இடமாகிய கெத்செமனே என்கிற இடதிற்கு ஏசு ஏன் போகவேண்டும் ??? யோ 18:1,2.

    ஏசு ஜெபம் பன்னவே அங்கு போனார். ஓடி ஒலிவதற்கு நினைதிருந்தால் வேறு எங்காவது சென்றிருக்கலாமே? மாறாக ஜெபம் செய்துவிட்டு அதே இடத்தில் ஏசு இருந்தார்.காரணம்; தன்னை காட்டிக்கொடுக்க வருபவனுக்காகவும் தன்னை பலியாக ஒப்பு கொடுப்பதற்காகவும் காத்துக்கொண்டுதான் இருந்தார்.

    மேலும்,நான் என் ஜீவனை அடைந்துகொள்ளும்படிக்கு அதை கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாய் இருக்கிறார்.ஒருவனும் அதை என்னிடதிலிருந்து எடுத்துக்கொள்ள மாட் டான் நானே அதைக் கொடுக்கிறேன்.என்று யோவான்10:17,18 வசனங்களில் ஏசு கூறுகிறார்.

    பி.ஜெ.அவர்கள் சொல்லுகிறபடி மரிப்பதற்கு இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வரவில்லை.
    வேத வாக்கியங்களில் சொல்லப்பட்ட காலத்தில் மரித்து,தீர்க்க தரிசனங்களை நிறைவேற்றி முடிக்கவே இயேசு இந்த பூமிக்கு வந்தார்.இதையெல்லாம் பி.ஜெ அறிந்துகொள்ள முடியாது
    காரணம்,வேத வாக்கியங்களை அறிந்து கொள்ளும் அறிவு அவருக்கு இன்னும் வரவில்லை.
    பரிசுத்த ஆவியான‌வர் அவருக்கு அந்த அறிவை தந்து சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்த‌
    ஜெபியுங்கள். இதை தவிற வேறு என்ன செய்வது ?

    Reply
    • admin says

      January 16, 2013 at 5:10 AM

      உங்கள் விளக்கத்துக்கு நன்றி

      Reply
    • அன்பு says

      February 16, 2013 at 4:57 PM

      நீங்கள் சொல்வது சரி தான். வேதத்தை அறை குறையாக தெரிந்துக் கொண்டு, தனக்கு எல்லாம் தெரிந்தது போல் பி.ஜே காட்டிக்கொள்கின்றார். இது சரியல்ல. இயேசு ஒருவரே மெய்யான தேவன் என்பதை அவர் அறிந்துக்கொள்ள ஜெபிப்போம்.

      Reply
  7. SATHIYARAJ says

    January 19, 2013 at 3:52 PM

    PRAISE THE LORD

    I thank our god Jesus Christ and HOLY SPIRIT for LEAD ME TO SEE YOUR reply for this matter…

    i was little confuse because of these Muslims questions, but god revealed me the truth and answer through your website brother.. thank u and do more replies for their all the questions salvation is not far to the them/……. GLORY TO JESUS MY SAVIOR

    Reply
  8. SATHIYARAJ says

    January 19, 2013 at 3:53 PM

    pls send me a mail often about these kind of discussion brother

    Reply
  9. Arul says

    February 12, 2013 at 9:04 AM

    பரிசுத்த வேதாகமத்தை பொய்யென கருதி , ஏசு கிறிஸ்து கடவுள் அல்ல என்று கூறி, மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகிற இஸ்லாமியருக்கு இது ஒரு நல்ல சவுக்கடி போன்றதாகும். இதை கிறிஸ்தவர்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். உங்களது கடின உழைப்பிற்கு நன்றி

    Reply
    • admin says

      February 12, 2013 at 9:10 AM

      நன்றி பிரதர்

      Reply
  10. Abdul Jabbar says

    February 16, 2013 at 10:26 AM

    ஜாகிர் நாயக் பொய்யர் PJ உண்மை சொல்கிறார் என்பதை பதிவு செய்தமைக்கு நன்றி!

    சத்தியத்தை ஏற்று கொள்ளுங்கள் வெற்றி பெறுவீர்கள்.

    Reply
  11. Abdul Jabbar says

    February 16, 2013 at 10:29 AM

    சழப்பி சழப்பி நல்லா பதில் சொல்லியிருக்கார்.

    Reply
  12. ஷாபு says

    February 25, 2013 at 2:00 PM

    டேய் கோயம்புத்தூர் வெங்கடேசா !!!
    \\ ஆனால் சாதாரணமாக சிந்தித்திருதால் கூட இப்படிப்பட்ட கேள்வி கேட்டிருக்க முடியாது.இயேசு கிறிஸ்து அப்படி சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும்.அவரை சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள்.புத்தி சுயாதினமில்லாதவர் என்று சொல்லி அனுப்பி இருப்பார்கள் //.

    இது என்ன பதிலா !!!
    உனக்கு என்ன புத்தி சுவாதீனம் இல்லையா ?????
    முதல ஒழுங்கா பதில் எழுத கத்துக்க.
    பன்னாடை !!!!

    RUN_AWAY இபபோழது நாண் சோல்லும் பதில் மூலம் மேலே தாங்கள் போறிந்து தள்ளிய வார்த்தை தாங்களுக்கே உரித்தாகும் எண்பதில் மாற்றி மாற்றி வசத்துபார்த்தாலே பிரியும் எண்பது திண்னம்.

    பதில்:-

    யூதர்களை போறுத்தவரை மெசியா எண்று அவர்களால் அளைக்கபடும் இயேசு கிறிஸ்து அவர்களை ரட்சிக்க வருவார் என்ரு அணித்தரமாக நம்புகின்றணர். இந்த சுழ்நிலையில் நாண்தான் மெசியாவாகிய இயேசு கிறிஸ்து என்று நேரக பிலாத்துவிடம் போய் பிலாத்து மன்னரே என்னை பலியிடுங்கள் என்று சொல்லியுருந்தால் யூதர்கள் இயேசு கிறிஸ்துதான் அவர்கள் பலகாலங்களாக வருவார் என்று காத்துக்கோண்டிறுந்த மெசியா எண்று தேரிந்து கோண்டால் எப்படி சிலுவை மரணம் நடைபெறும்? இந்த பகுத்தறிவுகூட இல்லாமல் PJ அவர்கள் குரியது எந்த விதத்தில் நியாயம். அப்பண் பாத்தாயத்தில் இல்லை என்பது போல் PJ அவர்கள் திறும்ப திறும்ப தணக்கு வேதவசணத்தின் கோஞ்சம் கூட அறிவு இல்லை என்று நிறுபித்துகோண்டு வருகிறார்.

    Reply
  13. zaidh says

    August 4, 2013 at 4:01 PM

    பகலில் இயேசுவை பிடிக்க தைரியமில்லாதவர்கள் எப்படி அவரை பகலில் சிலுவையில் அறைந்திருக்க முடியும்.
    வழி நெடுக மக்கள் நிறைந்திருந்தாலும் இயேசுவை சிலுவையில் அறையகூடாது என ஒருவரும் சொல்லாததிலிருந்தே தெரியவில்லையா அவர் மக்கள் மனதில் செல்வாக்கு பெற்றிருந்த அளவு அவருக்காக ஒருவரும் எதிர்க்க முன்வரவில்லை என்று ( குறிப்பாக அவரது சீடர்கள் உட்பட ) .
    அப்படியிருக்கும் போது அவர் ஒடி ஒளிந்து தான் இருக்க வேண்டும். நீங்கள் சொல்லுவதே முரண்பாடாகத்தான் தெரிகிறது.

    Reply
    • admin says

      August 5, 2013 at 12:56 PM

      அன்பு நண்பர் அவர்கள்க்கு நீங்கள் வேதாகமத்தை நன்கு வாசிக்காததால் ஏற்பட்ட பிரச்சனை என்னவென்று தெரிகிறது.யாரோ சொல்லிக்கொடுத்ததை மனப்பாடம் செய்து ஒப்பித்தால் இப்படித்தான் இருக்கும்.யூத மதபோதகர்கள் இயேசுகிறிஸ்துவை மக்கள் முன்னிலையில் பிடிக்க பயப்பட்டனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.அதனால் இரவில் பிடித்து காலைக்குள்ளாகவே அவரை ரோம அரசாங்கத்திடம் ஒப்படைத்து இயேசு கிறிஸ்து ரோம அரசாங்கத்துக்கு எதிரானவர் என்ற கருத்தை திணித்தனர்.பகலில் ஜனங்கள் இந்த செய்தியை அறிந்து அவருக்கு ஆதரவாக எழும்பும் முன் ரோமப்போர்வீரர்கள் கையில் இயேசு ஒப்புக்கொடுக்கப்பட்டுவிட்டார்.யூத மத தலைவர்கள் தாங்கள் இயேசுவை பிடிக்கும் போது ஜனங்கள் எதிர்த்தால் கலவரம் உண்டாகிவிடும்.அதனால் ரோம அரசாங்கத்திடம் இயேசு கிறிஸ்துவை நிறுத்த முடியாமல் போய்விடும் என்ற காரணத்தினாலேயே அப்படி பயந்தனர்.பகலில் சிலுவையில் அறைய கொண்டு சென்றது ரோம பேரரசின் வீரர்கள் .அவர்களை சாதாரண மக்களால் நிச்சயம் எதிர்க்க முடியாது.மேலும் இயேசு கிறிஸ்துவும் வன்முறையை போதிக்காதபடியினால் அவர்கள் தங்கள் மனதில் அழுதுகொண்டவர்களாக அவரை பின்பற்றி கொல்கதா மலை அடிவாரம் வரை பின்சென்றனர்.இதை முழுமையாக படிக்காததால் நீங்கள் தவறாக புரிந்துவிட்டீர்கள் .அவ்வளவுதான்

      Reply
  14. Bala says

    August 6, 2013 at 3:17 PM

    Arumai bro devan koodiya viraivil Islamiya Nanbharkal Mathiyil Thamathu anbhai Velipaduthuvaar ena Visuvasipom
    vallamiyum Makathuvamum Kartharuke Uriyathu

    Reply
  15. ISAAC CHRISTIAN says

    February 1, 2014 at 7:49 PM

    இயேசுகிறிஸ்து தேவ குமாரன் என்பதற்கு முதல் இயேசுகிறிஸ்து எதிர்ப்பாளரான சவுல் என்ற பவுல் மட்டுமே போதுமானவர் கண்கண்டு சாட்சி இட்டவரும் கூட ..,
    அதற்காகவே தன் உயிரயும் கொடுத்தவர். அவரது நூல்களுக்கு எவரேனும் பதில் கொடுக்கமுடியாது.திருத்தப்பட்டது, தள்ளப்பட்டது என்பதை தவிர..,வேதத்தை தள்ளுவது தன் சொந்த ஜனங்களையும் இராஜ்யத்தையும் தள்ளுவதற்கு சமானம்.ஆபிரஹாமுக்கு செய்த துரோகம் … ஆபிரஹாம்-ஈசாக் வழிவந்த ஜனங்களை விட இஸ்மவேல் பெரியவரல்ல என நான் நம்புகிறேன்.

    Reply
  16. shaik says

    February 7, 2014 at 4:09 PM

    அட முட்டாள்கள பீஜ கேள்விக்கு பதில்சொல்ல வக்குள்ல

    Reply
  17. P.Marshall says

    February 14, 2014 at 2:56 PM

    என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
    நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
    என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்.
    என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.
    உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.

    Reply
  18. P.Marshall says

    February 14, 2014 at 2:58 PM

    உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார். psalm 22:24
    Jesus was saved by Almighty God. psalm 22:24

    Reply
  19. nova says

    March 1, 2014 at 2:46 PM

    லூக்கா 22:6 அதற்கு அவன் சம்மதித்து, ஜனக்கூட்டமில்லாத வேளையில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான்.இங்கே இந்த வசனம் சொல்லுகிறபடி ஜனகூட்டமில்லாத வேளை என்றால் யேசுவோடு எப்பொழுதும் திரள் கூட்டம் ஜனங்கள் இருந்த்திருக்கவேண்டும் ஆகவேதான் அப்படி எழுதப்பட்டுள்ளது மற்றபடி இயேசு ஜனமில்லதபோது எங்கிருப்பார் என்று காட்டி கொடுக்கிறேன் எனும் அர்த்தம் தொனிக்க சொல்லப் பட்டதே அவ்வசனம் நம் அண்ணன் pj சொல்வது போல ஓடி ஒழியவில்லை இயேசு மாறாக.மாற் 14: 41. அவர் மூன்றாந்தரம் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.

    42. என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள் போவோம் என்றார்.மரணத்தை துணிவுடன் ஏற்றுக்கொள்ளவே இயேசு புறப்பட்டுள்ளார்

    Reply
  20. s.sasikumar says

    March 3, 2014 at 7:04 PM

    நன்றி பிரதர்

    Reply

Leave a Reply to P.Marshall Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network