IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ
You are here: Home / பதில் கட்டுரைகள் / பைபிள் கேள்விகள்:என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்

பைபிள் கேள்விகள்:என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்

December 5, 2012

என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27.46)

 

 

 

 

 

இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போது “என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்“ என்று கூறியதும், இயேசுக்கிறிஸ்து பிதாவைவிடத் தாழ்வானர் என்பதற்கான ஆதாரமாய் உள்ளது என்று யெகேவாவின் சாட்சிகளும் மற்றும் இஸ்லாமியர்களும் வாதம்செய்கின்றனர். இயேசு கிறிஸ்து உண்மையிலேயே தேவனாய் இருந்திருந்தால் அவர் இவ்வாறு பிதாவை நோக்கி “தேவனே“ என்று அழைத்திருக்க மாட்டார் என்பதே இவர்களின் தர்க்கமாகும். எனினும், உண்மையில் இயேசுக்கிறிஸ்துவுக்கு சிலுவையில் என்ன நடந்து என்பதை நாம் அறிந்திருந்தால் மட்டுமே அவரது இக்கூற்றை சரியாக புரிந்து கொள்ள முடியும். அதேசமயம், “தேவனோடு எப்போதும் ஐக்கியமாயிருந்த இயேசு தேவனால் கைவிடப்பட்டதை புரிந்து கொள்ளாத வரையில், அவரது சிலுவை மரணத்தையும் நம்மால் சரியாக விளங்கிக் கொள்ள முடியாது. இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போதே எத்தகைய நிலையில் இருந்தார் என்பதை அடிப்படையாகக் கொண்டே அவரது இக்கூற்றை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். 

 

சிலுவையில் இயேசு நமக்காக பாவமானார் என்று வேதம் கூறுகிறது. (2 கொரி. 5:21). பரிசுத்தமான தேவன் பாவத்தை வெறுப்பவராகவும் (சங். 5:5, 11:5, சக. 8:17) அதைப் பார்க்க விரும்பாதவராகவும் இருக்கிறார். (ஆப. 1:13). பாவம் தேவனை மற்றவர்களிடமிருந்து பிரித்து விடுகிறது. (ஏசா. 59:2). இதனால் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் உலக மாந்தர் அனைவருடைய பாவங்களையும் சுமந்து தீர்த்து நமக்காகப் பாவமாகியபோது (2 கொரி. 5:21, யோவா. 1:29) அவர் தேவனால் கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தார். அதுவரைகாலமும் அவருக்கும் தேவனுக்குமிடையில் இருந்த அந்நியோன்ய சம்பந்தமான உறவு அச்சந்தர்ப்பத்தில் இல்லாமல் போய்விட்டது. “பாவத்திற்கான தேவ தண்டனையின் கடுமையான பகுதி, தேவனிடமிருந்து முற்றிலுமாய் அப்புறப்படுத்தலாகும். இயேசுக்கிறிஸ்து மானிட பாவங்களுக்கான முழுமையான தண்டனையையும் சிலுவையில் அனுபவித்தமையால் அச்சந்தர்ப்பத்தில் தேவனோடிருந்த உறவு துண்டிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இருந்தார். (42)

 

பாவமற்ற இயேசுக்கிறிஸ்து சிலுவையில் பாவியைப் போல மரித்து அதன் கொடூரமான தனிமையை அனுபவித்தார். (43) உண்மையில், ” இயேசுக்கிறிஸ்துவுக்கும் தேவனுக்குமிடையில் அதுவரை காலமும் முறிவடையாமல் இருந்த உறவு சிலுவையில் முறிவடைந்தது. (44) இதனால் “சிலுவையில் இயேசுக்கிறிஸ்து தனிமையிலேயே இருந்தார் (45) இதனால் “சிலுவையில் மரிக்கும்போது “என் தேவனே என் தேவனெ ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று அதிக சத்தத்தோடு கத்தினார். தேவனால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மாந்தரை தேவனோடு ஒப்வுரவாக்குவதற்காக.  இயேசுக்கிறிஸ்து அம்மக்கள் இருந்த இடத்திற்கே அதாவது தேவனால் கைவிடப்பட்ட நிலைக்கே சென்று அவர்களை மீட்டுள்ளார். இதனாலேயே சிலுவையில் மரிக்கும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

  

Comments

  1. RUN_AWAY says

    January 13, 2013 at 2:06 PM

    \\ பைபிள் கேள்விகள்:என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் \\

    கோயம்புத்தூர் வெங்கடேசா !!!

    நீயும் ஒருநாள் என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர் என்று புலம்புவாய் !

    Reply
  2. colvin says

    January 15, 2013 at 8:54 AM

    RUN_AWAY புலம்புவது யாரென்று முழு உலகமும் அறியும். உருப்படியாக கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சி செய்யுங்கள்.

    வெட்டியாக Comments போடுவதை முதலில் நிறுத்துங்கள்.

    Reply
    • Tassilyn says

      August 27, 2014 at 9:57 AM

      That’s a weg-utho-lhtlout answer to a challenging question

      Reply
  3. D.S.D says

    January 19, 2013 at 6:25 PM

    என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த கேள்வியை பிதாவாகிய தேவனை நோக்கி கேட்க வேன்டிய அவசியம் என்ன ? அவர் தெறியாமல் கேட்டாறா ? தெறிந்துதான் கேட்டார்!!!

    = இதில், ஏன் ? என்கிற வார்த்தையில்தான் பதிலும் அடங்கியிருக்கிறது. இதற்கான பதிலை வேத வசனத்தின் அடிப்படையில் பார்க்கலாம்.

    >இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் மத்தேயு 5:8.ல் இதை இயேசுவே கூறியுள்ளார்.இந்த வசனத்தின் அடிப்படயில் இயேசு பிதாவாகிய தேவனை எப்போதும் தரிசித்தவராகவே இருந்தார்.(உதாரணதிற்கு யோவான் 17:1.லூக்கா 9:16.மத்தேயு 3:16,17.)

    >தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை,பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேரான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். என்று யோவான் 1:18. கூறுகிறது.

    >தேவனிடத்திலிருந்து வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.என்று யோவான் 6:46.கூறுகிறது.

    ஆனால், இயேசு சிலுவையில் அடிக்கப்படும்பொழுது அவர் உலக மக்களின் பாவங்கள் அனைத்தையும் தன் மீது ஏற்றுக்கொள்வதால் பாவத்தை தன் மீது சுமந்துகொண்டவராக காணப்படுகிறார்.(ஏசாயா53:4,5.யோ1:29) தன் மீது சுமந்துகொண்டிருக்கும் பாவதின் காரணமாக பிதாவை தரிசிக்க முடியாமலும், பிதாவினால் கைவிடப்பட்ட சூழ்நிலைக்கும் தள்ளப்படுகிறார்.அதே சமயம் பிதாவின் முகம் இயேசுவுக்கு மறைக்கப்படுகிறது காரணம்,
    அவர் உலகத்தின் பாவங்களை சுமந்துகொண்டிருப்பதால்.

    இதைத்தான் ஆறாம் மணி நேரம் முதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.என்று மத்தேயு 27:45ல் பார்க்கிறோம்.யூதர்கள் சூரியன் உதித்ததி லிருந்து மாலை வரை பகலுக்கு பனிரென்டு மணி நேரம் என்பதை கணக்கிட்டனர்.எனவே
    ஆறாம் மணி நேரம் முதல் ஒன்பதாம் மணி நேரம் வரை என்பது பகல் 12 மணி முதல் 3 மணி வரை காரிருள் பூமியெங்கும் இருந்தது என பார்க்கிறோம்.

    >இது இப்படித்தான் நடக்கும் என்று முன்கூட்டியே தேவன் சொல்லியிமிருக்கிறார்.ஏசாயா 54:7,8.ல் இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்;ஆனாலும் உருக்கமான இரக்கங்களால்
    உன்னைச் சேர்த்துக்கொள்ளுவேன்.

    அற்பகாலம் மூண்ட கோபதினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார். என்று தீர்க்கதரிசன வசனங்கள் சொல்கிறது.

    >இவ்விதமாய் சொல்லப்பட்ட இந்த தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுகிறது என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டவே இயேசு இவ்வாறு கூறினார். மேலும், இந்த வசங்களின் மூலம் இயேசு பிதாவினால் முழுமையாக கைவிடப்படவில்லை என்பதும், எப்பொதும் பிதாவை இயேசு காணாதபடிக்கு மறைந்து போகவில்லை என்பதும் , கண் மூடி கண் திறக்கும் நேரமாகிய இமைப்பொழுது மட்டும்தான் என்பதும்,அது உலக மக்களின் பாவங்களுக்காக என்பதும் இந்த வசனங்களின் மூலம் தெளிவாக தெறிகின்றது.

    மேலும் இமைப்பொழுது என்பது இயேசு சிலுவயில் தொங்கின அந்த மூன்று மணி நேரத்தைக் குறிக்கிறது. சங்கீதம் 90:4 ல் உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள் போலவும் இராச்சாமம் போலவும் இருக்கிறது. என்று வசனம் சொல்லுகிறபடியால் தேவனுடைய பார்வையில் அந்த மூன்று மணி நேரம் ஒரு இமைப்பொழுது என்பது உன்மையே!!! ஆக இது சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல்!!!. இந்த தீர்க்க‌
    தரிசனம் நிறைவேற கொடுத்த குரல்தான் அது!!!. ( மத்தேயு 27:46 )

    1.ஏன் என்னைக் கைவிட்டீர் என்று? இயேசு கேட்டதினால் அது உலக மக்களின் பாவங்களுக்காக உன்மையாக‌ கைவிடப்பட்டார் என்று அந்த கேள்வியே நமக்கு பதிலை கொண்டுவருகிறது.

    2.ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று இயேசு கேட்டதினால் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டது
    நிறைவேறிற்று என்பதை அந்த கேள்வியே அதை தெறிவிக்கிறது.

    3.ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று இயேசு கேட்டதினால் யோவான் 3:16 ன்படி தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, == இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்==.என்பதை அந்த கேள்வியே நமக்கு தெறிவிக்கிறது. ஆக இயேசு சொன்ன
    இந்த வார்த்தை அவர் மரணத்தின் மறைப் பொருளை உலத்திற்கு வெளிப்படுத்தவே அவரின் கேள்வியாக அமைந்துள்ளது. ஹல்லேலூயா…

    Reply
    • admin says

      January 20, 2013 at 5:18 PM

      உங்கள் விளக்கத்துக்கு நன்றி பிரதர்

      Reply
    • Karsen says

      August 26, 2014 at 7:31 PM

      Unbllievabee how well-written and informative this was.

      Reply
  4. Sivaprasath says

    March 12, 2018 at 3:10 PM

    யெகோவவையும் . ஏசுவையும்
    அறிவதே நித்தியஜிவன் _யோவான்/17/3

    இரண்டுபேரையும் பற்றி .தெரிந்து

    கெண்டால்தான்!!!!!!!!

    Reply

Leave a Reply to admin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network