கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள் -30
தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய கூடுகைகள்: ரம்ஜானைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் கூடுகிறார்கள்.
அடுத்த மூன்று நாட்களில் உலகமெங்கும் உள்ள முஸ்லீம்கள் ரம்ஜானின் முடிவில் விருந்துண்டும்,தங்களை மகிழ்வித்துக் கொண்டும் இருப்பார்கள். ஈது பெருநாளான இந்த விடுமுறை நாள் சமய கூடுகைக்கு ஒரு குறிப்பிடத்தக்கநாள்.இந்தியாவி
முஸ்லீம்கள் இக்கூடுகைகளில் நண்பர்களை சந்திக்கின்றனர். பல நேரங்களில் திறமை வாய்ந்த மதகுருக்களால் தொழுகை செய்வதற்கு நடத்தப்படுகின்றனர். முஸ்லீமகள் இக்கூடுகைகளை இஸ்லாமின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமாகக் கருதுகின்றனர். இயேசு கிறிஸ்து,தமது இராஜ்ஜியம் சிறிய கடுகு விதைக்கு ஒப்பாக இருக்கிறது என்று சொன்னார். சுகம்,ஜீவன் மற்றும் இரட்சிப்பு ஆகியவை சிலுவை மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாகவே வருகிறது என்பதை முஸ்லீம்கள் பொதுவாக காணவில்லை.அதிகமான எண்ணிக்கை,பெரிய பேச்சாளர்கள்,உலகப்பிரகாரமான வல்லமைகளின் வெளிப்பாடு இவைகளின் மூலமாக அல்ல, அநேக நேரங்களில் பெலவீனத்தின் மூலமாகவே தேவனின் பெலன் வெளிப்படுகிறது.
ஜெபக்குறிப்புகள்.
உங்கள் நகரம்,பகுதி மற்றும் தேசத்திலுள்ள முஸ்லீம் குடும்பங்களுக்காக ஜெபியுங்கள்.
அவர்கள் உண்மையான விசுவாசிகளை சந்திக்கவும்,விசுவாசிகள் அவர்களுக்கு ஜீவ அப்பமாகிய இயேசுவை அவர்களின் விருந்துகளில் பகிர்ந்து கொடுக்கவும் ஜெபியுங்கள்.(சங்கீதம்.34:8,யோ.
பெரிய கூடுகைகளில் பங்குகொள்ளும் உங்கள் பகுதியிலுள்ள முஸ்லீம்களுக்காக ஜெபியுங்கள்.தேவன் அவர்களது கவனத்தைப் பெறுவாராக.
சிலுவையில் அறையப்பட்ட,உயிர்த்தெழுந்த,இன்
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/asia-south-central/eid-ud-fitr-crowds/
ஷாபு says
அமா ஓரு கேளவி? குறிப்பிட்ட திணத்தில் ஏண் ரமலாண் கோண்டாட வேண்டும் இசுலாமிய LAJIC படிபார்த்தால் சரிபட்டுவறுவதாக தேறியவில்லையே? கிருஸ்மஸ் திணத்தை மட்டும் கூறை கூறும் இவர்கள் எண் இப்படி சேய்கிண்றனர்? அவர்களை போறுத்தவரை 08.09.2012 ரமலாண் அரம்பிகிண்றது என்றால் 08.09.2013 திரும்ப வராதே இஸ்லாமிய அறிஞர் PJ அவர்கள் அப்படிதானே குறிவறுகிறார். ஓகோ முகமது என்பதால் அல்லா எப்பழதும் போல இடஓதிக்கீடு கோடுத்துவிட்டாரோ?