IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ
You are here: Home / பதில் கட்டுரைகள் / இயேசு கிறிஸ்து இஸ்ரவேலுக்கு மட்டும் வந்தவரா?

இயேசு கிறிஸ்து இஸ்ரவேலுக்கு மட்டும் வந்தவரா?

December 16, 2013

 கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே இந்த கட்டுரை மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 

இயேசு கிறிஸ்துவின் ஊழியம் இஸ்ரவேலருக்கு மட்டுமே, கிறிஸ்தவர்கள் நினைப்பது போல அது எல்லா மனிதர்களுக்குமானது அல்ல என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் வாதிடுகின்றனர்.  தங்களின் கூற்றுக்கு ஆதரவாக, இந்த இஸ்லாமிய அறிஞர்கள் பின்வரும் புதிய ஏற்பாட்டு வசனங்களை உடனே எடுத்துக் காட்டுகின்றனர்:
இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். மத்தேயு 10:5-6 அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். மத்தேயு 15:24

ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு என்பவர்களின் வம்சத்தில் இயேசு பிறந்தார் என்பதை நாம் உணர்ந்து கொள்வது முக்கியமானது ஆகும். அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆபிரகாமுக்கு தேவன் அளித்த வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலாக அவர் இருந்தார். தேவனுடைய சித்தத்துக்குக் கீழ்ப்படிதல் மற்றும் ஒப்புக் கொடுத்தலின் நிமித்தம் ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தமானது இரண்டு தன்மைகளை உடையதாக இருந்தது. முதலாவதாக, ஆபிரகாமின் சந்ததியான ஈசாக்கு, யாக்கோபு மற்றும் இஸ்ரவேலின் பிள்ளைகளை (சந்ததியினர்) ஆசீர்வதிப்பதாக வாக்களித்தார். இரண்டாவதாக, ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு எனும் அந்த வம்சத்தில் அனைத்து தேசத்தாருக்கும், அதாவது அனைத்து மக்களுக்குமான ஆசீர்வாதத்தை எழுப்புவேன் என்று வாக்களித்தார்.
  Gen 12:3  உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். 
Gen 22:18  நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். 
 (மேலும் பார்க்க:அப்போஸ்தலர் 3:25-26 மற்றும் கலாத்தியர் 3:8,14). ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தத்தில், இஸ்ரவேலரின் சந்ததியினரும், புறஜாதியாரும் (இஸ்ரவேலர் அல்லாதோர்) ஆகிய இருவரும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும். இது அநேக நூற்றாண்டுகளுக்குப் பின்பு இயேசு பிறந்தபோது உறுதிப் படுத்தப்பட்டது. குழந்தை இயேசுவை அர்ப்பணிப்பதற்காக ஆலயத்திற்கு எடுத்துச் சென்றபோது, அங்கே ஜெபித்துக் கொண்டிருந்த பக்தியுள்ள வயது சென்ற ஒரு மனிதர் தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு அங்கு வந்தார். அவர் தன் கைகளில் அந்தக் குழந்தையை ஏந்தி பின்வரும் வார்த்தைகளை தேவனிடம் ஜெபத்தில் சொன்னார்:

(1)புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், (2)உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான். லூக்கா 2:30-32
மேற்கண்ட வேதபகுதியில் இருந்து, இயேசுவின் ஊழியமும் இரண்டு தன்மையுடையது என்பதை நாம் அறிகிறோம். முதலாவது, அவர் இஸ்ரவலரிடத்தில் பிறந்தபடியால், இஸ்ரவேலரிடம் தன்னையும் தேவனையும் வெளிப்படுத்துவது அவருடைய முதல் ஊழியமாக இருந்தது. அவர்கள் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்- ஆபிரகாம், ஈசாக்கும் மற்றும் யாக்கோபின் சந்ததியினர். குர்-ஆனும் இந்த வித்தியாசத்திற்கு சாட்சி பகருகிறது:
வலிமையும், சிந்தனையும் உடைய இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகிய நமது அடியார்களை நினைவூட்டுவீராக! மறு உலகை நினைப்பதற்காகஅவர்களைச் சிறப்பாக நாம் தேர்வு செய்தோம். ஸூரத்துல் ஸாத் (38):45-46 இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கிய அருட்கொடையையும், உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்! ஸூரத்துல் அல்-பகரா (2):47

மிகவும் வருந்தத்தக்கதாக, இடைப்பட்ட காலத்தில் இஸ்ரவேலர் தேவனைப் பற்றிய காரியங்களில் கடினப்பட்டவர்களாகவும் வேறுபட்டவர்களுமாக மாறியிருந்தனர். இதன் விளைவாக, நீண்ட காலமாக இஸ்ரவேலர்கள் எதிர்பார்த்திருந்த ஆசீர்வதிக்கப்பட்டவரும், தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களை மீட்பதற்காக தேவனால் அபிசேகிக்கப்பட்டவருமான மேசியா, நானே என்று இஸ்ரவேலரிடம் உறுதிப்படுத்தும் படியாக, இயேசு அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் அவர்கள் மத்தியில் தனிப்பட்ட முறையில் ஊழியம் செய்வது அவசியமானதாக இருந்தது. இந்தக் காரணத்தினால் தான் அவருடைய தனிப்பட்ட ஊழிய காலத்தில், இயேசு தம் சீடர்களை இஸ்ரவேலரிடத்திற்கு மட்டுமே போகும்படி சொல்லி அனுப்பினார். அவர்கள் முதலாவது செய்தியைக் கேட்கவேண்டியதாயிருந்தது. அவர்கள் தேவ ஆசீர்வாதத்தைப் பற்றிய வாக்குத்தத்த உடன்படிக்கையின் மக்களாக இருந்த படியினால், இது அவர்களின் பாக்கியமாக இருந்தது.
இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்த போது அவரை உறுதிப்படுத்த அவருக்கு வழியை ஆயத்தப்படுத்த தேவனால் எழுப்பபட்ட தீர்க்கதரிசியாகிய யோவான் ஸ்தானகன் இயேசு கிறிஸ்துவைபார்த்து என்ன சொன்னார் என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது.
யோவான் 1:29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
அடுத்து இயேசு கிறிஸ்துவும் தான் உலக இரட்சகர் என்பதை தெளிவாக வேஹத்தில் சொல்லி உள்ளார்.
யோவான் 3:15. தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
மேலே உள்ள வசனங்கள் தெளிவாக நமக்கு இயேசு கிறிஸ்து உலக இரட்சகராக இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து, அவருடைய சீடர்களில் ஒருவர் இஸ்ரவேலரிடம் பின்வருமாறு பேசினார்:
நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்குப் புத்திரராயிருக்கிறீர்கள். அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான். அப்போஸ்தலர் 3:25-26
இயேசுவின் ஊழியத்தின் இரண்டாவது பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்வது மிக முக்கியமானது ஆகும். இந்த ஊழியமானது எல்லா மனிதரின் பாவங்களுக்கான பரிகார பலியாக அவர் தம் ஜீவனைக் கொடுப்பதாக இருந்தது. (1 தீமோத்தேயு 2:4-6). இது எல்லா தேசத்தவருக்குமான ஆசீர்வாதமாக இருந்தது. இயேசு சிலுவையில் பாடுபட்டு சிந்திய இரத்தத்தினாலே எல்லா மனிதரின் பாவங்களுக்கான தண்டனையைச் செலுத்தித் தீர்த்தார் என்ற நற்செய்தியே அந்த ஆசீர்வாதம் ஆகும். இந்த இரட்சிப்பின் ஆசீர்வாதத்தை ஏற்றுக் கொள்கிற எவருகுக்கும் தேவனுடன் நித்தியமான வாழ்வு உறுதியாக உண்டு எனச் சொல்லப்பட்டிருக்கிறது.
எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து (அல்-மஸீஹ்) பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. லூக்கா 24:46-47
மேசியாவாகிய இயேசுவில் இந்த இரட்சிப்பு அனைவருக்கும், யூதருக்கும் மற்ற நாடுகளைச் சேர்ந்த அனைவருக்கும் இருக்கிறது என்பதை வேதவசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. இயேசு பூமியில் ஊழியம் செய்த நாட்களில், தம் சீடர்களை இஸ்ரவேலரிடம் மட்டுமே போகும்படி சொன்னார் என்பதை நினைவில் கொள்க. ஆனால் அவருடைய ஊழியத்தின் இரண்டாவது பகுதியை செய்து முடித்த பின் (ஒப்புரவாக்குதலின் தியாக சிலுவை மரணத்திற்குப் பின்), அப்பொழுது அவர் சீடர்களிடத்தில் என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்:
நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும்,சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:8 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, ….. மத்தேயு.28:19

இந்த வார்த்தைகளை இயேசு அறிவித்தபோது, அவர்தாமே தம் உலகலாவிய தன்மையை உறுதிப்படுத்தினார்:
நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான். யோவான் 8:12
மீண்டுமாக இயேசு தன்னை அனைத்து மக்களுக்குமான இரக்கத்தில் சிறப்பான ஆசீர்வாதம் அல்லது வெளிப்பாடு என குறிப்பிடுகிறார்.  
இதிலிருந்து  மாம்சத்தின் படி இயேசு கிறிஸ்து யூதர்களுக்கு மட்டும் வந்தவராக இருந்தாலும் முழு உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்ப்பவர் என்பதையும்,உலக இரட்சகர் என்பதையும் வேதாகம வசனங்கள் அடிப்படையில் நாம் தேலிவாக அறிந்துகொள்ளலாம்.
  “இஸ்ரவேலருக்கு மட்டுமேயான அடையாளம்” என்று சில இஸ்லாமிய அறிஞர்கள்ர்கள் வாதிடுவது போல வேதாகமம் சொல்லுவது  இல்லை. இயேசு கிறிஸ்துவை பற்றிய பல தீர்க்கதரிசன வெளிப்பாடுகளின் நிறைவேறுதலில் அவர் இஸ்ரவேலுக்குள் மேசியாவாக வருவார் என்பது ஒரு தீர்க்கதரிசனமாக உள்ளது.இதுமட்டுமே இல்லாமல் பல தீர்க்கதரிசனங்கள் வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவை பற்றி உண்டு.எனவே ஏதோ ஒரு வசனத்தை பிடித்து தங்கள் கருத்துக்களுக்கு ஆதரவாக வேதாகம சத்தியங்களை புரட்ட நினைக்கும் இப்படிப்பட்ட நண்பர்கள் சத்தியத்தை அறிந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுகொள்ளுகிறோம்….

ஈசா குரான் இணையத்தில் வெளியான இந்த கட்டுரையானது சில அதிகப்படியான விவரங்களுடனும் ,மாற்றங்களுடனும் உங்களுக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Comments

  1. Robert paul says

    December 17, 2013 at 8:46 AM

    It is very true thank you brother

    Reply

Leave a Reply to Robert paul Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network