கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழன் டிவியில் ஒளிபரப்பான ரமளான் நிகழ்ச்சியை கண்ட கேப்டன் அமீருத்தீன் என்ற இஸ்லாமிய அறிஞர் நம்முடைய சகோதரர் வெங்கடேசனுடன் குறுஞ்செய்தியில்(SMS) தொடர்புகொண்டு அவர் தவறாக பேசியுள்ளதாகவும்,அறியாமையில் இருந்தால் தான் விளக்குவதாகவும் சொல்லியிருந்தார்.நம் சகோதரரும் பதிலுக்கு நாங்கள் அறியாமல் எதையும் பேசவில்லை.அதில் பேசியவைகள் நாம் அறிந்தே பேசியவைகள் தான் என்று மறுப்பு அனுப்பினார்.மேற்கொண்டு தமிழில் தொடர்புகொள்ள கேட்டுக்கொண்டார்.கேப்டன் அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு சில நாட்களுக்கு பிறகு நம்முடைய சகோதரர் வெங்கடேசன் அவர்கள் பெயரில் ஒரு கடிதத்தை தயார் செய்து அதை சான் அமைபின் மெயிலில் அனுப்பினார்.
யார் இந்த கேப்டன் அமீருத்தீன்.
இவர் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிராக சில புத்தகங்களை எழுதி தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்,மேலும் இவர் ஆங்கிலத்தில் எழுதிய Did jesus Die for salvation of mankind? (மனிதகுல இரட்சிப்புக்கு இயேசு மரணித்தாரா) என்ற புத்தகம் ரியாத் இஸ்லாமிய மையத்தின் மூலம் பதிப்பித்துகொள்ள உரிமை வாங்கப்பட்டுள்ளது. மேலும் மவ்லவி பிஜே அவர்கள் குர்ஆனுக்கு முரண்படுவதாக சில ஹதீஸ்களை தள்ளுகிறார் என்பதை நாம் அறிவோம்.ஆனால் மவ்லவி பிஜே அவர்கள் ஆதாரப்பூர்வமான ஏற்றுக்கொள்ளும் சில ஹதீஸ்களை இவர் ஆதாரமற்றவை என்று நீக்குகிறார் என்பது கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.
மவ்லவி பிஜே அவர்களின் வாதம் தவறானதா?
இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத்துடன் நடந்த ”குர்ஆன் இறைவேதமா?” என்ற விவாதத்தில் சான் அமைப்பு குர்ஆனுக்கு எதிராக வைத்த கேள்விகளுக்கு குர்ஆனில் இருந்து பதிலளிக்க முடியாமல் ஒப்பந்தத்தை மீறி ஹதீஸ்களில் தான் குர்ஆனின் வசனங்களுக்கு விளக்கம் உள்ளது .ஹதீஸ்களும் அல்லாஹ்வால் முஹமது அவர்கள் மூலம் விளக்கமாக தரப்பட்டுள்ளவைதான் என்று மவ்லவி பிஜே அவர்கள் சொல்லி ஹதீஸ்களில் இருந்து மேற்கொள் காட்டினார்.மேலும் அவர் தன்னுடைய உரைகளிலும்,குர்ஆன் விளக்க உரைகளிலும் ஹதீஸ்கள் அல்லாஹ்வின் வஹிதான் என்று பேசியுள்ளதும் இன்றைக்கு நம்மிடம் உள்ளது.
மவ்லவி பிஜே அவர்கள் ஹதீஸ்களும் வஹிதான் என்று பேசிய வீடியோ:
ஆனால் இப்பொழுது நமக்கு கடிதம் எழுதிய கேப்டன் அம்ருத்தீன் அவர்கள்
“இஸ்லாமிய சமயக்கோட்பாட்டில் ஹதீஸ் முக்கிய இடம் வகிக்கிறது. ஆனால் அது உரைக்கல்லுமல்ல ( Touch-Stone) கடைசி வார்த்தையுமல்ல (last Word) அது வஹியும் ( Revelation ) அல்ல.”
என்று சொல்லுகிறார்.
இதிலிருந்து இஸ்லாமிய அறிஞர்களிடையே காணப்படும் தடுமாற்றங்களை நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.மேலும் கேப்டன் அமீருத்தீன் அவர்கள் எழுதிய கடிதமும்,அவருக்கு பதில் அளித்து எழுதப்பட்ட கடிதமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது .அதை பதிவிறக்கி வாசித்துக்கொள்ளவும்.
Letter to Captain Ameerudeen 03-10-12
Letter to SAN by Captain Ameerudeen
source in english :http://www.sakshitimes.net/blog/2012/10/03/tamil-correspondece-to-capt-ameerudeen-of-islam-invites/
Horab says
Praise the lord brothers i pray for your ministry and also i pray salvation of muslim brothers.
jabastin says
nice website. i love this stuff. god bless u all