IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

TNTJ வினரின் மீண்டும் ஒரு நாடக அரங்கேற்றம்.

August 17, 2013

அன்புக்குரிய சகோதரர்களே இந்த பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.கடந்த சில நாட்களுக்கு முன் TNTJ வினரின் மாநில துணை தலைவர் சையது இப்ராஹிம் அவர்களுடன் அவர்கள் ஜமாத்தை சேர்ந்த புதிதாக இஸ்லாமை ஏற்றுகொண்ட ஜெய்சங்கர் என்பவரும் இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள்.அதில் சான் அமைப்பை குறித்து பல ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை வைத்தது மட்டும் இல்லாமல் நமக்கு விவாதத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள்.

TNTJ வினரின் குற்றச்சாட்டுகள் எவ்வித ஆதாரமுமில்லாதவை என்பதையும்,அவர்கள் தங்கள் மக்களை ஏமாற்றுவதற்காக வெறுமனே நாடகமாடுகிறவர்கள் என்பதையும்  http://iemtindia.com/?p=1041   இந்த வீடியோவில் நாம் பல ஆதாரங்களுடன் நிரூபித்து இருந்தோம்.மேலும் TNTJ வை சேர்ந்த ஜெய்சங்கர் அவர்களின் விவாத அழைப்பையும் நாம் ஏற்றுக்கொண்டிருந்தோம்.ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை அவர்களுக்கு நாம் வைத்திருந்தோம்.ஏற்கனவே ஒப்பந்த போடப்பட்டு அது கிடப்பில் இருக்கும் நிலையில் வேறு ஒரு நபர் மூலம் விவாதத்திற்க்கு அழைக்கும் இவர்களின் வேடிக்கையான அழைப்பை நாம் ஏற்றுக்கொள்ளுவதாகவும் ஆனால் நம்முடன் விவாதிக்க அழைப்புவிடுபவர் TNTJ வினரின் அதிகாரபூர்வ விவாத பேச்சாளராக அறிவிப்பு செய்து TNTJ அமைப்பின் அதிகார பூர்வ லெட்டர்பேடில் பரிந்துரை செய்து 20 ந்தேதிக்குள் நமது மெயில் ஐடிக்கு அனுப்புமாறு கேட்டிருந்தோம்.
இதை எதிர்பார்க்காத TNTJ வினர் அரண்டு போய் பின் விளைவுகளை ஆராயாமல் தாங்கள் செய்த தவறை உணர்ந்து நாம் அவர்களிடம் கேட்டதுபோல் TNTJ வினரின் லெட்டர் பேடில் பரிந்துரை கடிதம் அனுப்பாமல் கீழே உள்ளது போல் வெள்ளை தாளில் நமக்கு பதில் என்று சொல்லி நமது மெயிலில் அனுப்பியும் , அவர்களின் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கிலும் வெளியிட்டும் மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். முதலில் அந்த கடிதத்தை கீழே காணலாம்.

TNTJ வினரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் வெளியான கடிதமும்,அதனுடன் இணைந்திருந்த விளக்கமும்…

சகோதரர்களே மேலே உள்ள கடிதத்தையும்,அதை TNTJ வினரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கிலும் வெளியாகியுள்ள ஸ்கிரீன் சார்டையும் பார்த்திருப்பீர்கள்.குறிப்பாக இந்த கடிதத்தின் மூல TNTJ வினர் என்ன நாடகத்தை நடிக்கின்றனர் என்பதை நாம் உங்களுக்கு விளக்க விரும்புகிறோம்.இதோ அவர்கள் பேஸ்புக்கில் போட்டிருந்த இந்த வாசகங்களை கவனியுங்கள்..

அன்பு நண்பர்களே மேலே உள்ள TNTJ வினரின் வார்த்தைகளில் ஜெய்சங்கர் என்பவருக்கும் TNTJ வுக்கும் தொடர்பு இல்லாத மாதிரியான வார்த்தைகளை உபயோகித்துள்ளதை கவனித்து இருப்பீர்கள்.நண்பர்களே TNTJ வினர் நம்மை விமர்சித்து வெளியிட்ட வீடியோவில் இந்த ஜெய்சங்கர் என்னும் சகோதரர் தன்னை TNTJ வினரின் பிரதிநிதியாக காட்டிகொண்டு பேசுவதை கீழே உள்ள வீடியோக்களில் காணலாம்.

ஆனால் நம்முடைய வீடியோவில் அவர்களுடைய விவாத அழைப்பை ஏற்றுக்கொள்ளுவதாகவும்,பைபிள்,குரான்,மற்றும் ஹதீஸ்களை பற்றி விவாதிக்க நாம் தயார் என்றும், TNTJ வினரின் அதிகாரப்பூர்வ விவாத பேச்சாளராக அவரை முன் நிறுத்தும்படியும் நாம் கேட்டவுடன் ஆடிப்போன TNTJ வினர் ஜெய்சங்கர் அவர்களை வைத்து மீண்டும் ஒரு சூப்பர் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்கள். சகோ .ஜெய்சங்கர் அவர்களின் மார்க அறிவைப் பற்றிய நம்பிக்கை அவர்களுக்கு இருந்திருந்தால் அவரை இப்படி தனியாக காட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பதை நாம் சிந்திக்கவேண்டும்.அவரை தங்கள் ஜமாத்தின் பிரதிநிதியாக பரிந்துரைக்க இவர்கள் ஏன் தயங்குகிறார்கள்,ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.நம்முடன் விவாதித்த இவர்கள் குர்ஆன்,ஹதீஸ்களை மட்டும் தள்ளிவிடுகிறார்கள் என்று நினைத்தோம் ஆனால் தற்பொழுது தங்கள் ஜமாத்தை சேர்த்தவரையே தனி நபராக காட்டவேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள்..பொய்யில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு இறைவன் இதுபோன்ற தடுமாற்றங்களை உண்டாகிவிடுவார்

தொடர்ந்து சகோதரர்களே TNTJ ஜெய்சங்கர் அவர்களின் கடிதத்தில் உள்ள முரண்பாடுகளை உங்களுக்கு விளக்க உள்ளோம்.அவருடைய கடிதத்தை மூன்று பகுதியாக பிரித்து TNTJ ஜெய்சங்கர் கடிதம் ,…. என்று சிகப்பு கலரில் அடையாளமிட்டு இங்கு பதிந்து பதில் எழுதுகிறோம்.நாம் ஏற்கனவே சொன்னதுபோல் எந்த ஒரு தனிநபரின் விவாத அழைப்புகளுக்கும் சான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. TNTJ வினருக்கு தைரியம் இருந்தால் சகோ. ஜெய்சங்கரை தங்களின் அதிகாரப்பூர்வ பேச்சாளராக அறிவித்து பைபிள்,குர்ஆன்,மற்றும் ஹதீஸ்களை குறித்து நம்முடன் விவாதம் செய்ய அனுப்பட்டும்.நாம் தயாராகவே இருக்கிறோம்.

நண்பர்களே மேலே TNTJ ஜெய்சங்கர் அவர்கள் எழுதிய விசயத்தில் அவருக்கு மீண்டும் ஒரு தடுமாற்றம் உண்டாகிவிட்டதை நாம் உணரலாம். நாம் வெளியிட்ட விடியோவை இவர்கள் சுய நினைவோடு பார்த்தார்களா இல்லையா என்பதே இப்பொழுது நமக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.நாம் அந்த வீடியோவில் தெளிவாக சொல்லிய விசயத்தை மீண்டும் எழுதி யாரையோ இவர்கள் முட்டாள்கள் ஆக்கப்பார்க்கிறார்கள் என்பது தெரிகிறது.எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சான் அமைப்பு செய்யாத ஒரு விசயத்தை வைத்து அவர்கள் நாடகமாடுகிறார்கள் என்று தெரியவில்லை.எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சான் குழுவினர் விமர்சனம் செய்யாத ஒரு விசயத்தை அவர்கள் நம்மை நோக்கி வைக்கின்றனர். அதை குறித்த விளக்கத்தையும் நாம் அவர்களுக்கு அந்த வீடியோவில் நாம் தெளிவாக சொல்லிய பிறகும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல மீண்டும் பழைய புராணத்தை பாடிக்கொண்டு இருக்கின்றனர்.மீண்டும் நாம் சொல்லிக்கொள்ளுவது என்னவென்றால் அந்த விமர்சனம் செய்ததும் நாம் இல்லை.தமிழ்கிறிஸ்டியன்ஸ் தளமும் சாக்ஷியின் அதிகாரப்பூர்வமான இணையதளமல்ல.அங்கு எல்லா கிறிஸ்தவர்களும் எழுத முடியும்.கிறிஸ்தவர்கள் மட்டும் இல்லை முஸ்லீம்களும் எழுதுதக்கூடிய இணைய குழுமமாக இருக்கிறது என்பதை நாம் தெளிவாக விளக்கியுள்ளோம்.

சரியான நகைச்சுவை உணர்வோடு எழுதப்பட்டுள்ள இந்த கடிதவரிகளை பார்த்து வாய்விட்டு சிரிப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.எந்த அளவுக்கு என்றால் பூனை கண்ணை மூடிவிட்டால் உலகம் இருண்டுவிடும் என்று நினைப்பது போல வேடிக்கையான விசயத்தை அரங்கேற்றுகிறார்கள். ஏற்கனவே எத்தனை விவாத தலைப்பு என்று தெரியாமல் ஆளாலுக்கு உளரிக்கொட்டியதை நாம் ஏற்கனவே நிரூபித்துள்ளோம்.அதனால் மிக ஜாக்கிரதையாக பல தலைப்புகள் என்று போட்டுள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.ஆனால் அதிலும் நாம் ஓடிவிட்டோம் என்று சொல்லி மீண்டும் ஒரு காமடியை சொல்லியுள்ளார்கள்.கீழே நம் விவாதத்துக்கு பிறகு அவர்கள் இணையதளத்தில் கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர்கள் வெளியிட்ட பதிலை கீழே தருகிறோம்.

இன்றைய கேள்விகள்
கேள்வி மற்றும் பதில்
கேள்விமேலும் வேறு என்ன தலைப்புகளில் SAAN னுடன் விவாதம் நடைபெறவுள்ளது?
PJ அவர்களின் பதில்

கிறித்தவர்களுடன் என்னென்னதலைப்பில் விவாதிக்க வேண்டும் என்பது குறித்து ஒப்பந்தத்தில் தெளிவாகக்கூறப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தை முழுமையாக வாசிக்க

http://www.onlinepj.com/PDF/Oppattam-Tamil.pdf

இதில்பல தலைப்புகள் ஜோடி ஜோடியானவை. அதாவது பைபிள் இறைவேதமா என்ற தலைப்பில் நாம் பைபிளைவிமர்சிப்போம். அது போல் அடுத்த தலைப்பாக குர் ஆன் இறைவேதமா என்ற தலைப்பில்அவர்கள் விமர்சிப்பார்கள். இப்படி ஜோடி ஜோடியாக விவாதம் நடக்க வேண்டும்.

ஆனால் பைபிள்பற்றிய விவாதம் முடிந்த பின் குர் ஆன் தலைப்பு அவர்களைப் பொருத்தவரை முக்கியமானதாகஇருந்தும் லைவ் பண்ணக் கூடாது என்று காரணம் கூறி பின் வாங்கி விட்டனர். அவர்கள்எப்போது பின்வாங்கினார்களோ அப்போதே ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது. ஆனாலும்அவர்கள்  குர்ஆனுக்கு எதிராக்க்கேட்கப்படும் கேள்விகளை எதிர் கொள்ள நமக்கு துணிவு இல்லாத்தால் லைவ் பண்ண வேண்டும்என்று நாம் கூறி நாம் விவாத்த்தில் இருந்து பின்வாங்குவது போல் சித்தரித்தனர்.குர் ஆனைப் பற்றிய கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை என்ற தோற்றத்தை அவர்கள்ஏற்படுத்தியதால் அவர்களுக்காக பல வகையில் நாம் கீழிறங்கி அவர்களின் நிபந்தனைகளைஏற்றுக் கொண்டு குர் ஆன் குறித்த விவாதத்துக்கு முன் வந்தோம்.

பைபிள்குறித்து நாம் கேள்வி கேட்ட போது அவர்கள் திணறியது போல் குர் ஆனைக் குறித்துஅவர்கள் கேட்கும் போது நாம் திணருவோம் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்அல்லாஹ்வின் அருளால் முதல் தலைப்பை விட இர்ண்டாம் தலைப்பில் இன்னும் உறுதியானவெற்றியை அல்லாஹ் அளித்தான். அதன் பின்னர் ஒப்பந்தம் பற்றி அவர்களும் பேசவில்லை.நாமும் பேசவில்லை. இவ்விரண்டு தலைப்புகளுக்குள் எல்லாமே தெளிவாகி விட்டதால் முறியடிக்கவேண்டிய அளவுக்கு அவர்கள் முறியடிக்கப்பட்டு விட்டனர்.

அவர்கள்தரப்பில் மற்ற தலைப்புகள் குறித்து பேசினால் இப்போது விட்டுக் கொடுத்தது போல்விட்டுக் கொடுத்து  அந்த தலைப்புகளையும்இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்.  அவர்கள் ஆர்வம்காட்டாவிட்டால் நாமும் விட்டு விடுவோம்

http://jesusinvites.com/QandA/Question.aspx?q=7s4xJ4qknmo=

நண்பர்களே மேலே மவ்லவி பிஜே அவர்கள் கொடுத்த பதிலில் நாம் ஓடியதாக எந்த ஒரு வரியும் இல்லை என்பதை உங்கள் முன் ஆதாரத்தோடு வைக்கிறோம்.அது மட்டும் இல்லை சான் குழுவினர் தலைப்பு குறித்து பேசினால்தான் நாங்கள் பேசுவோம் என்றும் இரண்டு விவாதத்திலே எல்லாம் தெளிவாகிவிட்டதாகவும் அவர் சொல்லியுள்ளதை மேலே காணலாம்.
இந்த பதிலுக்கு நாம் விவாத வீடியோ வெளியீட்டுவிழாவில் தெளிவாக பதில் அளித்து இருந்தோம்.அதுவும் நமது இணையதளம் மூலமாக வெளியிடப்பட்டு அவர்களையும் சென்றடைந்தது.

http://iemtindia.com/?p=404

இந்த வீடியோவை குறித்து அவர்களிடம் வைக்கப்பட்ட கேள்விக்கு மவ்லவி பிஜே அவர்கள் அளித்த பதிலை கீழே கொடுக்கிறோம்.

http://www.jesusinvites.com/QandA/Question.aspx?q=qmXlJxT+Rnw%3D

அன்பு நண்பர்களே மேலே உள்ள பதிலில் சான் அமைப்பை அவர்களே விவாதத்துக்கு அழைப்பதாக சொல்லி உள்ளதை காணலாம்.இவ்வளவு அப்பட்டமான உண்மைகளை கூட மறைத்து கீழ்தரமான விளம்பர உத்திகளை பயன்படுத்தி சான் ஓடிவிட்டது என்று மக்களை நம்பவைக்க முயற்சிப்பது எல்லோருக்கும் தெளிவாக தெரியும். பல மக்கள் உங்களுக்கு தலையாட்டிகளாக இருந்து நீங்கள் சொல்லுவது எல்லாம் சரி என்று வேத வாக்காக நம்புகிறதை பயன்படுத்தி நீங்கள் எவ்வளவு பெரிய பொய்யையும் உண்மையாக்க முயற்சிக்கும் நாடகம் எல்லாம் சான் அமைப்பிடம் செல்லுபடியாகாது என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

நண்பர்களே முதலில் சான் அமைப்பு குறித்து நீங்கள் வைத்த குற்றச்சட்டுகளுக்கு ஆதாரம் வெளியிடுங்கள்.அதிலேயே நீங்கள் தோல்வி அடைந்துவிட்டீர்கள் என்பது உங்கள் பதிலில் இருந்து தெளிவாக தெரிகிறது.சான் அமைப்பை பொருத்தவரை எந்த ஒரு தனிமனிதர்களுடனும் ஒப்பந்தம் போட்டு விவாதிப்பது இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிவித்து உள்ளோம்.எனவே இதுபோன்ற சிறுபிள்ளைத் தனமான நாடகங்களை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு TNTJ வினர் பயப்படாமல் சகோ.ஜெய்சங்கர் அவர்களை பைபிள்,குர்ஆன் ,ஹதீஸ் குறித்த விவாத பேச்சாளராக அறிவித்து சான் அமைப்புடன் விவாதிக்க தயார் என்று அறிவித்து மெயில் அனுப்பட்டும் .இல்லை என்றால் இதுபோன்ற நாடகங்களை மறுபடியும் அரங்கேற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகிறோம்.

Comments

  1. பாதிமா எஸ்தர் says

    August 17, 2013 at 10:54 PM

    பொய் பிரச்சாரங்கலுக்கலுக்கு பேர் போனவர்கல் நாகல்தான் என்பதை மீன்டும் மீன்டும் நிருபிக்கும் சாதனை மன்னர்கல் TNTJ என்பதை இசுலாமியர் இதனை வாசித்தால் புரிந்து கொல்வார்கல்.

    Reply
  2. Joseph Manohar says

    August 17, 2013 at 11:14 PM

    சகோ.ஜெய்சங்கர் பணம் பெற்றுகொண்டு இஸ்லாத்தை ஏற்றார் என்று நீங்களோ சான் குழுவினரோ எதாவது விமர்சித்தீர்களா?

    Reply
    • admin says

      September 16, 2013 at 7:26 PM

      இல்லை பிரதர் அதை நாம் தெளிவாக விளக்கியுள்ளோம்

      Reply
  3. J.A.PAUL VINCENT says

    August 20, 2013 at 1:32 PM

    எல்லாம் வல்லமையும் உள்ள என் தேவனாகிய இயேசுவை நான் மகிமைபடுத்துகிறேன்.இயேசு அன்றே உரைத்தார்,கண்டு விசுவாசிப்பவரை விட காணாமல் விசுவாசிபவர்கள் பாக்கியவான்கள்.வீட்டு எஜமானையே இப்படி சொல்லுவார்கள்யானால் உங்களையும் இப்படி சொல்லுவது அதிக நிச்சயம்யல்லவா.

    Reply
    • Dragon says

      August 27, 2014 at 12:24 AM

      What a pluraese to meet someone who thinks so clearly

      Reply
  4. Aruthal Devaraj says

    November 13, 2013 at 6:30 PM

    hi brothers, i dont know who is maitaining this website but it should be belongs to SAN. i realy proud tat you people r having debate with mulim people, but there are lot of things you need to change during the debate. TNTJ speak lies very loudly, our people r speaking the truth with low voice tat is the main difference. it is better not to go for debate with those kind of people but since they cal us for debate we should be bold enough to talk like them, there we no need to speak in low voice, we should speak like paul with an heavenly authority. i hope you would understood my point. this is not complaint, its a suggestion.

    thankx. may the spirit which was in jesus chirist an d worked through the paul when he attempts these kind of conversation be upon you. may god stenghthen you to reveal more about the kingdom truth.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2023 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network