ஆன்லைனில் இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் வேதாகமத்துக்கு விரோதமாக பல புத்தகங்களை வெளியிட்டு உள்ளார்கள்.அதில் இயேசு கிறிஸ்து இறைவனுடைய மகன் இல்லை.அவர் தேவன் அல்ல,போன்ற அவருடைய தெய்வீகத்துக்கு எதிராக பல வாதங்களை வைக்கிறார்கள்.
மேலே உள்ள புத்தகத்தில் போதகர் பவுலி அவர்கள் அவர்களுடய வாதங்களுக்கெல்லாம் வேதாகமத்தின் அடிப்படையில் தெளிவான விளக்கங்களை கொடுத்துள்ளார்.
1) திரித்துவம் என்றால் என்ன?,2)இயேசு கிறிஸ்து தெய்வமானால் தெய்வம் மரிக்கலாமா? 3)ஒருவருடைய பாவத்துக்கு இன்னொருவருக்கு தண்டனையா? 4)இயேசு தன்னை தெய்வம் என்று சொன்னாரா?,5) தெய்வமே தெய்வத்தை பார்த்து ஜெபம் செய்தாரா? 6)திரித்துவம் என்ற வார்த்தை பைபிளில் உண்டா?,7)கடவுளுக்கு மகன் இருக்க முடியுமா?
இது போன்ற பல கேள்விகளுக்கு அழகான முறையில் வேதாகம மேற்கோள்களுடன் விளக்கப்பட்டுள்ளது.தேவையான இடங்களுக்கு குர்ஆன்,ஹதீஸ்கள்,மற்றும் இஸ்லாமிய புத்தகங்களின் ஆதாரங்களையும் ஆசிரியர் மேற்கோள் காட்டியிருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது.
ஆசிரியர் :போதகர் பி.வி.பவுலி
வெளியீடு:வேர்ட் ஆப் கிரைஸ்ட்
இந்த புத்தகம் அனைத்து முன்னனி கிறிஸ்தவ புத்தக நிலையங்களிலும் கிடைக்கும்.அல்லது இந்த புத்தக அட்டையில் இருக்கும் முகவரிக்கு தொடர்புகொண்டால் பெற்றுக்கொள்ளலாம்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையும், சமாதானமும் உங்கள் அனைவர் மேலும் உண்டாவதாக.
இஸ்லாமியர் கேட்கின்ற அநேக கேள்விகளுக்கு மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் இந்த புத்தகத்தில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையாக தூய மனதுடன் சத்தியத்தை தேடி படிக்க ஆர்வமுள்ள இஸ்லாமியர் தொடர்ந்தும் கிறிஸ்தவர்களிடம் கேள்விகேட்டுக்கொண்டிருக்காமல் இந்த புத்தகத்தை பதிவிரக்கம் செய்து படித்து பயன்பெருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இறைவன் ஒருவரா மூவரா என்ற சந்தேகத்துக்கு தெளிவாக ஆதாரத்துடன் பதில் கொடுக்கப்பட்டுள்ளதை இந்த புத்தகத்தில் தான் நானும் முதலாவது வாசித்தேன்.
எப்படி பதிவு இறக்கம் செய்வது???
very important book, very super