கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு மீண்டும் உங்களை இந்த பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.மவ்லவி பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்களால் எழுதப்பட்ட “இதுதான் பைபிள்” என்ற புத்தகம் பைபிளை குறித்த பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் பல வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டு இருந்தது.அந்த புத்தகத்துக்கான பதில்களை அளிக்கும் வாய்ப்பை கர்த்தர் இப்பொழுது அளித்து வருகிறார்.இந்த புத்தகத்தின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு நாம் தெளிவான பதில்களை சொல்லி “இதுதான் பைபிள்” பதில்கள் முதல் பாகம் டிவிடி ஏற்கனவே வெளியிட ஆண்டவர் கிருபை செய்தார் .தற்பொழுது அதன் இரண்டாம் பாகம் டிவிடிவெளியிட ஆண்டவர் கிருபை செய்துள்ளார். இந்த டிவிடியை புதுவாழ்வு ஏஜி சபையின் தலைமை போதகர் D.மோகன் அவர்கள் ஜெபித்து பிரதிஷ்டை செய்தார்.நிச்சயம் அநேக தேவ பிள்ளைகளுக்கு இந்த டிவிடிகள் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம்.மேலும் இது போன்ற கேள்விகளை எழுப்புகிற இஸ்லாமிய நண்பர்களும் இனி சிந்தித்து கேள்விகளை கேட்பார்கள் என்று விசுவாசிக்கிறோம்.இந்த புத்தகத்தின் மீதமுள்ள கேள்விகளுக்கான பதில்கள் இன்னும் ஓரு பாகமாக கூடியவிரைவில் வெளிவர ஜெபித்துக்கொள்ளுங்கள்.எல்லா துதியும்,கனமும்,மகிமையும் ஆண்டவருக்கே உண்டாகட்டும்.ஆமேன்
Comments
Leave a Reply Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
உங்கள் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் இருக்கும் தேசமெங்கும் இந்த DVD கள் செல்லவேண்டும். DVD பணிகள் முடிந்தவுடன் இதனை நூலாக கொண்டு வர முயற்சிக்கவும்.
I am Muslim. I live in sri Lanka. I accept the Christianity.I like more information
May Our Lord and Saviour be with you. Our prayers are with you
al kuran irai weathama illaya
Your works for God is great
pioneers in tamil christian world. the tamil christian community, pastors, evangelists and all gospel workers are indebted to you arduous labor.