IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • மிஷனரிகளின் வரலாறு
  • சத்தியத்தின் சான்றுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ
You are here: Home / புதுவெளியீடுகள் / நோன்பு நாட்களில் இஸ்லாமிய உலகத்துக்கு ஜெபம்

நோன்பு நாட்களில் இஸ்லாமிய உலகத்துக்கு ஜெபம்

July 21, 2012

கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவர்களே நம்முடைய சகோதரர்களாக உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்,தொடர்ந்து இஸ்லாமிய பிண்ணனியில் இருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய சகோதரர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தினராலும்,தங்கள் சமுதாயத்தாலும் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் வளர்ந்து கனிகொடுக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.மேலும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் விசுவாசிகளுக்கு மறக்காமல் ஜெபியுங்கள்.அவர்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அவர்களின் நிலை மாறவும் அனைவரும் தைரியமாக தங்கள் விசுவாததை அறிக்கையிடவும் உங்கள் முழங்கால் யுத்தங்களில் மன்றாடுங்கள்.கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

கையேடு அறிமுகம்:

logo-30-days-net

கடந்த 20 வருடங்களாக இயேசுவாகிய மேசியாவை விசுவாசிக்கிற பல இலட்சக்கணக்கான விசுவாசிகள் ரம்ஜான் மாதத்தில் முஸ்லீகளுக்காக ஜெபித்துவருகிறார்கள்.இயேசு கிறிஸ்து தமது சீடர்களிடத்தில் “அறுவடைக்கு எஜமான் தமது ஆட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள்” என்று கட்டளையிட்டிருக்கிறார்.கடந்த 20-30 வருடங்களில் தேவன் இஸ்லாமிய உலகில் காணும்படியானவிதத்தில் கிரியை நடத்திவருகிறார்.சமீப ஆண்டுகளில் லட்சக்கணக்கான முஸ்லீம்கள் நமக்காக இரத்தம் சிந்தி மரித்து உயித்தெழுந்த மேசியாவை கண்டுகொண்டு இருக்கிறார்கள்.முஸ்லீம்களுக்கு நற்செய்தியை எடுத்துச் செல்லும் முயற்சிகள் பலமடங்கு அதிகரித்துள்ளன.மேலும் இத்தகைய முயற்சிகளில் இதே பிண்ணனியில் வந்த மக்கள் அதிகமாக முன்பாக நின்று ஈடுபடுகிறானர்.இஸ்லாமிய உலகில் தேவ இராஜ்ஜியம் வருவதை காணும்படியாக இந்த உலகலாவிய 30 நாட்கள் ஜெப இயக்கத்தில் மீண்டுமாய் இணைந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்.தேவனுக்கு கடினமானது என்று ஒன்றுமில்லை.நாம் உண்மையிலேயே அவரை நம்புகிறோமா?

முஸ்லீம்களுக்காக ஜெபிப்பதற்கான இந்த அழைப்பு முதன்முதலில் 1992 ம் ஆண்டு பல கிறிஸ்தவ தலைவர்கள் மத்திய கிழக்கு நாட்டில் கூடிய கூட்டத்தில் வந்தது.ஓர் சர்வதேச இயக்கத்தில் ஈடுபட்டிருந்த விசுவாசிகள்,முஸ்லீம் உலகத்திற்காக ஜெபிப்பதற்கு கிறிஸ்தவர்களை அழைக்கவேண்டும் என்கிற தேவனுடைய விருப்பதை உணர்ந்துகொண்டனர்.சந்திர நாட்காட்டியை பின்பற்றும் இஸ்லாமிய மாதமான ரம்ஜான் மாதத்தை ஒட்டி ஒரு ஜெப இயக்கம் திட்டமிடப்பட்டது.(2012 ல் இது ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 19 வரை நடைபெறும்)”30 நாட்கள்” ரம்ஜான் மாதத்தில் திட்டமிடப்பட்டதற்கான முக்கியமான காரணங்கள் இரண்டு உண்டு.1) ஒரு வருடத்தின் குறிப்பிட்ட பகுதியில் கிறிஸ்தவர்கள் தங்களை முஸ்லீகளோடு அடையாலப்படுத்திக்கொ கொள்வதற்காக,2)முஸ்லீகள் மிகவும் பக்தியோடு இருக்கும் வருடத்தின் இப்பகுதியில் அவர்களுடைய வாழ்வில் தேவனுடைய இடைபடுதல் இருக்கும்படியாக .தயவு செய்து கவனியுங்கள் ரம்ஜான் மாதத்தில் நாம் ஜெபிப்பதால் முஸ்லீகளின் உபவாசம் மற்றும் ஜெபம் ஆகியவற்றில் ஒத்துப்போகின்றோம் என்று அர்த்தமல்ல.இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகளாகிய நாம் பல பகுதிகளில் இஸ்லாமிய எண்ணங்களுக்கும்,இறையியலுக்கும் மற்றும் பழக்க வழக்கங்களுக்கும் வேறுபட்டு இருக்கின்றோம்.இருப்பினும் ”30 நாட்கள்” இயக்கம் முஸ்லீகள் மீது தேவன் கொண்டுள்ள அன்பை வலியுறுத்துகிறது.மேசியாவை விசுவாசிக்கிறவர்கள் முஸ்லீகளுக்கு நேராக தாழ்மை ,அன்பு ,மரியாதை மற்றும் சேவை மனப்பான்மையை வளத்துக்கொள்ள வேண்டும் என்று உற்சாகப்படுத்துகிறோம்……


தேவனின் ஆதிகால வாக்குத்தத்தங்களை விசுவாசித்தல்

4000 ஆண்டுகளுக்கு முன் தேவன் ஆபிரகாமோடும் அவர் சந்ததியோடும் பேசினார்.இந்த வாக்குத்தத்தங்களே இன்றைக்கும் தேவன் பூமியில் செய்யும் செயல்பாடுகளின் அஸ்திபாரங்களாக இருக்கிறது.
தேவன் ஆபிரகாமோடு சொன்னார்..”ஆதி 22: 18. நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

தேவன் ஈசாக்கோடு பேசினார் ,”ஆதி 26: 5. நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

தேவன் யாக்கோபோடு(இஸ்ரவேல்) பேசினார்,”ஆதி 28: 14. உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.

கலாத்தியர் 3:13. மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.14. ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும்,….. 16. ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; ….
கலாத்தியர் 3: 29. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்.

உலகமெங்கும் உள்ள முஸ்லீகள் ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு மற்றும் இஸ்மவேல் ஆகியோரை தங்கள் மதத்தின் முக்கிய நபர்களாக உரிமை கொண்டாடுகின்றனர்.ஆனால் இவர்களை பற்றி மிகக்குறைவாகவே அறிந்துள்ளனர்.குரானிலும் முகமது அவர்களை குறிந்த ஹதீஸ்களிலும் இந்த கோத்திரபிதாக்களுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்களை பற்றியோ அல்லது இவர்கள் வாழ்க்கையைப்பற்றியோ எந்தவித விரிவான செய்தியும் இல்லை.பெரும்பாலான முஸ்லீம்களுக்கு இந்தப்பக்கத்தில் சொல்லப்பட்டுள்ள பண்டையக்கால வாக்குத்தத்தங்களெல்லாம் மெசியாவாகிய இயேசுகிறிஸ்துவில் நிறைவேறுகின்றன என்ற அறிவு எந்த விதத்திலும் இல்லை.
நம்மில் அநேகர் ,கிறிஸ்தவர்களாக,பூமியிலுள்ள குடும்பங்களுக்கெல்லாம் ஆசீர்வாதம் என்ற தேவனின் தரிசனத்தை இழந்துவிட்டோம்.பயமும் ,பலவேலைகளில் முஸ்லீம்கள் மேல் காழ்புணர்ச்சியும் நம்மை ஆட்டிப்படைப்பதற்கு அனுமதித்துவிட்டோம்.இதனை மேற்கொள்வதற்கு நாம் பயத்திலிருந்து மனந்திரும்பி,உலகிலுள்ள மக்கள் அனைவரின் பேரிலும் தேவன் கொண்டிருக்கும் நன்மையை ஆமோதித்து,தேவனிடத்தில் விசுவாசத்தை மீண்டும் நமக்குத் தரும்படி கேட்க வேண்டும்.நமது அக்கறையற்ற தன்மைக்காக மனந்திரும்பி ,இஸ்லாமிய உலகத்திற்காக தேவன் கொண்டிருக்கும் நம்பிக்கையை நமக்குத் தரும்படி வேண்டிக்கொள்ள வேண்டும்.நமது அன்பு குறைவிற்காக மனந்திருந்தி .இயேசு கிறிஸ்து வாக்குப் பண்ணியிருக்கிற (மத் 6:10,2 பேதுரு 3:13) பல இன மற்றும் பல கலாச்சார நீதியின் இராஜ்ஜியத்தில் நாமும் பங்குபெற அவரின் அன்பை நமக்குத் தரும்படி கேட்க வேண்டும்.
தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய்,
தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். (சேலா.)
தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.(சங் 67:1-3)

மேசியாவை பின்பற்றுவோர் அவர் நேசிப்பது போல முஸ்லீம்களை நேசிக்கும்படி சவால் விடுவது.

மூஸ்லீம்களோடு கிறிஸ்தவர்களுக்கு உள்ள உறவு பெரும்பாலும் சச்சரவு.பயம் மற்றும் அன்புக்குறைவின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.இது இயேசு கிறிஸ்து தமது மக்கள் எவ்விதமாக வாழ் வேண்டும் என்று கற்பித்ததற்கு எதிர் மறையாக இருக்கிறது.அவரை பின்பற்றும் நமக்கு பயத்தைப் புறம்பே தள்ளுகிற அன்பு வக்குத்தத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது.நாம் நம்முடைய அயலாரையும் ஏன் நம்முடைய சத்துருக்களையும் கூட நேசிக்கும்படியாக கட்டளையிடப்பட்டிருக்கிறோம்.தீவிர அன்புகூறும் பிரச்சாரமானது இயேசுவை பின்பற்றுவோர் கீழ்கண்ட உறுதிமொழிகளை எடுத்து அவரது மாதிரியைப்பின்பற்றவும் மேலும் அவருக்கு கீழ்படியவும் தீர்மாணம் செய்ய உற்சாகப்படுத்துகிறது.

நான் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பான உணர்வுகள் ஏதேனும் எனக்குள் இருப்பின் அதற்காக மனந்திரும்பி அன்பைப் பின்தொடர்வேன்.நான் முஸ்லீம்களை தேவன் ஆசீர்வதிக்கும்படியாகவும் மேலும் அவர்கள் அவரது சமாதானத்தை அனுபவிக்கும்படியாகவும் ஜெபிப்பேன்.நான் வருகிற வருடத்தில் முஸ்லீகளுக்காக குறைந்தபட்சம் ஒரு கருணையான செயலையாவதும் செய்வேன்.
நான் மரியாதையுடன் கிறிஸ்துவைக் குறித்த நற்செய்தியை பகிர்ந்துகொள்வேன்
நான் முஸ்லீம்களை குறித்து வழக்கமாக சொல்லப்படும் எதிர்மறையான காரியங்களை பரப்பமாட்டேன் மாறாக என் வார்த்தைகளை கிருபையால் நிறைப்பேன்.
நான் இந்த பிரச்சாரத்தை அன்பு சத்தியம் மற்றும் நற்செயல்கள் என்ற ஆயுதம் பூண்டு செய்வேன்.

இயேசுவைப் போல் அன்புகூறுவதில் தீவிரவாதியாயிருங்கள்.

இந்த பிரச்சாரத்தை செய்து உலகத்தை மாற்றுங்கள்.

நான் இந்த உறுதிமொழியில் கையொப்பமிடுகிறேன்……………………………….

மேலும் www.redicallovenow.com என்ற இணையதளத்திலும் கையெழுத்திடவும் மேலும் உங்களது நண்பர்களில் 10 பேர் இவ்விதம் செய்ய உற்சாகப்படுத்துங்கள்.மொழொபெயர்ப்புகள் பல்வேறு மொழிகளிலும் இணையதளத்தில் உண்டு.(இந்தோனேஷியன்,பிரஞ்ச்,கொரியன்,அரபி,மற்றும் போர்த்துகீசு) www.facebook.com/redicallovenow என்ற முகநூலிலும் பார்கவும்.

நோன்பு தினம் :1

பயத்திலிருந்து விசுவாசத்திற்கு இயேசுகிறிஸ்துவோடு நடப்பது,தீமையை நன்மையினால் வெல்லுவது

உலகமெங்கும் உள்ள விசுவாசிகளுக்கு தெரிந்துகொள்ளுதல் ஒன்று உண்டு:அது தேவனை விசுவாசிப்பதா அல்லது பயத்தினால் பீடிக்கப்படுவதா?என்பது.நாம் விசுவாசத்தினால் செயல்படபோகிறோமா அல்லது பயத்தினால் செயல்படபோகிறோமா? சில இஸ்லாமிய தீவிரவாதிகள் அநேகரை பயமுறுத்தியுள்ளனர்.இஸ்லாமை குறித்த பய உணர்வு விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகளின் இருதயங்களை ஒருமிக்க பிடித்துள்ளது.சிறுபான்மை இஸ்லாமிய அடிப்படைவாதத் தற்கொலை படையினர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதை மறுக்கமுடியாதுதான்.ஆனால் எல்லா முஸ்லீம்களும் அப்படிப்பட்டவர்கள் இல்லை.முஸ்லீம்களே பயப்படுகிறவர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள்.அவர்களில் பலர் மரணம் சம்பவிக்கலாம் என்ற எதிர்பார்போடு வாழ் வேண்டிய நிலையிலிருக்கிறனர்.பயம் மற்றும் காழ்ப்புணர்வு பலரை இஸ்லாமோடு சம்மந்தப்பட்ட எதையும் வெறுக்கும்படியாக செய்திருக்கிறது.நம்மில் சிலருக்கு முஸ்லீம்களை குற்றங்கண்டுபிடிப்பது எளிதாக இருக்கிறது.

ஆனால் விசுவாசிகளாக எவ்வாறு முன்னேறி செல்லப்போகிறோம்?.

நாம் முஸ்லீகளை குறைகூறுபவர்களாக இருப்போமானால் நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நாமும் அவர்களை போலவே மனிதர்கள்தான்.நம்முடைய வாழ்வின் பல பகுதிகளையும்,மதிப்பீடுகளையும் கருத்துக்களையும்,எண்ணங்களையும்,மற்றவர்களை குறைகூற வாய்ப்புகள் இருக்கிறது.குறைகூறுதல் சில வேளைகளில் உதவியாக இருக்கும்.ஆனால் அது அன்பு குறைவை பிரதிபலிக்கிற ஒன்றாககூட இருக்கலாம்,நாம் அன்பில்லாதவர்களாய் இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமாக இருக்கிறது.

நாம் தேவனிடத்தில் உண்மையாக இருப்போம்.

தேவன் எல்லா வித மக்கள் கூட்டம் மற்றும் கலாச்சாரக் குழுவில் இருக்கிற மக்களையும் நேசிக்கிறவர்.அவட்கள் ஒரு நாளிலே தமது சிங்காசனத்துக்கு முன்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.” …….. ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,…(வெளி 5:9)
நமது மனநிலைகள் தேவனுடைய மதிப்பீடுகளொடு ஒரே நிலையில் இருக்க தேவன் உதவி செய்வாராக.

ஒளி இருளை விரட்டி விடுகிறது.

ஒரு சிறிய தீக்குச்சி ஒரு பெரிய அறையை வெளிச்சமக்க முடியும்.மேலும் பல மெழுகுவர்திகள் ஏற்றி வைக்கப்பட்டால் ஒரு அறை இன்னும் பிரகாசமாக மறிவிடும்.இருளும் காரிருளும் வெளிச்சத்திற்கு எதிராக வெற்றி பெற முடியாது.வெறுமனே ஒரு ஸ்விட்சை திருப்புவதன் மூலம் ஒரு அறையை ஒளிவெள்ளத்தில் ஆற்ற முடியும்.ஓளி ஏற்றப்பட்ட வண்ணமாக இருப்பதற்கு நாம் ஆயத்தமாக இருக்கிறோமா?
விசுவாசம் பயத்தை மாற்றியமைக்க முடியும்.
ஒரு சிறிய அளவு விசுவாசம் கூட மலைகளை அகலசெய்யும் .நம்முடைய இதயங்களில் விசுவாசம் எழும்பட்டும்.தேவன் இஸ்லாமிய உலகை மாற்ற வல்லவராயிருக்கிறார்.இலட்சக்கணக்கான மக்கள் இன்னமும் பாவமண்ணிப்பையும்,கிறிஸ்துவுக்குள்ளான புதுவாழ்வையும் அறிந்துகொள்ள முடியும்.விசுவாசியுங்கள்.

ஜெபம் மற்றும் செயல் திட்டங்கள்:

நாளைய தினத்தில் வெளியிடப்படும் சாட்சியை வாசித்து உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.தேவன் இஸ்லாமிய உலகில் கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.அவர் திரைகளின் பின்பாகவும் எட்டிப்பிடிக்கிறார்.
உங்களுக்காக ஜெபியுங்கள்.நீங்கள் இஸ்லாமைக் குறித்து பயப்படுகிறீர்களா?நீங்கள் முஸ்லீம்களை கண்டு பயப்படுகிறீர்களா?பயம் நம் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்போகிறோமா?நீங்கள் குற்றங்கண்டு பிடிப்பவரா?உங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.அவரது அன்பு உங்களது இருதயத்தை நிரப்பட்டும்.தேவனுக்குள் களிகூறுங்கள்.அவரது ஓளியில் களிகூருங்கள்.
உங்களது குடும்பத்திற்காகவும்,திருச்சபைக்காகவும் மேற்கூறியவாறு ஜெபியுங்கள்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2026 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network