பிஜே அவர்களின் பைபிள் ஆராய்ச்சியின் அழகு-THIS IS WHAT PJ’s STANDARD OF RESEARCH ON THE HOLY BIBLE
கிறிஸ்தவர்களின் பரிசுத்த வேதாமகம் திருத்தப்பட்டுள்ளது. புரட்டஸ்டண்டுகள் தள்ளுபடி ஆகமங்களை நீக்குவதற்கு அப் பவுல் அவர்களின் பாவப்பரிகார கொள்கைக்கு அவைகள் முரண்பாடாக சில வசனங்கள் இருந்தது .அவைகள் கிறிஸ்தவத்தின் அடிப்படையே தகர்த்துவிடும் என்பதை தான் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளதாக 20 வருடங்களுக்கு மேலாக பேசிய பிஜே அவர்கள் அதை ”இதுதான் பைபிள் “ என்ற தலைப்பில் புத்தகமாகவும் வெளியிட்டு அந்த புத்தகம் ஏதோ கிறிஸ்தவர்களுக்கு சிம்ம சொப்பனமாக(சும்மா தமாஸ் பண்ணாதீங்கோ) விளங்குவதாகவும் பெருமையடித்துவந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த விவாதத்திற்கு முன்பு நடந்த விவாத ஒப்பந்தத்தில் பிஜே அவர்களின் புத்தகத்தில் பல தவறுகள் உண்டு என்று சொன்னபொழுது அதை தனி தலைப்பாக வைத்து விவாதிக்கலாம் என்றார் பிஜே.ஆனால் நாம் அதை மறுத்து நீங்கள் எழுதிய புத்தகங்கள் அனைத்து நாம் ஒப்பந்தம் போட்டிருக்கும் தலைப்புக்குற்பட்டே வருகிறது.அதில் இதை விவாதித்துக்கொள்ளுவோம் என்று சொன்னோம்.
ஜனவரி மாதம் (21,22-1-2012) பைபிள் இறைவேதம் என்ற தலைப்பில் சென்னை நடந்த விவாதத்தில் நாம் அந்த புத்தகத்தின் பரிதாப நிலையை மக்கள் முன்பு எடுத்துக்காட்டியவுடன் இல்லை இதற்கு இங்கு பதில் சொல்லமாட்டேன்.என்னை பற்றியும்,என் புத்தகத்தை பற்றியும் விவாதிக்க ஒன் டூ ஒன் தனி தலைப்பு உள்ளது.ஒப்பந்தத்தில் சீடியில் இருக்கிறது என்று ஒரு குண்டை தூக்கி போட்டார்.இதை கேட்ட TNTJ வினர் திரு திரு என்று விழிக்க ஆரம்பித்தனர்.இது எப்படிடா நமக்கு தெரியாமை தனி தலைப்பை தலைவர் அவர்கள் ஒப்பந்தம் போட்டார்கள் என்று.(ஒப்பந்த படிவத்தை பிஜே அவர்களுக்கு காட்டாமல் TNTJ நிர்வாகிகள் இருட்டடிப்பு செய்துவிட்டார்களோ என்ற சந்தேகப்பட வேண்டியுள்ளது)
உண்மையாகவே ஒப்பந்தத்தில் என்ன உள்ளது என்பதை கீழே உள்ள படத்தில் காணலாம்.
ஞான ஆகமம் 2 அதிகாரத்தின் 1 முதல் 5 வசனங்கள் கீழே கொடுக்கப்படுகிறது.
அதிகாரம் 2
1 இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக் கொண்டார்கள்; “நம் வாழ்வு குறுகியது; துன்பம் நிறைந்தது. மனிதரின் முடிவுக்கு மாற்று மருந்து எதுவுமில்லை. கீழுலகிலிருந்து யாரும் மீண்டதாகக் கேள்விப்பட்டதில்லை.
2 தற்செயலாய் நாம் பிறந்தோம்; இருந்திராதவர்போல் இனி ஆகிவிடுவோம். நமது உயிர்மூச்சு வெறும் புகையே; அறிவு நம் இதயத் துடிப்பின் தீப்பொறியே.
3 அது அணையும்பொழுது, உடல் சாம்பலாகிவிடும். ஆவியோ காற்றோடு காற்றாய்க் கலந்துவிடும்.
4 காலப்போக்கில் நம் பெயர் மறக்கப்படும். நம் செயல்களை நினைவுகூரமாட்டார்கள். நம் வாழ்வு முகில் போலக் கலைந்து போகும்; கதிரவனின் ஒளிக்கதிர்களால் துரத்தப்பட்டு, அதன் வெப்பத்தால் தாக்குண்ட மூடு பனிபோலச் சிதறடிக்கப்படும்.
5 நம் வாழ்நாள் நிழல்போலக் கடந்து செல்கின்றது. நமது முடிவுக்குப்பின் நாம் மீண்டு வருவதில்லை; ஏனெனில் முடிவு குறிக்கப்பட்டபின் எவரும் அதிலிருந்து மீள்வதில்லை.
21 வருடங்களுக்கு முன்பாக பிஜே அவர்கள் பைபிளின் ஆராய்ச்சி பற்றி பேசிய வீடியோவும்,சென்னை விவாதத்தில் நாம் வைத்த வாதமும் பிஜே அவர்கள் சொன்ன பதிலும் இணைந்த வீடியோ கீழே உள்ளது.
TAMIL ISLAM says
சரியான அரைகுரை இவர்.இவைரை பின்பற்றி ஒரு பெரிய செம்மரிஆட்டுக்கூட்டம்