IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

டிசம்பர் 25-ல் இயேசு கிறிஸ்து பிறந்தார் என்பது தவறு : போப் ஆண்டவர் வாக்குமூலம்! – இஸ்லாமிய அறிஞர்கள்அதிர்ச்சி!!

December 21, 2012

 

 கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு என்ன ஒரு புது தலைப்பாக இருக்கிறது என்று நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்.தலைப்பில் உண்மை இல்லாமல் இல்லை.இத்தனை நாட்களாக கிறிஸ்தவ மக்களிடையே கிறிஸ்மஸ் தினத்தை குறித்து ஏதாவதும் சொல்லி ஏமாற்ற இருந்த ஒரு வாய்ப்பையும் இழ்ந்துவிட்டோமே என்ற அதிர்ச்சியில் இருக்கிறார்கள் இஸ்லாமிய அறிஞர்கள்.

 

பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் அறிந்த ஒரு விடயம் தான் டிசம்பர் 25 என்பது இயேசு கிறிஸ்து பிறந்த தினம் அல்ல என்பது.ஆனால் இதை அறியாத இஸ்லாமிய அறிஞர்கள் கிறிஸ்தவர்களுக்கு ஏதோ இரகசியத்தை சொல்லிக்கொடுப்பதுபோல் அதை தங்கள் இணையதளங்களிலும்,பிரசுரங்களிலும் போட்டு தங்களுக்கு தாங்களே கைதட்டி மகிழ்ந்துகொள்ளுவது வழக்கம்.

 

பெரும்பான்மை கிறிஸ்தவர்களை பொருத்தவரை டிசம்பர் 25ல் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை கொண்டாடுவதின் நோக்கம் இயேசு கிறிஸ்து அந்த நாளில் பிறந்தார் என்பதற்காக இல்லை.இந்த சாதாரண அறிவு கூட இல்லாத இஸ்லாமிய அறிஞர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.

 

சமீபத்தில் ஆன்லைபிஜே இணையதளத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை குறித்து கத்தோலிக்கர்களின் தலைவர் போப் அவர்கள் வெளியிட்ட ஒரு புத்தகத்தை ஆதாரமாக போட்டு கிறிஸ்துமஸ் தினத்தை விமர்சித்து உள்ளனர்.அதன் தொடுப்பை இங்கு கொடுக்கிறோம்.இதில் அந்த கட்டுரையை முழுமையாக வாசிக்கலாம்:

http://www.onlinepj.com/katturaikal/dec25-il-easu-printhar-enpathu-thavaru/

 

அந்த கட்டுரையின் உண்மை நிலையை ஆராய்வதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும் .கீழே அவர்களின் வாதம் பச்சை கலரில் உள்ளது.அதன் பிறகு நமது பதில் நீல கலரிலும் உள்ளது.

 

// கிறித்தவ சகோதரர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம்தான் ஏசு பிறந்தார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு அந்த நாளை திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கிறித்தவ சகோதரர்கள் ஏசு பிறந்த நாளாகக் கருதி கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழா என்பது டிசம்பர் 25என்பது தவறு என்று கிறித்தவ மதத்ததலைவரான போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.  

 போப் ஆண்டவர் அறிவித்துள்ள இந்தச் செய்தி இத்தனை ஆண்டுகள் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்த கிறித்தவர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமா? ஏசு பிறந்த ஆண்டு எது என்பதும் தவறாகவே மக்களுக்கு சொல்லப்பட்டுள்ளது என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார் போப் ஆண்டவர்./////

16வது “பென்னடிக்ட்” போப் ஆண்டவர் அவர்களால் எழுதப்பட்டுள்ள ஜீஸஸ் ஆஃப் நஸ்ரேத் : தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் (‘Jesus of Nazareth: The Infancy Narratives’) என்ற புத்தகம் நவம்பர் மாதத்தில் வெளியாகியுள்ளது.அதில் போப் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை குறித்த விடயங்களை பற்றி எழுதியுள்ள விடயங்கள் புதியவை அல்ல.பல கோடி கிறிஸ்தவர்கள் பல ஆண்டுகளாக பிரசங்கித்து வரும் விசயமே.இது ஏதோ புது விசயம் மாதிரியும்,கிறிஸ்தவர்களுக்கு இது தெரியாத மாதிரியும் இஸ்லாமிய அறிஞர்கள் விளக்குவது நமக்கு விசித்திரமாக உள்ளது.இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டை குறித்தும் ,அவர் பிறந்த தேதி குறித்தும் பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் நன்கு அறிந்தவர்களாகவே உள்ளனர்.குறிப்பிட்ட இந்த விசயங்களை பொருத்த வரை நடைமுறையில் உள்ள விசயங்களோடு ஒத்துப் போவதால் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாதபடியால் கிறிஸ்தவ மக்கள் அவற்றை அப்படியே பின்பற்றுகிறார்கள்.

 

மேலும் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்தார் என்பது வரலாற்று உண்மை.இதை உலகில் அனைவருக்கு அறிவிக்க ஒரு நாள் அது டிசம்பர் 25 ஆக இருந்துவிட்டு போகிறது.கிறிஸ்தவத்துக்கு முன்பு அந்த நாள் வேறு எதற்கோ பயன்பட்டு இருந்தாலும் அதைபற்றிய கவலை நமக்கு இல்லை.இன்றைக்கு அந்த நாளை விசேஷிக்க என்ன காரணம் என்றே நாம் பார்க்க வேண்டும்.எங்களுடைய நோக்கம் இயேசு கிறிஸ்துவை மேன்மைப்படுத்துவதாக மட்டும் இருக்கவேண்டும் என்பதே முக்கியமாக உள்ளது.பிதாவாகிய தேவன் தன் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மூலம் இந்த மனுகுலத்துக்கு கொடுத்த மிகப்பெரிய நற்செய்திதான் கிறிஸ்துமஸ் .அதைதான் டிசம்பர் 25 ல் நினைவு கூறப்படுகிறது.

 

 

 

///
 இதற்கு முன்பும் இயேசுவின் வரலாற்றில் தவறுகள் உள்ளன, என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், கத்தோலிக்க நிறுவனரான “போப்” ஒருவரே இப்படி பகிரங்கமாக அறிவித்திருப்பது, இதுவே முதல் முறையாகும்.
////

 

 டிசம்பர் 25,மற்றும் இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு வரலாற்றை விமர்சித்த  ”பலராலும்” என்ற உங்கள் எழுத்தில் பெரும்பான்மை கிறிஸ்தவர்களே அடங்கியுள்ளனர்.ஆனால் அதை அழகாக மறைத்து எதோ கிறிஸ்தவர்கள் இதை புதிதாக கேட்டு அதிர்ச்சி அடைந்த மாதிரி மக்களை நம்பவைக்க பார்க்கிறீர்கள்.

 

//// இதில் பெரும்பாலான கிறித்தவர்கள் இயேசு கி.மு6 தொடக்கம் முதல் கி.மு4 இடையிலான காலப் பகுதியில் பிறந்திருக்கலாம் என நம்புகின்றனர். அதில் வேடிக்கை என்னவென்றால் கி.பி மற்றும் கி.மு என்று பிரிப்பதே இவரது பிறந்த நாளை வைத்துத்தான் எனும்போது அவர் எந்த ஆண்டு பிறந்தார் என்பதிலேயே கருத்து வேறுபாடு வருவது ஏசுவின் வரலாறு எந்த அளவிற்கு பலவீனமான வரலாறாக அமைந்துள்ளது என்பதை படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது./////

இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை பற்றி அதுவும் பலவீனமான வரலாறு என்று விமர்சிக்கும் தகுதி எந்த இஸ்லாமிய அறிஞர்களுக்கும் இருப்பதாக தெரிவதில்லை.காரணம் இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக நேசிக்கிறோம் என்று சொல்லும் ஹஜரத் முஹம்மது அவர்களின் ஆதாரபூர்வமான முழுமையாக ஏற்றுக்கொள்ள கூடிய வரலாறுகள் அவர் மரணமடைந்து சில நூற்றாண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட புத்தகங்களையே அடிப்படையாக கொண்டதாகும்.ஹஜரத் முஹம்மது அவர்கள் மரணமடைந்து 125 ஆண்டுகளில் எழுதப்பட்ட வரலாற்றை கூட இந்த  தவ்ஹீத் ஜமாத்தினரால் பலவீனம் என்று நிராகரிக்கப்படுகிறவைகளாக உள்ளது.இந்த லட்சணத்தில் இவர்கள் அதற்கும் பல நூறு ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றில் குறை கண்டுபிடிக்க முயல்வது இவர்களில் இயலாமையை காட்டுகிறது.இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை பொருத்தவரை குறிப்பிட்ட நாள் எதுவும் வேதாகமம் சொல்லவில்லை.காலங்களை கணக்கிட கூடிய வடிவில் தான் சொல்லியுள்ளது.அதில் சில துல்லியமாக கணக்கிடுவதில் மாற்றம் வரவாய்ப்புகள் உள்ளது.இதனால் இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கை வரலாற்றில் எந்த பலவீனமும் இல்லை,இஸ்லாமிய வரலாறுகளே பல முரண்பாடுகள் நிறைந்த பலவீனங்களாக உள்ளது என்பதை உலகறியும்.

 ////உலகில் வாழும் சுமார் ஒரு பில்லியன் கத்தோலிக்கர்களின் மதத் தலைவரான 85 வயதுடைய 16ஆம் பெனடிக்ட் போப்பாண்டவர் அவர்கள் இப்புத்தகத்தில் தெரிவித்துள்ள மற்றுமொரு கருத்து அனைத்து கிறித்தவ சகோதரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்தகவல் என்ன தெரியுமா? கிறித்தவ மதத்தில் கழுதைகள் உட்பட ஏனைய விலங்குகள் இயேசுவின் பாரம்பரிய பிறப்பு வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவ்விலங்குகளுக்கும் கிறித்தவ மதத்துக்கும் துளிகூட சம்பந்தம் இல்லையென்றும் கூறியிருப்பதுதான்.////

வாழ்த்து அட்டைகளில் உள்ள படங்களை பார்த்து விமர்சனம் எழுதுகிறது போல் உள்ளது உங்கள் எழுத்துக்கள்.எங்கள் வேதாகமத்தில் இயேசு பிறந்த நேரத்தில் கழுதைகள் இருந்ததாகவோ,மற்ற விலங்குகள் சுற்றி நின்றதாகவோ சொல்லவில்லை.இதை சூழல் வைத்து கற்பனையாக வடிவமைக்கப்பட்டவை.வாழ்த்து அட்டைகளில் உள்ளது எல்லாம் உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது.மேலும் கத்தோலிக்கர்களின் தலைவர் தான் போப் அவர்கள்.அவர் உலகில் வாழும் முழு கிறிஸ்தவர்களுக்கும் தலைவர் அல்ல.மேலும் அவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே தலை ஆட்டி கேட்க நாங்கள் உங்களை போன்றவர்கள் அல்ல.தாய் மொழியல்லாத வேற்றுமொழியில் தங்கள் வேதத்தை மந்திரம் போல்  வாசிப்பவர்கள் அல்ல கிறிஸ்தவர்கள்.ஒவ்வொரு கிறிஸ்தவனும் அவனுடைய சொந்த மொழியில் பைபிளை படித்து புரிந்துகொள்ள கூடியவனாகவே இருக்கிறார்கள்.அப்படி இருக்கும் பொழுது எங்கள் வேதப்புத்தகத்துக்கு எதிராக யார் கருத்தை சொன்னாலும் அதை பற்றி கிறிஸ்தவர்கள் கவலைப்படபோவது இல்லை. அதை பரிசுத்த வேதாகமத்தில் இருந்து சரிபார்த்துக்கொள்ளுவார்கள்.

//கிறித்தவர்கள் தங்களது மத ஆதாரமாக பைபிளைத்தான் வைத்துள்ளனர். உண்மையைச் சொல்வதாக இருந்தால் இயேசுவின் பிறப்பிடத்தைப் பற்றியோ, பிறந்த தினத்தைப் பற்றியோ, பிறந்த ஆண்டைப் பற்றியோ பைபிளில் தெளிவான ஆதாரங்கள் இல்லை. இவற்றைப் பற்றிய ஒருமித்த கருத்து என்றைக்கும் ஏற்பட்டதில்லை. பல குழப்பங்களும், முரண்பாடுகளும் இருக்கின்றன./////

அப்படியே போகிற போக்கில் உங்கள் நச்சுக்கருத்தை அப்படியே அள்ளித்தெளித்து செல்லுகிறீர்கள்.எங்கள் வேதாகமத்தில் இயேசு கிறிஸ்து எங்கு பிறந்தார் என்று தெளிவாக உள்ளது.இயேசு பிறந்த ஆண்டு பைபிளில் இல்லை என்பதினால் ஒரு பிரச்சனையும் ஏற்பட போவதில்லை.அதை முன்பே கூறியபடி வேதாகம அடிப்படையில் கணக்கிட்டுக்கொள்ளக் கூடிய நிலையிலேயே உள்ளது.அதில் சில வித்தியாசங்கள் வந்தாலும் எங்களுக்கு அதில் ஒரு பிரச்சனையும் இல்லை.அதினால் எங்கள் அடிப்படை கொள்கைக்கு எந்த பங்கமும் ஏற்படாது.ஆனால் உங்கள் பிரச்சனை அதுவல்ல உங்கள் குரான் வசனங்கள் எந்த வசனம் எந்த இடத்தில் அருளப்பட்டது .எந்த வசனத்துக்கு எப்படி ஹஜரத் முஹம்மது அவர்கள் விளக்கம் கொடுத்தார்கள்,எதற்காக இந்த வசனம் கொடுத்தார்கள்  என்று கூட இன்னும் சரியாக தெரியாமல் உங்களுக்குள் நீங்கள் முரண்பட்டு நீங்கள் போடும் குஸ்தியோ குஸ்தியை விடவா இதில் குழப்பம்.சொல்லுங்களேன்.

///இயேசுவின் பிறந்த நாள் டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி என்று நிரூபிக்க முடியாது. பல காலங்களில் இயேசுவின் பிறந்த நாள் என்று பல நாட்கள் கிறிஸ்தவர்களால் கருதப்பட்டு, கொண்டாடப்பட்டு வந்துள்ளன. சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவை இயேசுவின் பிறந்த நாளைப் பற்றிய தகவலைப் புறக்கணித்தன.////

நாங்கள் யாரும் அதை சாதிக்கவில்லையே .பிறகு எதற்கு நிரூபிக்கவேண்டும்.இயேசு கிறிஸ்து மனிதனாக இந்த உலகில் அவதரித்தார்.அந்த நாளை டிசம்பர் 25 ல் நினைவு கூர்ந்து இறைமகனின் பிறப்பின் நற்செய்தியை இந்த பூவுலக மக்களுக்கு அறிவிக்கிறோம்.இந்த குறிக்கோள் மட்டுமே எங்களுக்கு.ஆனால் ஆட்சி அதிகாரத்தை நிறுவி தன் சொந்த பந்தங்களான சஹாபிகளை ஏறக்குறைய 100 வருடங்களுக்குமேல் ஆட்சிபீடத்தில் அமர்த்தி சென்ற ஹஜரத் முஹம்மது அவர்களை பற்றிய செய்திகளை இன்றைக்கு பலவற்றை நீங்கள் பெலவீனம் என்று தள்ளி குப்பையில் போடுகிறதைவிடவா வேறு புறக்கணிப்பு இருக்க முடியும்.

/////
 இயேசுவின் நெருங்கிய தோழர்களால், இயேசுவின் தாயாரும் சகோதரரும் உயிரோடிருக்கும்போது எழுதப்பட்டதாகக் கருதப்படும் சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றி தெரிவிக்காதது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.//////

 

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை தெரிவிக்காதது கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்குமானால் அதைவிட ஹஜரத் முஹம்மது அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஹிஜ்ரி முதல் நூற்றாண்டு ஆதாரமான புத்தகத்தை உங்களால் காட்ட முடியுமா?உங்களால் காட்ட முடியாது என்பது அதைவிட மக்களால் கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.

 

///இவ்வளவு முக்கியமான நிகழ்வை பரிசுத்த ஆவி ஏன் சொல்லாமல் விட்டது என்று நமக்கு பெரும் சந்தேகம் ஏற்படுகின்றது…….. ஒவ்வொரு சுவிசேஷக்காரரும் அவருக்குத் தோன்றியதையும் கேள்விப்பட்டதையெல்லாம் எழுதியிருக்கிறார்களேயல்லாமல் கர்த்தரின் தூண்டுதலால் எழுதவில்லை என்பதற்கு இது போதுமான சான்று அல்லாவா? இனியும் இதை இறைவேதம் என்று சொல்ல முடியுமா?…..////

எங்கள் வேதாகமத்தில் நான்கு சுவிஷேசங்களும் ஒரே மாதிரி எழுதப்பட ஏவப்பட்டது அல்ல.எங்கள் பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் நான்குவிதமான ஊழிய படித்தரங்களை மக்களுக்கு விளக்க சுவிஷேச ஆக்கியோன்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் ஏவுதல் என்ன இருந்ததோ அப்படியே அவற்றை எழுதியுள்ளார்கள்.எல்லோரும் ஒரே மாதிரி எழுத வேண்டுமானால் நான்கு சுவிஷேசங்கள் தேவையில்லை.ஒன்றே போதுமானது ஆகும். நான்கு சுவிஷேசம் இருப்பதில் இருந்து உணரலாம் அதன் அவசியம் எப்படிப்பட்டது என்பதை.அதனால் மத்தேயு எழுதிய சிலதை மாற்குவும்,லூக்காவும் எழுத ஏவப்பட்டு இருப்பார்கள்.மாற்கு எழுதியதை லூக்காவும் மத்தேயுவும் எழுதாமல் மற்ற விசயங்களை எழுத பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டுள்ளனர்.இதில் ஒரு முரண்பாடும் இல்லை.ஆனால் குரானில் அல்லாஹ்வின் ரூஹுல் குத்தூஸ் சொல்லாமல் விட்டது சாதாரண விசயங்கள் அல்ல.முஸ்லீகள் அடிப்படையாக கடைப்பிடிக்கவேண்டிய எதையும் அல்லாஹ் குரானில் விளக்கவே இல்லை.பெரும்பான்மை இடங்களில் சொர்க கன்னிகைகளையும்,கட்டில்களையும் விளக்குவதிலேயே பெரும் பான்மையான பக்கங்கள் செலவழிந்து உள்ளது.மேலும் நூற்றுக்கு மேற்பட்ட சத்தியமாக என்று சொல்லியும் பக்கங்கள் தீர்ந்துள்ளது.ஆனால் ஒரு முஸ்லீம் எப்படி தொழுகை செய்ய வேண்டும் என்றோ அல்லது மற்ற அடிப்படை கடமைகளான ஹஜ்,ரமலான்,ஜக்காத்,சுன்னத் போன்றவைகள் பற்றியோ ஒரு விளக்கத்தையும் கொடுக்காமல் தன்னைதானே தெளிவான வேதம் என்று சொல்லுவதிலும் வசனங்களின் எண்ணிக்கை கூடியுள்ளதே தவிர வேறு ஒன்றும் இல்லை.இதை அல்லாஹ்வின் ரூஹுல் குத்தூஸ் ஏன் இப்படி சொல்லாமல் விட்டார் என்பது இன்றைக்கு வரை கேள்விக்குறியாகவே உள்ளது.

////ஏரோது உண்மையில் இயேசுவை கொலை செய்ய விரும்பியிருந்தால் அந்த சந்தர்ப்பத்தை உபயோகித்திருக்கலாம். எகிப்துக்கு ஓடிப் போனதாக மத்தேயு சொன்னதும், ஆலயத்திற்குக் கொண்டு வந்ததாக லூக்கா சொன்னதும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன……. ஏரோது அரசன் இயேசுவைக் கொலை செய்யத் தேடியதையும் அவர்கள் எகிப்துக்கு ஓடிப் போனதையும் அதன் பின் ஏரோதுவின் மகன் ஆட்சிக்கு வந்ததையும் எருசலேமுக்குப் போகாமல் அவர்கள் மறைந்து வாழ்ந்ததையும் லூக்கா கூறவில்லை. மாறாக அந்தச் சமயத்தில் சர்வ சாதாரணமான நிலைமை நிலவியதாகவும் ஆண்டு தோறும் எருசலேமுக்கு அவர்கள் வந்து போய்க் கொண்டிருந்ததாகவும் சர்வ சாதாரணமாக அவர்கள் அந்த நாட்டில் நடமாடியதாகவும் கூறுகிறார்…………………….
 //////

மத்தேயு ,லூக்கா சுவிஷேசங்களில் இயேசு கிறிஸ்துவின் குழந்தை பருவத்தில் நடந்த சம்பவங்களை விவரிக்கும் பொழுது உள்ள கால இடைவெளியை கணக்கிடாமல் இப்படி உளரிக்கொட்டுகிறார்கள்.யோசேப்பும்,மரியாளும் குழந்தை இயேசுவுக்கு விருத்த சேதனம் செய்ய போனது எட்டாம் நாளில்.ஆனால் சாஸ்திரிகள் ஏரோதுவிடம் சென்று சொன்ன பிறகே ஏரோது குழந்தையை கொல்ல தேடினான் என்று வேதாகமம் தெளிவாக சொல்லுகிறது.சாஸ்திரிகள் இயேசு பிறந்த மறுநாளேவோ அல்லது ஓரிரு நாளிலேயோ ஏரோதிடம் வந்ததாக வேதம் சொல்லவில்லை.

மத்தேயு 2 :1. ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,

2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.

 

இயேசு கிறிஸ்து பிறந்த பொழுது கிழக்கிலே ஒரு நட்சத்திரத்தை கண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.அவர்கள் ஏரோது அரசனிடம் வருவதற்கு எத்தனை நாட்கள் ஆனது என்றோ ,மாதங்கள் ஆனது என்றோ குறிப்பு இல்லை.ஆனால் இதை கேட்ட ஏரோது அரசன் ஏழாம் வசனத்தில் இப்படி சொல்லுகிறான்.

மத் 2:7. அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை ரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக் குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து:

இதன் பின்பு ஏரோது அரசன் சாஸ்திரிகளால் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஒரு ஆணை பிறப்பிக்கிறான் .அதில் நமக்கு சிறிய குறிப்பு அடங்கியுள்ளது.மேலும் இயேசு கிறிஸ்து பிறந்த பொழுது சத்திரத்தில் இடமில்லாத படியால் முண்ணனையில் கிடத்தியதாக வேதாகமத்தில் தெளிவாக உள்ளது.

 

லூக்கா 2: 7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.

ஆனால் சாஸ்திரிகள் வந்த பொழுது யோசேப்பு மரியாள் வீட்டில் குடியிருக்கிறார்கள் என்று வேதாகமம் தெளிவாக சொல்லுகிறது.

மத் 2:11. அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.

இந்த வசனம் மூலம் யோசேப்பும் மரியாளும் ஒரு வீட்டில் குடியேறிய பிறகே சாஸ்திரிகள் இயேசுகிறிஸ்துவை காண வந்தார்கள் என்பதை தெளிவாக அறியலாம்.

மத் 2: 16. அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.

 

இதன்படி அவர்கள் நட்சத்திரம் காணப்பட்ட காலத்தை விசாரித்து தோராயமாக கணக்கிட்டு இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளை கொல்ல சொன்னதில் இருந்து மத்தேயு சொல்லும் சம்பவம் குறைந்த பட்சம் ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.இப்பொழுது லூக்கா சுவிஷேசம் எட்டாம் நாளில் இயேசு கிறிஸ்துவின் விருத்த சேதனத்தை சொன்ன பொழுது ஏரோது அரசனின் அந்த கட்டளை பற்றி எழுதாததில் எந்த முரண்பாடும் இல்லை.அதற்கு பின் பல மாதங்களுக்கு பிறகு நடக்க போகிற விசயத்தை எதற்காக எட்டாம் நாளில் விருத்த சேதனம் செய்யப்பட்ட போது சொல்லவேண்டும்.அல்லது அப்படி சொல்லபட வேண்டும் என்பது அறிவீனம் இல்லையா? எங்கள் வேதாகமம் தெளிவாகவே உள்ளது.அதை படிக்கின்ற நீங்களே குறைகண்டு பிடிக்கவே படிப்பதினால் அதின் உண்மைகள் உங்கள் கண்களை மறைத்துவிடுகிறது.

//இது குறித்த செய்தியை சகோதரர் பீஜே அவர்கள் தனது “இதுதான் பைபிள்” என்ற நூலில் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார்.///

இந்த புத்தகத்தில் மவ்லவி பிஜே அவர்கள் செய்துள்ள தவறுகளை விவாதத்தில் அவருக்கு முன்பாக எடுத்து வைத்த போதும் அவர் வாய்திறக்காமல் தனியாக விவாதிப்போம் என்று நைசாக நழுவினார் என்பதை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.கர்த்தருக்கு சித்தமானால் அவர் அந்த புத்தகத்தில் செய்துள்ள தவறுகள் ஒவ்வொன்றுக்கு நிச்சயம் நாங்கள் கூடிய விரைவில் பதில் அளிப்போம்.

///// போப் ஆண்டவர் தனது நூலில் மத்தேயு மற்றும் லூக்கா ஆகியோர் ஏசுவின் பிறப்பு விஷயத்தில் முரண்பட்ட செய்திகளை சொல்கின்றனர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அவ்வாறு ஒப்புக்கொண்டுவிட்டு அதை சரிக்கட்டுவதற்கு அவர் ஒரு காரணத்தை சொல்லியுள்ளார். மத்தேயு மற்றும் லூக்கா ஆகியோரின் நோக்கம் வரலாற்றை மிகச் சரியாக எடுத்துரைக்க வேண்டும் என்பது அல்ல; மாறாக நம்பிக்கையின் ஒளியை உலகிற்கு பரப்புவதுதான் என்று கூறியுள்ளார்.////

முதலில் போப் அவர்கள் என்ன எழுதியுள்ளார்கள்  என்பதை ஆங்கிலத்தில் முதலில் அப்படியே பதிந்து விளக்க வேண்டும்.அதை விடுத்து சொந்த கருத்தை திணிக்க கூடாது.சரி போப் அவர்கள்   எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுடன் இருந்த அப்போஸ்தலரோ?அல்லது அதன் பின் வந்த சபைபிதாவோ இல்லை.அவர் பல கோடி மக்களால் மதிக்கப்படகூடிய ஒரு தலைவர் அவ்வளவே.அதற்காக அவர் சொன்னவுடனே எங்கள் வேதாகமாம் முரண்பட்டது என்று அர்த்தம் ஆகிவிடாது.இது நடைமுறையும் இல்லை.இன்றைக்கு இருக்கும் ஒரு பெரிய மதத்தலைவர் உதாரணத்துக்கு  அயோத்துல்லாஅலிகோமேனி  எடுத்துக்கொள்ளுவோம்.அவர் ஷியா பிரிவின் தலைமைதுவத்தில் இருக்கும் ஒரு இஸ்லாமிய மதகுரு ஆவார்.அவர் நீங்கள் மதிக்க கூடிய உங்கள் கலிபாக்களை குறித்து என்ன நினைக்கிறார் என்று சொல்லுவதினால் அது உண்மை என்றாகிவிடுமா?சொல்லுங்கள்.ஆனால் அதை விட மிக சிந்திக்கவைக்க கூடிய விடயம் ஒன்று உண்டு.அது என்ன தெரியுமா?உங்கள் ஹஜரத் முஹம்மது அவர்களின் மனைவி ஆயிஷா அவர்களும்,சஹாபியும்,அவருடைய மாமனாரும்,இரண்டாவது கலிபாவுமாகிய உமர் அவர்களும் குரானை பற்றி என்ன சொல்லியுள்ளார்கள் தெரியுமா?கீழே வாசியுங்கள்.

 

முஸ்லீம் ஹதீஸ்

 

2876. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

 

“குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்” என்ற வசனம் (முதலில்) குர் ஆனில் அருளப்பட்டிருந்தது.

 

 பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பி;;ட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

 

புகாரி 7323……………………………………இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறே நாங்கள் மதீனா சென்றடைந்தோம். ‘நிச்சயமாக அல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும்இ அவர்களுக்கு (குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தில் கல்லெறி தண்டனை (ரஜ்கி) சம்பந்தமான வசனம் இருந்தது’ என உமர்(ரலி) அவர்கள் பேசத் தொடங்கினார்கள்.

மேலே ஆயிஷா அவர்களும் உமர் அவர்களும் சொல்லும் இரண்டு வசனங்கள் இன்றைய குரானிலும் இல்லை.அப்படியானால் ஹஜரத் முஹம்மது அவர்கள் காலத்துக்கு பிறகு குரான் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது என்பது திண்ணமாக உறுதி செய்யப்படுக்கிறது.மேலும் ஹஜரத் முஹம்மது அவர்களால் மிகநல்ல சமுதாயங்கள் என்று குறிக்கப்பட்டுள்ள சலஃபுகளும் ,இன்னும் இஸ்லாமிய பேரறிஞர்கள் பலர் குரானின் குழறுபடிகள் குறித்து   புத்தகம் எழுதியுள்ளார்கள்.அவைகளை வருகின்ற நாட்களில் விரிவாக பார்கலாம்.

/// கிறித்தவ சகோதரர்கள் மிகவும் விமர்சையாகக் கொண்டாடக்கூடிய இரண்டு பெரும் பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ்; மற்றொன்று ஈஸ்டர் சண்டே.

 கிறிஸ்துமஸ் என்பது ஏசுவின் பிறந்த தினம் என்றும், ஈஸ்டர் என்பது ஏசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு உயிர்த்தெழுந்த தினம் என்றும் கிறித்தவ சகோதரர்கள் நம்புகின்றனர்.

 இதில் கிறிஸ்துமஸ் டிசம்பர் 25ஆம் தேதி என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை என்பதை போப் ஆண்டவர் அவர்களின் ஒப்புதல் வாக்குமுலத்தின் மூலம் அறிந்து கொண்டோம். சரி! ஈஸ்டர் சண்டே என்பதற்காவது ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று பைபிளின் அடிப்படையில் ஆய்வு செய்தால் அந்த ஆய்வு முடிவுகளும் கிறித்தவ சகோதரர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகத்தான் உள்ளது. அது குறித்த அதிர்ச்சித்தகவல்களை ஈஸ்டர் சண்டேவா? ஈஸ்டர் மண்டேவா? என்ற தனிக்கட்டுரையில் காண்க!

////

இயேசு கிறிஸ்து பிறாந்த தினமாக நினைவு கூறப்படுவது டிசம்பர் 25 ஆகும்.இதில் கிறிஸ்தவ மக்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.அப்படி ஒரு நாளை நியமிக்க எங்கள் வேதாகமத்தில் எங்களுக்கு அனுமதி உண்டு.அதன் நோக்கம் கடவுளை மைய்யப்படுத்தியதாக இருக்கவேண்டும் என்பதே கட்டளையாகும்.கீழே உள்ள வேதாகம வசனங்களை வாசித்தால் உங்களுக்கு தெளிவாக புரியும்.

                                       

ரோமர் 14:5 அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.

ரோமர் 14:6 நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும்கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான்.

 

கொலோசியர் 16. ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.

17. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.

எனவே முடிவாக இயேசு கிறிஸ்து மனித அவதாரம் எடுத்து இந்த பூமிக்கு வந்த நாளையே நாங்கள் நினைவு கூறுகிறோம்.அடுத்து ஈஸ்டர் பண்டிகை.அதுவும் எங்கள் நினைவு கொண்டாட்டமே.அதை உங்களின் அடுத்த கட்டுரை விமர்சனம் மூலம் தெளிவாக விளக்க முடியும் என்றும் நம்புகிறேன்

பொதுவாக எல்லா இஸ்லாமியர்களாலும் ஏற்றுகொள்ளப்பட்டு  கொண்டாடும் இரண்டு பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான்,இன்னொன்று பக்ரித் .ஒன்று தியாக திருநாள்,இன்னொன்று ஈகை திருநாள்..இந்த இரண்டு பண்டிகைகளின் உண்மையான அர்த்தம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் ,மரணமுமே என்பதை விளக்ககூடிய சிறிய வீடியோக்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

 

Comments

  1. dinesh says

    December 21, 2012 at 10:53 AM

    மிகவும் பயனுள்ள கருத்துக்கள். pj க்கு ஒரு சிறந்த பதிலடி. வாழ்த்துக்கள்

    Reply
  2. salamonsudhakar says

    December 21, 2012 at 11:37 AM

    Jesuscrist is the one & only holy god

    Reply
  3. John J.C.Dhas says

    December 21, 2012 at 10:47 PM

    Islamists are more concerned with keeping their religion afloat prominent among the public as its image is in retrograde status as their belief system mostly depends on using abominable tactics including guns, bullets, bombs. Their next strong satanic strategy is spreading canard against well established Faith, Christianity .It is an act of Satan.Power of God is flame of fire which would engulf satanic forces ultimately

    Reply
  4. mponraj says

    December 25, 2012 at 4:44 PM

    praise the lord jesus bless your ministry thank u mponraj ponrajmoses@ yahoo.co.in

    Reply
  5. mponraj says

    December 25, 2012 at 4:45 PM

    praise the lord jesus bless your ministry thank u mponraj

    Reply
  6. mponraj says

    December 25, 2012 at 4:46 PM

    praise the lord

    Reply
  7. colvin says

    December 27, 2012 at 1:54 PM

    நல்ல முயற்சி பிரதர். அதிக உபயோகமாக இருந்தது.

    Reply
  8. m.jeyakumar says

    December 30, 2012 at 3:15 PM

    wonderful ministry to bring every hidden things to bring out THE WORD OF GOD IS UNBREAKABLE SEED IT IS BRINGING LIFE AND THE REVELATION IS MANNA FROM HEAVEN AND THE DAILY BREAD.THANKS “JESUS IS LORD.”

    Reply
  9. Jesus says

    January 2, 2013 at 2:03 PM

    colvin December 27, 2012 at 1:54 pm

    நல்ல முயற்சி பிரதர். அதிக உபயோகமாக இருந்தது.

    Reply
  10. Jesus says

    January 2, 2013 at 2:03 PM

    dinesh December 21, 2012 at 10:53 am

    மிகவும் பயனுள்ள கருத்துக்கள். pj க்கு ஒரு சிறந்த பதிலடி. வாழ்த்துக்கள்

    Reply
  11. jshabu says

    February 23, 2013 at 3:01 PM

    //கிறித்தவர்கள் தங்களது மத ஆதாரமாக பைபிளைத்தான் வைத்துள்ளனர். உண்மையைச் சொல்வதாக இருந்தால் இயேசுவின் பிறப்பிடத்தைப் பற்றியோ, பிறந்த தினத்தைப் பற்றியோ, பிறந்த ஆண்டைப் பற்றியோ பைபிளில் தெளிவான ஆதாரங்கள் இல்லை. இவற்றைப் பற்றிய ஒருமித்த கருத்து என்றைக்கும் ஏற்பட்டதில்லை. பல குழப்பங்களும், முரண்பாடுகளும் இருக்கின்றன./////

    பீ. ஜைனுல் ஆபிதீன்ணுக்கு பைபிள் தேரியாது எண்பதற்க்கு ஓரு சிரந்த உதரணமாக இந்த கட்டுரையை எடுத்துக்கோள்ளலாம். அதில் இயேசுவின் பிறந்த இடம் பைபிளில் குரப்படவில்லை எண கோஞ்சமும் வேட்கம் இல்லாமல் குறுவது வேடிக்கையாக உள்ளது.

    உதரணமாக:- லுக்கா 2 அதிகாரம் 11 வசணம்

    11 இண்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிருர். (தாவீதின் ஊர் என்றால் என்ண என்று கேட்டாலும் அச்சிரியப்பட தேவையில்லை) அதற்க்கான அதாரம்மாக இண்னும் ஓரு பைபிள் அதாரம் கிழே:

    லுக்கா 2 அதிகாரம் 5 வசணம்

    5 கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத் துரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் எண்ணும் தாவீதிண் ஊருக்குப் போனன்.

    Reply

Leave a Reply to John J.C.Dhas Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network