கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
நோன்பு நாள் – 7
இந்தியாவின் குஜராத்திலுள்ள சித்திஸ் மக்கள் : மக்கள் தொகை:20,000 முதல் 65,000 வரை.
இன்றைய இந்தியாவில் பல்வேறு கலாச்சரா மற்றும் சமுதாயங்களின் கலவையில் காணமற் போயிருக்கும் மக்கள் கூட்டத்தினர்தான் ஆப்பிரிக்க வழிதோன்றல்களான சித்திஸ் என்று அழைக்கப்படும் மக்கள் ஆவர் .பல தலைமுறைகளாக இந்தியாவில் வாழ்த்து விட்ட காரணத்தினால் அவர்களில் அதிகமான பேருக்கு தங்களது சொந்த சரித்தரமே தெரியாது.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்க அடிமைகள் அமேரிக்கா,பிரேசில் மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு கொண்டு போகப்படுவதற்கு முன்பாகவே இந்திய இராஜ்யங்களுக்கு அடிமை இராணுவ வீரர்களாக விற்கப்பட்டனர். நவாப்கள் மற்றும் சுல்தான்களின் இராணுவங்களில் பணிபுரிவதற்காக ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலிருந்து திரளான மக்கள் வந்தனர் அல்லது கொண்டு வரப்பட்டனர். அவர்களிடமிருந்து வந்த இந்தியர்களான இவர்கள் சமுதாய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒதுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் மூல ஆப்பிரிக்க கலாச்சாரத்தையும் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை அல்லது இந்திய கலாச்சாரத்தோடு கலந்து விடவும் முடியாமல் இரண்டு முடியாமல் இரண்டு சமுதாயத்திற்கு இடையில் சிக்கித் தவிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் குஜராத்தி மற்றும் இந்திமொழி பேசினாலும் இவர்களது பாடல்களில் ஸ்வாஹிலி வாசனைத் தெரிகிறது. சோல்லப்போனால் இவர்களது இசை,பாடல் மற்றும்,நடனம் மட்டுமே ஆப்பிரிக்க சரித்திரத்தோடு இவர்களுக்கு உள்ள தொடர்பாக இருக்கிறது.
மிகுதியான சித்திஸ்கள் மேற்கத்திய மாநிலமான குஜராத்தில் வசிக்கின்றனர். சித்திஸ்கள் மட்டுமே குடியிருக்கும் இரண்டு இடங்களில் ஒன்று கிர் காட்டின் உட்பகுதியில் உள்ள ஜாம்பூர் கிராமமாகும்.இது மிகவும் ஏழ்மையான கிராமம் பொதுவாக எல்லாரும் ஏற்றுக் கொள்ளும் கதையின் படி இந்தக் குடியிருப்பைத் தோற்றுவித்தவர் மெக்காவிற்கு ஹஜ் பயணத்தில் இருந்த போது நைஜீரியா நாட்டிலிருந்து சூடான் நாட்டில் வழியாக வந்தவராவார். இந்தத் தலைவர் பாவா/பாபா கோர் என்று அழைக்கப்படும் செல்வந்தரான வியாபாரியாவார். இவர் முதலில் ராஜ்பிப்லா குன்றுகளில் குடியேறி பிறகு ஜாம்பூருக்கு வந்தார்.
சித்திஸ் ஆண்கள் பல்வேறு வேலைகளைச் செய்யும் தினக்கூலி தொழிலாளர்கள். அவரகள் அதிகாலையில் வீட்டை விட்டு வயல்களிலும்,காடுகளிலும் மற்றும் சாவல்களிலும் வேலை செய்து நாளொன்றுக்கு ரூ.50 முதல் 80வரை சம்பாதிக்கினறனர். சிறுபிள்ளைகள் அவர்களது காரியங்களை அவர்களே பார்த்துக் கொள்ளும்படி விட்டுவிடப் படுகிறார்கள்.அவர்களது செயல்பாடுகளை பல நேரங்களில் பெற்றோர்கள் அறியாதிருக்கிறார்கள்.சில சித்திஸ்களே ஆரம்பக் கல்வியை முடிக்கின்றனர். அதிலும் குறைவானவர்களே உயர்நிலைப் பள்ளிக்குச் செல்கின்றனர். குறிப்பாக பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வெளி உலகத்தைக் குறித்து ஒன்றுமே தெரியாது.
சித்திஸ்களின் சமுகரீதியான பிரச்சனைகளில் சிலவற்றில் குடிப்பழக்கமும் ஒன்று (ஆண்கள் சம்பாதிக்கிற கொஞ்ச பணத்தின் பெரும் பகுதியை உள்ளூர் சாரயம் வாங்க பயன்படுத்தி விடுவதால், அவர்களது குடும்பங்களின் அடிப்படைத் தேவைகள் கூட சந்திக்கப்படாத நிலை இருக்கிறது):பள்ளிக்கூடத்திலி
சித்திஸ் பெரும்பாலும் சுன்னி முஸ்லீம்களாக இருக்கிறனர் ஆனால் சூஃ பி தலைவர் பாபாவோடு தொடர்பு உண்டு:இவர்கள் இயேசு கிறிஸ்துவின் செய்தியை நற்செய்தியாக ஏற்றுக் கொள்ளக்கூடும். இவர்கள் தனித்து வாழ்வதால் சுவிசேஷத்தை சுமந்து செல்பவர்கள் மிகவும் குறைவானர்களே இவர்களை சந்திக்கின்றனர்.
மேசியாவிலுள்ள தேவனுடைய அன்பின் வெளிப்பாடு இவர்களுக்குக் கிடைக்க ஜெபியுங்கள்.
குடும்ப ஒற்றுமைக்காகவும்,அன்பிற்காவும்
குடிப்பழக்கத்தின் அடிமைத்தனதிலிருந்து விடுதலை பெற ஜெபியுங்கள்.
பலமான தலைமைத்துவம் தேவைப்படுகிறது. கிராமத் தலைவர் ஒருவர் இருந்தாலும், இவர்களது சமுதாய மற்றும் அரசியல் நிலைகளில் முன்னேற்றம் ஏற்பட புதிய தலைவர்கள்.இதற்காக ஜெபியுங்கள்.
சித்திஸ் மக்களை நற்செய்தியினாலும்,சுகாதார பராமரிப்பினாலும், கல்வியினாலும், விவசாய மேம்பாட்டுத் திட்டங்களினாலும் சந்திக்கும் மக்களை தேவன் அனுப்பும்படி ஜெபியுங்கள்.
ஆங்கிலத்தில் ஜெபக்குறிப்புகள் IN ENGLISH
http://www.30-days.net/muslims/muslims-in/asia-south-central/the-siddis-of-gujarat-india/
I am a mauritian , withancestors coming from South india over two hundred years ago I wish to get more more information about the siddis and their social evolution in India , more specially in the south , like karnataka,Tamil Nadu.If possible let me have the address of the NGO working for the improvement and well being of the siddis .Thx